சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயப்படாதீங்க.. அப்படில்லாம் உற்று பார்க்க மாட்டோம் பாஸ்.. வாட்ஸ்அப் விளக்கத்தை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: "யாரும் பயப்பட வேண்டாம்.. வாட்ஸ்அப் அப்படியெல்லாம் உங்கள் தனிப்பட்ட தகவலை திருடாது பாஸ்.." என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியது. இதன் பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு சேவைகள் புதிதாக கொண்டுவரப்படுகின்றன. வாட்ஸ்அப் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் மெசேஜ் வருகிறது. வாட்ஸ் அப் செயலியை திறந்ததுமே அந்த மெசேஜ் உங்கள் கண்ணில் படும்.

வாட்ஸ்அப் மெசேஜ் சொல்வது என்ன

வாட்ஸ்அப் மெசேஜ் சொல்வது என்ன

இதில், "WhatApp is updating its terms and privacy policy," என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். நீங்கள் பின்னர் ஓகேவைச் செய்கிறேன் என்று கூறியிருந்தாலும் பிப்ரவரி மாதம் 8ம் தேதிக்குள் இதை நீங்கள் செய்தாக வேண்டும். அவ்வாறு ஓகே கொடுக்காவிட்டால் உங்களால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

ரகசியம்

ரகசியம்

பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்களை ஷேர் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டுதான் இதுபோல ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது அந்த நிறுவனம். இதனால் தங்கள் தகவல் பேஸ்புக் மூலம் விளம்பர நிறுவனங்களுக்கு போய்விடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டது.

பிற ஆப்கள்

பிற ஆப்கள்

வாட்ஸ்அப்புக்கு பதிலாக, டெலிகிராம், அரட்டை, என பல்வேறு ஆப்களை நாட ஆரம்பித்தனர் மக்கள். இதனால் உலகம் முழுக்க வாட்ஸ்அப் தனது பயனாளிகளை இழக்கத் தொடங்கியது. இந்த நிலையில்தான், ஒரு விளக்கம் கொடுத்துள்ளது அந்த நிறுவனம்.

வாட்ஸ்அப் விளக்கம்

வாட்ஸ்அப் விளக்கம்

வாட்ஸ்அப் வெளியிட்ட விளக்கத்தில் 7 பாயிண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பாருங்கள்: வாட்ஸ்அப்பால் உங்கள் தனிப்பட்ட செய்திகளைக் காணவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது, மேலும் பேஸ்புக்கிற்கும் அது முடியாது. யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் அல்லது அழைக்கிறார்கள் என்பதற்கான பதிவுகளை வாட்ஸ்அப் வைத்திருக்கிறது.

லொகேஷன் பார்க்க முடியாது

லொகேஷன் பார்க்க முடியாது

உங்களால் பகிரப்பட்ட லொகேஷன் போன்ற விஷயங்களை வாட்ஸ்அப்பால் பார்க்க முடியாது, மேலும் பேஸ்புக்காலும் பார்க்க முடியாது. வாட்ஸ்அப் உங்கள் காண்டாக்ட்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளாது. வாட்ஸ்அப் குழுக்கள் தனிப்பட்டதாகவே உள்ளன. உங்கள் மெசேஜ்கள் மறைந்து போகும்படி செட்டிங்சில் நீங்கள் அமைக்கலாம். உங்கள் டேட்டாவை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் சந்தேகம்

வாடிக்கையாளர்கள் சந்தேகம்

அதேநேரம், "விளம்பரங்களுக்காக இந்த தரவை நாங்கள் பேஸ்புக்கோடு பகிரவில்லை. தனிப்பட்ட சாட்களுக்கு என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது. எனவே அவற்றின் உள்ளடக்கத்தை எங்களால் பார்க்க முடியாது." என்றும் கூறியுள்ளது வாட்ஸ்அப். ஆனால் நாம் வாட்ஸ்அப்பில் பேசக் கூடிய விஷயங்கள் வேறு ஒரு தளத்தில் அதுபோன்ற விளம்பரத்தை நமது கண்ணில் படும்படி காட்டுகிறதே அது ஏன்? அதாவது குறிப்பிட்ட ஒரு போன் மாடல் பற்றி சாட் செய்யும்போது, பேஸ்புக்கில் அந்த போன் விளம்பரம் உங்கள் கண்களில் படுவது எப்படி? என்பதே வாடிக்கையாளர்கள் சந்தேகமாக இருக்கிறது.

English summary
"Don't be doubt. WhatsApp will not steal your personal information," the company explained.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X