சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் முடிஞ்சு போச்சு.. தேமுதிக போல் கிராக்கி காட்டி வரும் தங்கதமிழ்ச் செல்வன்

Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையிலான போன் உரையாடல் வைரல்

    சென்னை: எல்லாம் முடிஞ்சு போச்சு, தற்போது தங்கதமிழ்ச் செல்வன் கட்சி மாற வேண்டியது மட்டும்தான் பாக்கி. அவர் எந்த கட்சியில் இணைகிறார் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

    தங்கதமிழ்ச் செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே மோதல் என்னும் புகைச்சல் சிறிது நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில் இது நேற்றைய தினம் விஸ்வரூபம் எடுத்தது.

    அமமுக பிரமுகர் ஒருவரிடம் தங்கதமிழ்ச் செல்வன் செல்போனில் பேசிய பேச்சுகள் வெளியானது. அதில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதனால் கட்சியினரே அதிர்ந்து போயினர்.

    திமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்கதிமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்க

    ஓரளவு

    ஓரளவு

    இருவருக்கும் பனிப்போர் இருக்கும் போதே தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணைய போகிறார் என்ற கருத்து நிலவி வந்தது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி என பேசியிருந்தது மூலம் ஓரளவுக்கு உறுதிப்படுத்தலாம்.

    குழப்பம்

    குழப்பம்

    ஆனால் அதே வேளையில் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது குறித்து அக்கட்சியை பாராட்டும் விதத்திலும் அமமுகவை மட்டம் தட்டும் விதத்திலும் தங்கதமிழ்ச் செல்வன் பேசியுள்ளார். இதனால் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    எடப்பாடி

    எடப்பாடி

    அதாவது தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவுக்கு செல்கிறாரா, இல்லை திமுகவுக்கு செல்கிறாரா. அதிமுகவுக்கு சென்றால் தேனி மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோரை தாண்டி இவரால் வளர முடியாது. அது இவருக்கு எடப்பாடி கொடுக்கும் பொறுப்பை பொறுத்ததாகும்.

    திமுகவில் பொறுப்பு

    திமுகவில் பொறுப்பு

    ஏற்கெனவே ஓபிஎஸ்ஸின் கை ஓங்கியுள்ள நிலையில் அங்கு சென்றால் தனக்கு மரியாதை கிடைக்குமா என தங்கதமிழ்ச் செல்வன் யோசனை செய்து வருகிறார். அதே வேளையில் கட்சி மாறிய கொஞ்ச நாட்களிலேயே செந்தில் பாலாஜிக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுவிட்டது.

    பிரகாசம்

    பிரகாசம்

    அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றுவிட்டார். வரும் 2021-ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக அமோக இடங்களில் வெற்றி பெறும் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. எனவே திமுகவில் இணைந்தால் தனது அரசியல் வளர்ச்சி பெரும் பிரகாசமாக இருக்கும் என தங்கதமிழ்ச் செல்வன் கருதுகிறார்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    எனவே எந்தக் கட்சி தாவுவது என்பது தனக்கு அக்கட்சி அளிக்கும் பொறுப்பை பொறுத்தது என்றே தெரிகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை போல் தங்கதமிழ்ச் செல்வனும் திமுக, அதிமுக இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

    English summary
    Where is Thanga Tamil selvan going to join? He may have some issues in joining in ADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X