சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமமுகவில் எப்போ சேர போறீங்க? கேள்வி கேட்டதும்.. அப்படியே முகத்தை திருப்பி.. சசிகலா சொன்ன பரபர பதில்

Google Oneindia Tamil News

சென்னை: அமமுகவில் எப்போ சேர போறீங்க என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சசிகலா தனது வடமாவட்ட பயணத்தின் போது பதில் அளித்தார்.

குறுக்க இங்க கவுசிக் வந்தா.. என்று காமெடியில் வருவது போலத்தான் அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி - ஓபிஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் குறுக்கே புகுந்து சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

முன்பு தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.. தற்போது வடமாவட்டங்களுக்கு ஒரு டிரிப் மேற்கொண்டுள்ளார். இது அவரின் 4வது சுற்றுப்பயணம்.

யார் துரோகி? இந்தாங்க இத பாருங்க.. நேரம் பார்த்து மேட்டரை இறக்கிய ஓபிஸ் தரப்பு- ஷாக் ஆன ஈபிஎஸ் டீம்! யார் துரோகி? இந்தாங்க இத பாருங்க.. நேரம் பார்த்து மேட்டரை இறக்கிய ஓபிஸ் தரப்பு- ஷாக் ஆன ஈபிஎஸ் டீம்!

 4வது சுற்றுப்பயணம்

4வது சுற்றுப்பயணம்

முதலில் ஆன்மீக சுற்றுப்பயணம்.. பின்னர் அரசியல் சுற்றுப்பயணம்.. இப்போது அது புரட்சிப்பயணம் என்று மாறி உள்ளது. என்னதான் பெயர் மாற்றப்பட்டாலும்.. கேஜிஎப்பும் - புஷ்பாவும் ஒன்றுதான் என்பது போல.. இவரின் பயணங்களுக்கு இடையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இவரின் எந்த பயணத்திற்கும் பெரிதாக அதிமுக நிர்வாகிகள் ஆதரவும் இல்லை. என்ன முன்பை விட இப்போது கொஞ்சம் கூட்டம் அதிகமாக உள்ளது.

நேற்று

நேற்று

நேற்று இந்த பயணத்தின் ஒரு கட்டமாக திண்டிவனத்திற்கு சசிகலா சென்றார். அங்கு ஒரு சில அதிமுக அடிமட்ட தொண்டர்களை சந்தித்தார். அதன்பின் அமமுக நிர்வாகிகளை சந்தித்தார். மற்றபடி பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, கோடநாடு வழக்கில் விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

எடப்பாடி

எடப்பாடி

அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது. ஆனால் சசிகலாவோ இந்த பொதுக்குழு சட்ட விரோதமானது என்று நேற்று குறிப்பிட்டார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு சட்ட விரோதமாக நடக்கிறது. தொண்டர்கள் இதை எதிர்க்கிறார்கள். தொண்டர்கள் எதிர்ப்பை மீறி பொதுக்குழு நடக்கிறது. அதிமுக ஒன்றும் ஒருவரின் சொத்து கிடையாது. ஒருவரின் தனி வீடு கிடையாது என்று சசிகலா குறிப்பிட்டார்.

Recommended Video

    ADMK General Meeting | உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய வைத்திலிங்கம், புகழேந்தி - வீடியோ
    செய்தியாளர் கேள்வி

    செய்தியாளர் கேள்வி

    இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர் ஒருவர்.. எப்போ மேடம் அமமுகவில் சேர போறீங்க என்று கேட்டார். இதற்கு சட்டென அதிர்ச்சியாக ரியாக்சன் கொடுத்த சசிகலா அங்கும் இங்கும் முகத்தை திருப்பினார். ஒரு நிமிடம் யோசித்து.. சுதாரித்தபடி பதில் அளித்த அவர்.. நான் அதிமுகவின் பொதுச்செயலாளர். நான் ஏன் அமமுகவில் சேர வேண்டும்? என்று கேட்டு செய்தியாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்தான் சசிகலா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    English summary
    When are you going to join the AMMK party? Sasikala answers to a strong question. அமமுகவில் எப்போ சேர போறீங்க என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சசிகலா தனது வடமாவட்ட பயணத்தின் போது பதில் அளித்தார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X