சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பச்சை சிக்னல்" வந்தாச்சாமே.. ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.. என்ட்ரி தரும் 2 தலைவர்கள்.. எடப்பாடி ரெடி?

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓபிஎஸ் புது பதவியை தர போகிறார் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? சசிகலாவின் வியூகம் என்ன? தினகரன் ரோல் என்ன? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் எகிறி வந்த நிலையில், ஓபிஎஸ் கூட்டப்போகும் பொதுக்குழு முக்கியத்துவத்தை இப்போதே ஏற்படுத்த துவங்கி உள்ளது.
அதிமுகவின் மாஜி அமைச்சரான இவர், சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சசிகலாவை கடந்த 31-ம் தேதி திடீரென சந்தித்து பேசினார்.

அதேபோல, அதிமுகவின் செயற்குழு கூடவிருக்கும் சூழலில், சில முக்கிய சந்திப்புகளை நடத்தி வரும் ஓபிஎஸ்ஸும், பண்ருட்டி ராமச்சந்திரனை மிக ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார்..

ஒசூர் அருகே அரசு பேருந்து மோதல்... தலைக்குப்புற கவிழ்ந்த கார்... உயிர்தப்பிய 6 பேர்! ஒசூர் அருகே அரசு பேருந்து மோதல்... தலைக்குப்புற கவிழ்ந்த கார்... உயிர்தப்பிய 6 பேர்!

பண்ருட்டி

பண்ருட்டி

அதிமுகவில் பொதுக்குழு விவகாரம் வெடிப்பதற்கு முன்பேயே, பண்ருட்டியை ஓடிச்சென்று சந்தித்து பேசியிருந்தார் ஓபிஎஸ்.. இந்த குறுகிய நாட்கள் இடைவெளியில், பண்ருட்டியை ஓபிஎஸ் ஏன் தேடி போய் பேசினார்? சிறையில் இருந்து வந்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகும் நிலையில், பண்ருட்டியை சசிகலா இப்போது ஏன் சந்தித்து பேசினார்? என்ற கேள்விகள் அதிமுகவையும் தாண்டி தமிழக அரசியலில் சலசலப்பை உண்டுபண்ணி கொண்டிருக்கிறது.

 பண்ருட்டி ராமச்சந்திரன்

பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுகவின் சட்டவிதிகளை கரைத்து குடித்தவர் பண்ருட்டி என்பதால், தற்போது கட்சியில் மீறப்பட்டுள்ள சட்டவிதிகள் குறித்து பண்ருட்டியிடம் சசிகலா பேசினாராம்.. அதேபோல, மீண்டும் கட்சிக்குள் இணைந்து செயல்படும்படியும், அரசியல் நடவடிக்கையை தொடர வேண்டும் என்றும், தங்கள் ஆலோசனைகள் கட்சிக்கு தேவைப்படுகிறது என்றும் ஓபிஎஸ் வெளிப்படையாகவே பண்ருட்டி ராமச்சந்திரடனிடம் கேட்டதாகவே சொல்கிறார்கள். இதற்கு பண்ருட்டி என்ன சொன்னார் என்ற தகவல் வெளியாகவில்லை.

 பச்சை கொடி

பச்சை கொடி

இந்நிலையில், புது தகவல் ஒன்று வட்டமடிக்க துவங்கி உள்ளது.. விரைவில், ஓபிஎஸ் போட்டி பொதுக்குழு நடத்த உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.. முக்கிய நபர்களுக்கு இதில் பொறுப்புக்களை தர உள்ள நிலையில், மாவட்டம் முதல் வட்ட அளவில், பொறுப்புகளை வழங்கவும் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது.. அந்தவகையில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் ஒரு முக்கிய பதவி தரப்போகிறாரா ஓபிஎஸ்.. ஏற்கனவே, புதிய அவை தலைவர் பதவியை பண்ருட்டிக்கு வழங்கலாமா என்று ஓபிஎஸ் தரப்பில் பிளான் செய்யப்படுவதாக கூறப்பட்டது.

 போட்டி பொதுக்குழு

போட்டி பொதுக்குழு

இப்போது அந்த பதவியைதான் அவருக்கு வழங்க போகிறதா என்று தெரியவில்லை.. ஆனால், ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்பட பண்ருட்டி ஓகே சொல்லிவிட்டாராம்.. அதேபோல, சசிகலா தலைமையின் கீழ் பணியாற்றவும் ஓபிஎஸ் ஓகே சொல்லிவிட்டாராம்.. அந்தவகையில், போட்டி பொதுக்குழு கூட்டத்தில், உச்சபட்ச பதவியை சசிகலாவுக்கு தந்துவிட்டு, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் கவுரவப்பதவி வழங்கவும் ஓபிஎஸ் தரப்பில் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 ஆதரவு பார்வை

ஆதரவு பார்வை

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை இந்த போட்டி பொதுக்குழு கூட்டம் அவருடைய அரசியலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. ஒருபக்கம் சட்ட ரீதியான முன்னெடுப்புகளை எடுத்து வந்தாலும், பாஜக மேலிட ஆதரவுப்பார்வை ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்துள்ளதும், அவரது அடுத்தக்கட்ட நகர்வுக்கு உந்துதலாகவே இருந்து வருகிறது.. இன்று பொதுக்குழு விசாரணை வழக்கு நீதிமன்றத்தில் வந்துள்ள நிலையில், 2 வார காலத்துக்குள் இதுகுறித்த தீர்ப்பும் அளிக்கப்பட உள்ளது.

 சிக்னல் தந்த சீனியர்கள்

சிக்னல் தந்த சீனியர்கள்

புதிய நீதிபதிதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் பிடிவாதமாக கேட்டுப் பெற்றுள்ளதால், வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக உத்தரவு வந்தால், ஓபிஎஸ்ஸுக்கு அது மேலும் தெம்பை கூட்டக்கூடும்... ஒருபக்கம் நீதிமன்றம், மறுபக்கம் இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கம் என இரு பக்கத்திலும் சாதகமான உத்தரவுகள் வந்தால், அப்போது நிச்சயம் சசிகலாவிடம் கட்சியை ஒப்படைக்கவும் ஓபிஎஸ் முன்வரக்கூடும் என்கிறார்கள்..!

English summary
Where is AIADMK going and Will ops give panrutti ramachanderan a new posting பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓபிஎஸ் புது பதவியை தர போகிறார் என்கிறார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X