சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி? சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்

Google Oneindia Tamil News

சென்னை: ஜெஃப் பெசோஸ் பெயர் அவ்வப்போது செய்திகளில் அடிபடுகிறது. சவுதி மகுட இளவரசர் முகமது பின் சல்மான் பெயர் அடிபடுகிறது. ஏன்? காரணம், வாட்ஸ்அப். ​​இது உண்மையான, குற்றச்சாட்டா, பொய்யா என தெரியாது.

அதேநேரம், பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி, தீவிரமான பிரைவசி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை சந்தித்தபடி உள்ளன என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

இப்படி நடப்பது இதுவே முதல் முறை அல்ல. 1.6 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப்புக்கு உள்ளனர். அவர்களை, இது ஆபத்தில் சிக்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். உங்களையும் சேர்த்து. இதிலிருந்து தப்பிக்க, உங்கள் தொலைபேசியின், வாட்ஸ்அப் செட்டிங்சை நீங்கள் மாற்ற வேண்டும்.

மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பு உயர வாய்ப்பு உள்ளதா.. நெருக்கடியில் மத்திய அரசு!மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பு உயர வாய்ப்பு உள்ளதா.. நெருக்கடியில் மத்திய அரசு!

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

உங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் செயலியை, திறங்கள். Settings -> Account -> Two-Step Verification என வரிசையாக கிளிக் செய்யுங்கள். அதில் Enable என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். ஆறு இலக்க PINஐ உருவாக்க உங்களை கேட்கும். நீங்கள் எஸ்எம்எஸ் வழியாக ஆரம்பத்தில், பெறக்கூடிய சரிபார்ப்புக் குறியீட்டிலிருந்து இது வேறு பட்டதாகும். இந்த PIN ஐ அமைத்த பிறகு, நீங்கள் விருப்பமாக ஒரு இ-மெயில் முகவரியை உள்ளீடாக கொடுக்கலாம்.

இரண்டு படி

இரண்டு படி

ஒருவேளை ஆறு இலக்க PIN நம்பரை நீங்கள் மறந்துவிட்டால், இரண்டு-படி சரிபார்ப்பை மறுபடி சரி செய்ய லிங்க் ஒன்றை, இ-மெயிலுக்கு அனுப்ப WhatsAppஐ அனுமதிக்கும். இரண்டு-படி சரிபார்ப்பை முடக்குமாறு நீங்கள் கோரியுள்ளீர்கள் என்று வாட்ஸ்அப்பில் இருந்து ஒருவேளை பின்னர் இ-மெயில் வந்தால், உண்மையில் நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால், அந்த இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பின் நம்பர்

பின் நம்பர்

இது உங்கள் கணக்கை ஹேக் செய்ய முயற்சிக்கும் ஒருவரின் வேலையாக இருக்க கூடும். இந்த PIN எண் என்பது, முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் இரண்டு-படி சரிபார்ப்பு இயக்கப்பட்டிருந்தால், வாட்ஸ்அப்பைப் கடைசியாகப் பயன்படுத்திய 7 நாட்களுக்கு பிறகு, வாட்ஸ்அப்பை மறுபடி பயன்படுத்த முயன்றால், இந்த PIN இல்லாமல் மறுபரிசீலனை செய்ய உங்கள் எண் அனுமதிக்கப்படாது என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

இ-மெயில்

இ-மெயில்

அதனால்தான் இரண்டு-படி சரிபார்ப்புக்கு மின்னஞ்சல் முகவரியை வழங்குவது முக்கியம். ஒருவேளை 7 நாட்களுக்குப் பிறகு, சரிபார்ப்பு PIN மறந்துவிட்டாலும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் பென்டிங் மெசேஜ்கள் அனைத்தையும் நீங்கள் இழப்பீர்கள், என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டு ஸ்டெப் வெரிபிகேஷன் என்பதை அனைவரும் பயன்படுத்துங்கள். இது ஹேக்கர்களிடமிருந்து உங்களை காப்பாற்றும். என்ன போனை கையில் எடுத்தாச்சா?

English summary
Jeff Bezos is in the news. Saudi Crown Prince Mohammed Bin Salman is in the news. Why? Because, WhatsApp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X