சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சையில் ரஜினி சிக்கும்போது.. சரியாக விஜயை உள்ளே இழுத்து விடுறாங்களே.. இன்று என்னாச்சு பாருங்க

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் எப்போதெல்லாம் பிரச்சினையில் சிக்குகிறாரோ, அப்போதெல்லாம், விஜய் மீது லைட் திருப்பிவிடப்படுகிறதே, என்ற ஆதங்கம் அவர் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Recommended Video

    Rajinikanth Press Meet | Rajinikanth announces his political agenda

    பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் கடந்த மாதம், 5ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. மொத்தம் 20 இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அங்கிருந்தே காரில் தங்களுடன் விஜயை சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அனைவர் கவனமும் விஜயை வருமான வரித்துறை கையாண்ட விதத்தை நோக்கிச் சென்றது.

    மீன் சட்டியில் சர்க்கரை பொங்கல்.. விஜய் பாணியில் குட்டி கதை கூறிய ரஜினிகாந்த் மீன் சட்டியில் சர்க்கரை பொங்கல்.. விஜய் பாணியில் குட்டி கதை கூறிய ரஜினிகாந்த்

    அபராதம்

    அபராதம்

    அதேநேரம், ரஜினிகாந்த் ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்ததை, மக்கள் மறக்க இது வசதியாக போனது. ஆம். ரஜினிகாந்திடம் 2002-2005 வருடங்களில் வருமான வரித்துறை கெடுபிடி காட்டியிருந்தது. அப்போது ரஜினிகாந்த் செலுத்தாத வருமான வரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2002 முதல் 2005 வரை வாங்கிய சம்பளம் உள்ளிட்ட பிற வருமானத்திற்கு வரி கட்டவில்லை என்று ரஜினிக்கு எதிராக புகார் வைக்கப்பட்டது. இதற்காக அவருக்கு வருமானவரித்துறை சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது.

    வழக்கு வாபஸ்

    வழக்கு வாபஸ்

    அதன்படி 2002 - 05ம் ஆண்டில் 66 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் ரஜினி இதை செலுத்தவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் வாங்கியது. ரஜினிக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினிக்கு எதிரான இந்த வழக்கையும் திரும்ப பெறுகிறோம் என்று வருமான வரித்துறை தெரிவித்தது.

    விஜய் செய்திகள்

    விஜய் செய்திகள்

    இந்த நிகழ்வுக்கு முன்பாகத்தான், இந்திய முஸ்லீம்களுக்கு தேசிய குடியுரிமைச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று ரஜினிகாந்த் பேட்டியளித்திருந்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள், வருமான வரித்துறை வழக்கை வாபஸ் பெற்ற சர்ச்சையும் சேர்ந்து கொண்டது. எல்லாமே ரஜினிகாந்த் காலை சுற்றியது. அப்போதுதான், திடீரென விஜய், வருமான வரித்துறையால் லைம் லைட்டுக்குள் கொண்டுவரப்பட்டார். ஐடி ரெய்டு பிறகு, ரசிகர்களுடன் செல்ஃபி என வரிசையாக ஒரு வாரத்திற்கு விஜய்தான், மக்கள் மனங்களை நிரப்பினார். ரஜினி மறக்கடிக்கப்பட்டார்.

    இன்றும் விஜய்

    இன்றும் விஜய்

    இந்த நிலையில்தான், இன்றும் ஒரு பரபரப்பு. அதுவும், சரியாக ரஜினிகாந்த் இன்று காலை நிருபர்களை சந்தித்து பேசிய பிறகு, விஜய் வீட்டில் மறுபடியும் ஐடி ரெய்டு என செய்தி றெக்கை கட்டி பறந்தது. மீடியாக்கள் பிளாஸ் நியூசாக அதைக் காட்ட தொடங்கின. ஆனால் விசாரித்த பிறகுதான் தெரிந்தது, இது ஏற்கனவே நடத்தப்பட்ட ரெய்டின் ஃபாலோ அப் என்று. பழைய ஆவணங்களை சரி பார்க்கும் பணிதானாம். அது ஐடி ரெய்டு என கிளப்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இந்த மறு ஆய்வு எதற்காக இன்று நடந்தது என்ற கேள்வியும் எழுகிறது.

    யதேர்ச்சையானதா

    யதேர்ச்சையானதா

    ரஜினிகாந்த் கட்சி துவங்குவது பற்றி அறிவிப்பார் என்று நினைத்திருந்த ரசிகர்களும், தமிழக மக்களும், அவர் இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்டால்தான், அரசியலுக்கே வருவேன் என கூறி ஷாக் கொடுத்தார். இதனால், சமூக வலைத்தளங்களில், பயந்துட்டியா_கொமாரு போன்ற ஹேஷ்டேக்குகளை போட்டு நெட்டிசன்கள் ரஜினியை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான், விஜய் வீட்டில் ரெய்டு என செய்தி லீக்கானது. எப்போதெல்லாம் ரஜினி விமர்சனத்திற்கு உள்ளாகிறாரோ, அப்போதெல்லாம், விஜய் லைம்லைட்டுக்கு இழுக்கப்படுவது, யதேர்ச்சையானது என்றே நம்புவோமாக!

    English summary
    Whenever Rajinikanth is facing problems, actor Vijay bringing in to the lime light. The same startergy has reapeated today as well after Rajinikanth press meet got over. This time also Income Tax department is the reason for this issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X