சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நித்யானந்தா மர்மம்.. ஆசிரமத்தில் இல்லையாமே.. எங்கு போனார்.. என்னதான் நடக்கிறது!

நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Complaint against Nithyananda | ஜலகண்டேஸ்வரர் லிங்கத்தை கடத்தியதாக நித்தியானந்தா மீது புகார்

    சென்னை: உண்மையிலேயே நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், யூடியூப்பில் மட்டும் தரிசனங்கள் தவறாமல் நடப்பது என்பது குறித்து அனைவருமே குழம்பி போய் உள்ளனர்.

    நித்யானந்தா பற்றி செய்தி எதுவும் வரவில்லை என்றால்தான் அன்றைய தினம் ஆச்சரியமே.. மற்றபடி சர்ச்சைகள், புகார்கள் எதுவும் எழாவிட்டாலும், தானாக வான்டட்-ஆக வந்து வார்த்தைகளை அள்ளி வீசி வலையில் சிக்கி கொள்வார் நித்தியானந்தா!

    ஏகப்பட்ட புகார்கள் அடுத்தடுத்து வர, திடீரென ஒருநாள் இவர், பிடதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனார். இதற்கு பிறகு இவர் பேசிய பேச்சுக்கள் நம் மண்டையை பயங்கரமாக காய வைத்துவிடுகின்றன.

    மூல லிங்கம்

    மூல லிங்கம்

    மாடுகளை, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் என்னால் பேசவைக்க முடியும் என்று சவால் விட்டார். போன ஜென்மத்தில் மேட்டூர் ஜலகண்டேசுவரர் கோயிலை நான்தான் கட்டினேன், அந்த மூல லிங்கம் என்கிட்டதான் இருக்கு என்றார்! தன்னை கேட்டுத்தான் சூரியனே உதிக்கும் என்றார்!! தன்குருநாதர் ராம் சுரத்குமார் போல எந்த நடிகரும் ஸ்டைலாக புகைபிடிக்க முடியாது, அவர் புகைப்பிடித்தால் பக்கத்தில இருக்கும் நாய் புகைவிடும் என்று அளந்து கட்டி வருகிறார்.

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    இன்னொரு பக்கம், கனடா பெண் உட்பட 2 தினங்களுக்கு முன்புவரை இவர் மீது பரபரப்பு புகார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இவ்வளவு இருந்தும், யூ டியூப், ஃபேஸ்புக் மூலமாக வெளியிடும் வீடியோக்கள் மட்டும் குறையவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வருடமாக பக்தர்கள் யாருமே இவரை நேரில் பார்க்கவே இல்லையாம்.

    டொமினியன் குடியரசு

    டொமினியன் குடியரசு

    வெளிநாடுக்கு தப்பி இருக்கலாம் என்று சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வந்தன. ஆனால் அதையும் உறுதி செய்ய முடியவில்லை. வெனிசுலா நாட்டு போலி பாஸ் போர்ட்டை பெற்று, தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்றுவிட்டதாகவும், கரீபியத் தீவுகளுள் ஒன்றான 'டொமினியன் குடியரசு' நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அடுத்தடுத்த செய்திகள் கசிந்தன.

    டெக்னாலஜி

    டெக்னாலஜி

    ஆனால் அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. அநேகமாக அங்கிருந்துதான் யூடியூப்-களில் காட்சி தருகிறார்கள் என்பது ஒரு தரப்பு. இந்த தொழில் நுட்பம் பெயர் 'கிரீன்டெக்' என்கிறார்கள். அதன்மூலமாகதான் லைவ்-ஆக பக்தர்களிடம் பேச முடியுமாம்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    வாரத்துக்கு ஒருமுறை காலை, மாலை என ஃபேஸ்புக்கில் லைவ்-ஆக பேசுவதும் அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்துதானாம். இந்த விஷயம் ஓரளவு உண்மை என்பதால், அநேகமாக கர்நாடக போலீசார் இது சம்பந்தமான விரைவு நடவடிக்கையில் இறங்குவார்கள் என தெரிகிறது. ஆனால் எப்போதுமே நித்யானந்தாவை சுற்றி ஒரு மர்மவலை பின்னப்பட்டே இருக்கிறது என்பதும், அந்த வலையை நம் போலீசார் விரைவில் அறுத்தெறிவார்கள் என்றும் மிக பலமாகவே நம்பப்படுகிறது.

    English summary
    The Karnataka police are searching for Nithyanandha who is said to have sought asylum abroad
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X