சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிஏஏவுக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் நமது நன்றிக்குறியவர்.. ப சிதம்பரம் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஜெர்மனி மாணவர் நமது நன்றிக்கு உரியவர் என ப சிதம்பரம் பரபரப்பு டுவிட் பதிவினை வெளியிட்டுள்ளார்.

டிரெஸ்டன் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவரான ஜாகோப் லிண்டெந்தால் ஜூலை முதல் இந்தியாவில் தங்கியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறை மாணவராக படித்து வந்தார். அவரது எக்சேஞ்ச் திட்டம் 2020ம் ஆண்டு மே மாதத்தில் நிறைவடைவதாக இருந்தது.

இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜெர்மன் மாணவர் ஜாகோப் லிண்டெந்தால் பங்கேற்றார. இதையடுத்து குடிவரவு அதிகாரிகள் அவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு.. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. அமித் ஷா தேசிய மக்கள் தொகை பதிவேடு.. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. அமித் ஷா

ஜெர்மனி நினைவூட்டும்

ஜெர்மனி நினைவூட்டும்

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், உலக வரலாற்றில் ஜெர்மனி நமக்கு ஒரு இருண்ட அத்தியாயத்தை நினைவூட்டுகிறது என்றும் ஜெர்மனி நினைவூட்டும் இருண்ட அத்தியாயத்தை இந்தியாவில் மீண்டும் செய்யாதீர்கள் என்றும் வலியுறுத்தினார்.

ஜெர்மன் மாணவர்

அத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஜெர்மனி மாணவர் நமது நன்றிக்கு உரியவர் அவரை வெளியேற்றியது ஏன் என்று ஐ.ஐ.டி இயக்குனர் மற்றும் தலைவர் ஆகிய இருவரையும் கேட்போம்.என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

எதிர்க்கணும்

. ஐ.ஐ.டி.யின் மற்ற மாணவர்கள் எங்கே? ஜெர்மன் மாணவர் வெளியேற்றப்பட்டதற்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். என்றும் சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

கவலைப்படுகிறேன்

கவலைப்படுகிறேன்

முன்னதாக ஜெர்மன் மாணவர் ஜாகோப் லிண்டெந்தால் போராடிய குறித்து கூறுகையில், நான் மெட்ராஸ் ஐ.ஐ.டி கேம்பஸை நேசிக்கிறேன், நான் இந்தியாவை நேசிக்கிறேன், ஆனால் நாட்டில் சுதந்திரம் இல்லை என்பதை நினைத்து நான் கவலைப்படுகிறேன். ஜெர்மனியில், சட்டப்பூர்வமான இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக, யாரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.

English summary
p chidambaram on German student: : The German is reminding us of a dark chapter in the world's history so that we may not repeat that in India. The student deserves our gratitude. Where is the Director of IIT? Where is the Chairman? Let us hear from both of them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X