• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஜெ., வளர்ப்பு மகனாகி வழக்குகளில் சிக்கிய சுதாகரன் - ரூ.10 கோடி அபராதம் கட்ட பணமில்லையாம்

|

சென்னை: சுக்கிரதிசை நடந்த காலத்தில் செல்வந்தராக வலம் வருவதும், திசை சரியில்லாமல் போனால் செல்வங்களை இழந்து வறுமையில் வாடுவதும் இயல்புதான். சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி சுதாகரன் ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக வலம் வந்தவர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் வாடும் டிடிவி சுதாகரன் இப்போது 10 கோடி ரூபாய் அபராதம் கட்ட பணம் இல்லாமல் தவித்து வருகிறாராம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குப் போன சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி விட்டார். இளவரசியும் விரையில் விடுதலையாக உள்ள நிலையில் டிடிவி சுதாகரன் விடுதலையாவது எப்போது என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

டிடிவி சுதாகரனால் ஆதாயம் பெற்ற யாரும் இன்றைக்கு அவருக்கு உதவ முன்வரவில்லை என்பதுதான் சோகம். ரூ. 10 கோடி அபராதம் கட்ட பணம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. டிடிவி சுதாகரன் அபராதப்பணம் கட்டாவிட்டால் இன்னும் ஓர் ஆண்டுக்கு சிறையில் தண்டனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம்.

சசிகலாவின் உறவினர்கள் திவாகரன் மற்றும் சகோதர, சகோதரிகளான சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி டிடிவி தினகரன் டி.டி.வி. என அ.தி.மு.கவினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன்.

போயஸ் தோட்டத்து செல்லப்பிள்ளை

போயஸ் தோட்டத்து செல்லப்பிள்ளை

சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன் டிடிவி தினகரன். சசிகலா மூலமாக கார்டனுக்குள் நுழைந்து, ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக வலம் வந்தார். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் இரண்டாவது மகன் பாஸ்கரன். அரசியலில் ஆர்வம் இல்லாத காரணத்தால், ஆரம்பத்தில் இருந்தே போயஸ் கார்டன் பக்கம் நெருங்கியது இல்லை.

ஜெயலலிதா தொடங்கிய ஜெ.ஜெ. டி.வியின் நிர்வாக இயக்குனராக வேலை செய்தார்.

ஆடம்பர திருமணம்

ஆடம்பர திருமணம்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரன். தன் அக்காள் பிள்ளைகளில் சுதாகரன் மீதுதான் சசிகலாவுக்குக் கொள்ளைப் பிரியம். அந்தப் பிரியம்தான் வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்து எடுக்கக் காரணமாக அமைந்தது. இந்தியாவே வாய்பிளக்கும் அளவுக்கு ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமாக சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசன் பேத்தி சத்தியலட்சுமிக்கும் திருமணம் செய்துவைத்தார் ஜெயலலிதா.

சின்ன எம்ஜிஆர் சுதாகரன்

சின்ன எம்ஜிஆர் சுதாகரன்

அந்த ஆடம்பர திருமணம்தான் கடந்த 1996 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா படு தோல்வியடையக் காரணமாகவே, சுதாகரனை விரட்டியடித்தார் ஜெயலலிதா. போயஸ்கார்டனில் இருந்து வெளியேறிய சுதாகரன் தி.மு.க. ஆட்சியில்'சின்ன எம்.ஜி.ஆர்.' என்று அடைமொழியை சூட்டிக்கொண்டு ஆடம்பரத்தோடு வலம் வந்தார்.

சுதாகரன் மீது பாய்ந்த வழக்குகள்

சுதாகரன் மீது பாய்ந்த வழக்குகள்

கடந்த 2001ஆம் ஆண்டில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததுமே சுதாகரனின் தியாகராயநகர் வீட்டிலும் அபிராமபுரத்தில் உள்ள அலுவலத்தில் அதிரடியாக நுழைந்த போலீஸ் 88 கிராம் ஹெராயினைப் பறிமுதல் செய்து கைது செய்தது. கொலை மிரட்டல் வழக்கு துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும் வழக்கு கடுமையாக்கப்பட்டது.

விரட்டிய வழக்குகள்

விரட்டிய வழக்குகள்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 108 நாட்கள் சிறையில் இருந்தார் சுதாகரன். வழக்கு விசாரணை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. புலித்தோல் விவகாரம் அதன்பிறகு பெண் திரைப்படத் தயாரிப்பாளர் பிரியா நாயருடன் ஆபாசப் பேச்சு, புலித்தோல் விவகாரம் என்று பல்வேறு விஷயங்களில் சிக்கினர்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

ஜெயலலிதா அடுத்தடுத்து வழக்குகளைப் பாய்ச்சிய போதும், அவருக்கு எதிராக சுதாகரன் ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை. வழக்குகள், சிறை தண்டனைகள் என சுழற்றியடிக்கவே தனது பெயரை 'சுதாகர்', 'விவேக சுதாகர்' என்றெல்லாம் மாற்றிப் பார்த்தார் சுதாகரன் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போனது.

ரூ. 10 கோடி அபராதம்

ரூ. 10 கோடி அபராதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரனும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி விட்டார். நான்காண்டு சிறை தண்டனை முடிந்து விட்டது. அதனுடன் விதிக்கப்பட்ட ரூ. 10 கோடி அபராதத் தொகையையும் செலுத்தியதால் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகியிருக்கிறார்.

அபராதம் கட்டிய இளவரசி

அபராதம் கட்டிய இளவரசி

அவருடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் அபராதத் தொகையான ரூ. 10 கோடி செலுத்தப்பட்டு விட்டதால் அவரும் விரைவில் விடுதலையாகி விடுவார். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் டிடிவி சுதாகரன் விடுதலையாவது எப்போது என்றுதான் யாராலும் சொல்ல முடியவில்லை.

அபராதம் கட்ட வேண்டுமே

அபராதம் கட்ட வேண்டுமே

25 ஆண்டுகளுக்கு முன்பு பலகோடி ரூபாய் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்த சுதாகரன் இன்றைக்கு நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாயை கட்ட முடியாமல் சிரமப்படுகிறாராம். அவர் அபராதத் தொகையை கட்டினால் மட்டுமே விரைவில் விடுதலையாக முடியும். பணம் கட்ட முடியாவிட்டால் அதற்குப் பதிலாக ஓராண்டுகள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை எப்போது?

விடுதலை எப்போது?

உடன் பிறந்தவர்கள் யாரும் சுதாகரனுக்கு உதவ முன்வரவில்லை. திருமணம் செய்த சத்தியவதி வழியிலும் சுதாகரனுக்கு ரூ. 10 கோடி பணம் கொடுக்க இதுவரை முன்வரவில்லை. அன்று பல கோடிகளுக்கு அதிபதியாக வலம் வந்து ஆடம்பரமாக செலவு செய்து பணத்தை இழந்த டிடிவி சுதாகரனுக்கு இன்று அபராதத் தொகை ரூ. 10 கோடி கட்ட முடியாமல் போய் விட்டது என்பதுதான் சோகம்.

 
 
 
English summary
TTV Sudhakaran, who is lodged in a Bangalore jail after being convicted in an embezzlement case, is now facing a fine of Rs 10 crore. VK Sasikala has been released from jail from Today. No one can say when TTV Sudhakaran will be released as the Ilavarasai will be released soon.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X