சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளாவுக்கு பாஜக தலைவர்கள் இன்று நியமனம்.. தமிழகத்திற்கு எப்போது?

Google Oneindia Tamil News

சென்னை: மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளாவுக்கு பாஜக மாநில தலைவர்கள் இன்று நியமிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்கு பாஜக தலைவர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது.

இதனிடையே செப்டம்பர் மாதம் அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

சிஏஏவுக்கு எதிரான போராட்டம்.. சென்னை வண்ணாரப்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடல்சிஏஏவுக்கு எதிரான போராட்டம்.. சென்னை வண்ணாரப்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடல்

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

அன்று முதல் பாஜகவுக்கு இதுவரை தலைவரே நியமிக்கப்படவில்லை. அந்த பதவிக்கு எச் ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், கேடி ராகவன், பொன் ராதாகிருஷ்ணன், குப்புராமு உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர். அது போல் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பாவுக்கு அப்பதவி கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

முதல் வாரத்தில்

முதல் வாரத்தில்

டெல்லியில் தமாகா தலைவர் ஜிகே வாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதனால் தனது தமாகாவை பாஜகவுடன் இணைத்துவிட்டு தமிழக பாஜக தலைவராகிறார் வாசன் என செய்திகள் வெளியாகின. தமிழகத்தின் பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்ற கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற்றது.

தலைவர் நியமனம்

தலைவர் நியமனம்

இந்த கூட்டத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புராமுவை தேர்வு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை யாரும் அப்பதவிக்கு நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா நியமிக்கப்பட்டார். இதையடுத்து விரைவில் தமிழகத்திற்கு தலைவர் நியமிக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

சிக்கிம்

சிக்கிம்

இந்த நிலையில் மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு தலைவர்களை இன்று நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் தமிழகத்திற்கு பாஜக தலைவர் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த ஆண்டு தலைவர் நியமிக்கப்பட்டால்தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே தமிழகத்திற்கு பாஜக தலைவர் இன்றோ அல்லது நாளையோ நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

English summary
When will Tamilnadu BJP President be appointed as the state is going to face Assembly elections next year?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X