• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"திக் திக்" அதிமுக.. ஒருவேளை சசிகலா ரிலீஸ் ஆவது டிலே ஆச்சுன்னா.. வெளியானது "புது தகவல்"!

|

சென்னை: நாளுக்கு நாள் நடந்து வரும் திருப்பங்கள், எதிர்பாரா சூழல்களுக்கு நடுவில் சசிகலா திட்டமிட்டபடி ஜெயிலில் இருந்து விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு கூடிவருகிறது.

சசிகலாவுக்கு தண்டனை காலம் முடிந்துவிட்ட பின்னரும், ரிலீஸ் ஆவதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தன.. பல்வேறு காரணங்களை காட்டி அவரது விடுதலை தள்ளி போய்க் கொண்டே இருப்பதாகவும் கூறப்பட்டது.. இறுதியில் ஒருவழியாக விடுதலை தேதி வரும் 27 என்று முடிவானது..!

அதனால் சட்டசிக்கல்கள், சிறை ரீதியான விதிமுறைகள் இனி எதுவும் இருக்காது என்றும், எதிர்பார்த்தபடியே இந்த 27-ம் தேதி சசிகலா வந்துவிடுவார் என்றும் நம்பப்பட்டது.. அதனால்தான் அதிமுக, அமமுக, பாஜக, என 3 கட்சிகளுமே பரபரத்து காணப்படுகின்றன.. மீடியாக்களில் சசிகலா பற்றின செய்திகளே கடந்த 4 நாட்களாக ஆக்கிரமித்தும் வருகின்றன.

 கொரோனா

கொரோனா

இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.. அவருக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை.. நிறைய உடல் உபாதைகள் உள்ளன.. மருந்துகளும் எடுத்து கொண்டுள்ளனர்.. இப்போது கொரோனாவும் பாதிக்கப்பட்டுள்ளால், தீவிரமான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.. டாக்டர்களும் அவரது உடல்நிலையை எந்நேரமும் கண்காணித்தபடியே உள்ளனர்.

 எடப்பாடியார்

எடப்பாடியார்

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வந்தபோதே எடப்பாடியார் தரப்பு டென்ஷன் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது.. அதனாலேயே, விடுதலை நாளில் ஜெ.மணிமண்டபம் திறக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.. சசிகலா மீது மீடியாக்கள் கவனம் எதுவும் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அன்றைய நாள் முழுவதும் தனக்கான முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த 27-ம் தேதியை தேர்ந்தெடுத்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

 சிறைவிதி

சிறைவிதி

இப்போது தொற்று உறுதியாகிவிடவும், சசிகலா விடுதலை தள்ளிபோகுமா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுந்து வருகிறது... ஆனால், சிறை விதி என்று ஒன்று உள்ளது.. அதன்படி, சசிகலா மட்டுமல்ல, எந்த கைதியாக இருந்தாலும் சரி, விடுதலையாவதற்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டால் அதில் மாற்றம் கிடையாதாம்.. அந்த குறித்த நாளிலிருந்து, ஒரு நாள் கூட அவர்களை கூடுதலாக ஜெயிலுக்குள் வைத்துக்கொள்ள முடியாதாம்.. இப்படி ஒரு விதி சிறைத்துறையில் இருக்கிறது..

 சிறைத்துறை

சிறைத்துறை

அதனால், ஜனவரி 27-ம் தேதி, ஆஸ்பத்திரியில் சசிகலா சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போதே, அவரை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்ற ஒரு தகவல் சிறைத்துறை வட்டாரங்களில் இருந்து கசிந்து வருகிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், சசிகலா விடுதலைக்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு, ஆஸ்பத்திரியிலேயே அவரிடம் கையெழுத்து பெறப்படும்.

நடவடிக்கை

நடவடிக்கை

அப்போதே அவருடைய பொருட்கள் அனைத்தும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுவிடும்.. அதேபோல அவருக்கு அதுவரை தரப்படும் போலீஸ் பாதுகாப்பும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என்கிறார்கள். விடுதலை அடைந்ததும், அதே ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சையை தொடரலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த சிறைவிதிகளின்படி, அவரை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறைத்துறை அதிகாரிகள் எடுப்பார்கள் என்றும் தெரிகிறது... ஆகவே, 27-ம் தேதியே சசிகலா விடுதலை அடைய வாய்ப்புள்ளதாம்..!

 
 
 
English summary
When will Sasikala be released from Bengaluru Jail
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X