சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி சொன்னபடி உங்களுக்கு ரூ.15 லட்சம் வந்தாச்சு தெரியுமா? கணக்கு வேணும்னா இதை பாருங்க

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடிமக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதாகவும், அதை தரவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று வைரலாக சுற்றி வருகிறது. இது ஒரு கற்பனை உரையாடல்தாங்க. யார் மனதையும் புண்படுத்துவது நமது நோக்கம் இல்லை. அந்த மெசேஜை பாருங்கள்.

Whatsapp message goes viral, on Modis promise

நான்:
நீங்க ஆட்சிக்கு வந்ததும் எல்லோருக்கும் தரேன்னு சொன்ன 15,00,000 லட்சம் பணம் எப்போ தருவீங்க.?

மோடி:
அதுக்குத் தான் எல்லோருக்கும் ஜியோ சிம் கார்ட் கொடுத்தாச்சே.!!

நான்:
என்னாது ஜியோ சிம் கார்டா ???.... அதுக்கும் இந்த 15,00,000 லட்சத்துக்கும் "என்ன" சம்பந்தம்.?

மோடி:
சொல்லுறேன் நல்லா கேட்டுகோங்க...!!! எங்க ஆட்சி வர்றதுக்கு முன்னாடி, செல்போன்ல 1 ஜிபி டேட்டா எவ்வளவுக்கு வாங்குனீங்க ???

நான்:
300 ரூபாய்க்கு.

மோடி:
இப்போ எவ்ளோ ???

நான்:
5 ரூபா.

மோடி:
அப்போ 1 ஜிபிக்கு எவ்வளவு சேமிப்பு ?

நான்:
295 ரூபாய்.

மோடி:
ஒரு மாசத்துக்கு நீங்க 30 ஜிபி (ஒரு நாளைக்கு 1 ஜிபி கணக்கு) யூஸ் பண்ணுறீங்க. அப்படின்னா, ஒரு மாசத்துக்கு எவ்வளவு சேமிப்பு ?

நான்:
30 x 295 = 8850 ரூபாய்.

மோடி:
3 பேரு இன்டர்நெட் யூஸ் பண்ணுற ஒரு குடும்பத்துல, இதுனால மாசம் எவ்வளவு சேமிக்கிறீங்க ??

நான்:
8850 x 3 = 26550 ரூபாய்.

மோடி:
அப்போ ஒரு வருஷத்துக்கு எவ்ளோ ???

நான்:
26550 x 12 = 3,18,600 ரூபாய்.

மோடி:
அப்பிடினா எங்க ஆட்சி நடக்குற இந்த 5 வருஷத்துக்கு எவ்வளவு சேமிப்பு ?

நான்:
318600 x 5 = 15,93,000 ரூபாய்.

மோடி:
நான் கொடுத்தது போக மீதம் இருக்குற 93000 ரூபாய் "எப்போ" எனக்கு திருப்பி தருவீங்க ???

கொய்யால... இனி 15 லட்சம் பத்தி வாயை திறப்போமா?

இவ்வாறு சுற்றி வருகிறது அந்த வாட்ஸ்அப் மெசேஜ். கூட்டிக் கழிச்சி பார்த்தா கணக்கு சரியா வருதா?

English summary
Whatsapp message goes viral, on Modi's promise, on 15 Lahks depoist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X