சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்படியாச்சும் "அதை" வாங்கிடணும்... இதுக்காகத்தான் எடப்பாடியார் டெல்லி சென்றுள்ளாரா!?

முதல்வரின் டெல்லி பயணம் எதற்காக என்று உறுதியாக தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: இன்று அனைவரிடமும் எழுந்துள்ள ஒரே சந்தேகம், "முதல்வர் ஏன் இப்போது டெல்லிக்கு போயுள்ளார்.. என்னவா இருக்கும்?" என்பதுதான்!

Recommended Video

    சென்னை: டெல்லிக்கு புறப்பட்ட முதல்வர் எடப்பாடி.. பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு..!

    ஜெயலலிதா இருந்தவரை, முதல் ஆளாக கூட்டணியை முடிவு செய்துவிட்டு, தொகுதிகளையும் அவர்களுக்கு பிரித்து தந்துவிட்டு, பிரச்சாரத்திற்கும் கிளம்பி சென்றுவிடுவார்.. யாருக்காகவும், எதற்காகவும் அவர் காத்திருந்ததே கிடையாது.

    ஆனால், இந்தமுறை அதிமுக தரப்பில் பலவித குழப்பங்கள், தயக்கங்கள், கருத்து வேறுபாடுகள் எழுந்தபடியே உள்ளன.. கட்சிக்கு உள்ளும் பிரச்சனை, கட்சிக்கு வெளியே உள்ள கூட்டணிகளிலும் பிரச்சனை, எதிர்கட்சியை சமாளிப்பதும் பிரச்சனை என நாலாபக்கமும் இடியாப்ப சிக்கலில் தவித்து வருகிறது.

    ரஜினி

    ரஜினி

    இதில் தலையாய பிரச்சனை பாஜகவுடன்தான்.. முதல்வர் வேட்பாளரை அவர்கள் ஏற்கவே தயாராக இல்லை.. தினம் தினம் பேட்டி தந்து அதிமுக தலைமைக்கு கிலி தந்து கொண்டிருந்தார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் முதல்வர் டெல்லிக்கு சென்றுள்ளார்.. பாஜக தலைமைக்கு நெருக்கமான ஓபிஎஸ் இருக்கும்போது, முதல்வரின் இந்த பயணம் எதற்காக? அரசு முறை பயணம் என்றே எடுத்து கொண்டாலும் வேறு சில காரணங்களும் இருப்பதாக கருதப்படுகிறது.

    முடிவு

    முடிவு

    எப்போது ரஜினி ஜகா வாங்கிவிட்டாரோ அப்போதே பாஜகவும் ஆஃப் ஆகி விட்டது.. அதுவரை அவரைதான் முதல்வர் வேட்பாளராக மனதில் நினைத்திருந்ததோ என்னவோ தெரியவில்லை.. இதற்கு பிறகுதான் முதல்வர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் இருந்து பாஜக சற்று இறங்கி வந்துள்ளது.... இதற்கு பிறகுதான் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் சிடி ரவி, அதிமுக பெரிய கட்சி, அவர்கள்தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

     முதல்வர் வேட்பாளர்

    முதல்வர் வேட்பாளர்

    எப்போது சிடி ரவி சொன்னாரோ, அப்போதிருந்தே அதாவது இந்த ஒரு வார காலமாகவே யாரும் முதல்வர் வேட்பாளர் பிரச்சனையை எழுப்பவே இல்லை.. அதனால் முதல்வர் டெல்லி செல்ல இந்த காரணம் வலுவாக இருக்கிறது. அதேபோல, சீட் விவகாரம், தொகுதிகள் குறித்தும் பாஜக தரப்பு முதல்வர் தரப்பிடம் கோரிக்கை வைக்கலாம் என்கிறார்கள்.. இதைதவிர, வேறு சில உத்தரவாதங்களையும் டெல்லி மேலிடத்திடம் இருந்து முதல்வர் தரப்பு பெற்று வரக்கூடும் என்கிறார்கள்..

     அதிரடிகள்

    அதிரடிகள்

    இது எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜக தலைமையிடம் நெருக்கமாக உள்ள ஓபிஎஸ்-க்கு இது சற்று அதிருப்தியைகூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எப்படி பார்த்தாலும், பாஜகவின் நேரடி அதிருப்திக்கு ஆளாகி கொண்டிருந்த எடப்பாடியார், இன்று டெல்லி சென்றுள்ளது அதிமுகவில் உள்ள தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுக்கே கூடுதல் தெம்பை தந்து வருகிறது.. எடப்பாடியார் திரும்பி வந்தால்தான் பல அதிரடிகள் வெடித்து கிளம்பும் என தெரிகிறது!

    English summary
    Whats the reason behind in CMs Delhi travel
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X