சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாட்ஸ்அப் பயனர்களுக்கு செக்.. டேட்டாவை ஷேர் செய்ய வேண்டும்.. அல்லது பயன்படுத்த முடியாதாம்!

Google Oneindia Tamil News

சென்னை: வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை (privacy) மாற்றி அமைத்துள்ளது வாட்ஸ்அப். பயனாளிகளின் டேட்டா தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படும்.

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியது. இதன் பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு சேவைகள் புதிதாக கொண்டுவரப்படுகின்றன. வாட்ஸ்அப் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் மெசேஜ் வருகிறது. வாட்ஸ் அப் செயலியை திறந்ததுமே அந்த மெசேஜ் உங்கள் கண்ணில் படும்.

நாளை முதல் விநியோகம்... மிக விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்... ஹர்ஷ் வர்தன் நம்பிக்கைநாளை முதல் விநியோகம்... மிக விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்... ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை

வாட்ஸ்அப் மெசேஜ்

வாட்ஸ்அப் மெசேஜ்

இதில், "WhatApp is updating its terms and privacy policy," என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். நீங்கள் பின்னர் ஓகேதைச் செய்கிறேன் என்று கூறியிருந்தாலும் பிப்ரவரி மாதம் 8ம் தேதிக்குள் இதை நீங்கள் செய்தாக வேண்டும். அவ்வாறு ஓகே கொடுக்காவிட்டால் உங்களால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

ரகசிய காப்பு

ரகசிய காப்பு

அப்படி என்ன விஷயம் இதில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்களை ஷேர் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டுதான் இதுபோல ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது அந்த நிறுவனம். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அனுப்பப்படும் மெசேஜ்கள் பாதுகாப்பானவை. பிறரால் படிக்க முடியாத encrypted செய்யப்பட்டவை என்பது தான் வாட்ஸ் அப் செயலியில் தனித்துவமாக இருந்தது. ஆனால் இதில் சமரசம் செய்து கொண்டு உள்ளது அந்த நிறுவனம்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

இப்போதும்கூட என்கிரிப்டட் வடிவில்தான் வாட்ஸ்அப் தகவல்கள், அவர்களின் சர்வர்களில் சேமித்து வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு பயனாளர் எப்படி வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார், அவர் அதை கால் செய்வதற்கு பயன்படுத்துகிறாரா, மெசேஜ் செய்வதற்கு அதிகம் பயன்படுத்துகிறாரா, ஸ்டேட்டஸ் வைப்பதற்கு அதிகம் பயன்படுத்துகிறாரா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவு செய்து வைக்கப்படுகிறது.

 மூன்றாம் தரப்புக்கு ஷேரிங்காம்

மூன்றாம் தரப்புக்கு ஷேரிங்காம்

வாட்ஸ்அப்பின், மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களுக்கும் வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் அதன் நிறுவனங்களான மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் வெப்சைட் ஆகியவற்றுக்கு இப்படி தகவல் பரிமாற்றம் செய்யப்படும். இதன் மூலம் உங்களுக்கு சேவை மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ளது

ஏற்கனவே உள்ளது

அதேநேரம் இது அச்சப்படும் அளவுக்கு மோசமான மாற்றம் இல்லை என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இதில் இருக்கும் பல்வேறு தனியுரிமை கொள்கைகள் இப்போதும் தொடர்கின்றன. முன்பு மறைமுகமாக செய்ததை இப்போது அறிவித்துவிட்டு செய்யப்போகிறது வாட்ஸ்அப் என்கிறார்கள் தொழில்நுட்ப நிபுணர்கள்.

வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் தயக்கம்

வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் தயக்கம்

அதேநேரம் தனிமனித நடவடிக்கைகளை உளவு பார்த்து தேர்தல் உள்ளிட்ட நேரங்களில் அதை குறிப்பிட்ட தரப்புக்கு சாதகமாக மாற்றிக் கொடுப்பது பேஸ்புக் மீதான குற்றச்சாட்டு. இப்போது வாட்ஸ்அப் இது போல தனியுரிமை ரகசியங்களை பதிவு செய்யப்போவதாக கேட்கத் தொடங்கி உள்ளதால், பலரும் டெலிகிராம் உள்ளிட்ட வேறு மெசேஜ் செயலிகளை பயன்படுத்தப்போகிறோம் என்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

English summary
WhatsApp updates privacy policy, makes data-sharing with Facebook mandatory, here is the full detail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X