சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது.. நகராட்சி தலைவர்கள் தேர்வு எப்படி? அமைச்சர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் நேரடியாகவும், இருக்கலாம், மறைமுகமாகவும் இருக்கலாம். அதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக உருவான மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பிரித்த பின்னரே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டதால் கடந்த 2019ம் ஆண்டு இந்த மாவட்டங்களுக்கு நடைபெறவில்லை. ஆனால் அதன்பிறகு கொரோனா வந்ததன் காரணமாக தேர்தல் நடைபெறவே இல்லை.

மசாஜ் சென்டர்களில் திடீர் விபசாரம்.. 9 பேர் கைதில் திடீர் திருப்பம்.. பரபரக்கும் புதுவை! மசாஜ் சென்டர்களில் திடீர் விபசாரம்.. 9 பேர் கைதில் திடீர் திருப்பம்.. பரபரக்கும் புதுவை!

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

பெரிய வெற்றி

பெரிய வெற்றி

இந்தத் தேர்தலில் வெற்றியை ஆளும் திமுக கூட்டணி 93 சதவிகித பெற்றது. காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் படுதோல்வியை சந்தித்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்றை கூட கைப்பற்றவில்லை. அ.தி.மு.க அணியில் இருந்து விலகிய பா.ம.கவுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

உள்ளாட்சியில் முறைகேடு

உள்ளாட்சியில் முறைகேடு

இதனிடையே திமுக கூட்டணி இந்த வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என தி.மு.கவினர் கொண்டாடி வருகின்றனர். உள்ளாட்சியில் முறைகேடுகளை அரங்கேற்றியே தி.மு.க வெற்றி பெற்றது என அ.தி.மு.க நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருகிறது.

திமுக இறங்கி உள்ளது

திமுக இறங்கி உள்ளது

இதனிடைடையே இதன் அடுத்தகட்டமாக, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தி.மு.க இறங்கி உள்ளது. தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி வரக் கூடிய நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஆகும்.

நகராட்சிகள் தரம்

நகராட்சிகள் தரம்

திருச்சியில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. இதற்காக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையம் சொல்லக் கூடிய தேதியில் தேர்தல் நடைபெறும்" என்று கூறினார்.

மறைமுக தேர்தல்

மறைமுக தேர்தல்

இந்த நிலையில் இது பற்றி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறும் போது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் நேரடியாகவும், இருக்கலாம், மறைமுகமாகவும் இருக்கலாம். அதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றார்.

வெற்றி எப்படி

வெற்றி எப்படி

இதனிடையே அரசியல் விமர்சகர்கள் இதுபற்றி கூறும் போது, தற்போது உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெறும். அதுவே, தேர்தல் சற்று தள்ளிப் போனாலோ, தி.மு.க மீது குற்றச்சாட்டுகள் கிளம்பினாலோ ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவானால் தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு பாதகமானதாக மாறலாம். தற்போதைய நிலையே தொடருமானால் தி.மு.க வெற்றி பெறும் என்கிறார்கள்.

English summary
minister periyakaruppan said that Urban local government elections in Tamil Nadu will be held soon. Elections for the heads of corporations, municipalities and boroughs can be direct, indirect or indirect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X