India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வீடியோ கால்".. ராத்திரி நேரத்தில் நித்யானந்தா ஆசிரமத்தில் ஒரே பரபரப்பு.. அந்த பெண்ணை காணாமாமே?

Google Oneindia Tamil News

சென்னை: நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த தன் மகளை காணோம், கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசுக்கு போயுள்ளனர் பரிதாப பெற்றோர்..!

இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் -- தொழில்நுட்பம் பெருகி வரும் காலகட்டத்தில் -- உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாரிடமும் எளிதாக அணுகலாம் என்ற சூழலில் -- உலகமே கைக்குள் அறிவியலாய் அடங்கிவிட்ட நிலையில் -- இன்னும் நித்யானந்தாவை மட்டும் கைது செய்ய முடியாத அதிசயம் நம் நாட்டில் மட்டுமே நடந்து வருகிறது.

கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகப் போச்சு! ரொம்ப கஷ்டமா இருக்கு! என்னாச்சு? சரத்குமார் வெளியிட்ட அறிக்கை..! கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகப் போச்சு! ரொம்ப கஷ்டமா இருக்கு! என்னாச்சு? சரத்குமார் வெளியிட்ட அறிக்கை..!

இவர் மீது ஏகப்பட்ட கேஸ்கள் பதிவாகி இருந்தும், கைலாசா என்ற ஒரு தீவில் இந்த சுவாமி வசித்து வருவதாக சொல்லப்படுகிறது..

கைலாசா

கைலாசா

அவரை தேடி கைது செய்வதற்குள், கைலாசாவை தனி நாடாகவே அறிவித்துவிட்டார்.. ஆனால், இன்னைக்கு வரைக்கும் அந்த கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.. உலக மேப்பில் இன்னும் நம் போலீசார் தேடி கொண்டே இருக்கிறார்கள். ஆனால், கைலாசாவில் இருந்து வீடியோ, ஆடியோ, போட்டோக்கள், உட்பட சுடசுட செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கிறது.. பல சமயம் லைவ் டெலிகாஸ்ட்களும் நடக்கின்றன..

நாகேஷ்

நாகேஷ்

இதற்கு நடுவில் நித்யானந்தாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதாகவும், அதற்கான பின்னணி காரணங்களும் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. இந்நிலையல், வழக்கம்போலவே, "ஆசிரமத்துக்கு போன என் பெண்ணை காணோம்" என்று ஒரு தகப்பன் கதறி அழ ஆரம்பித்துள்ளார்.. அவர் பெயர் நாகேஷ்.. பெங்களூர் பகுதியை சேர்ந்தவர்.. நித்யானந்தா பற்றி கேள்விப்பட்டு, ஆசிரமத்துக்கே குடும்பத்துடன் போய் ஐக்கியமாகிவிட்டார்..

 மகள்கள்

மகள்கள்

தன் மனைவி மற்றும் 2 மகள்களுடன் 2017-ம் ஆண்டு முதல் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், பல்வேறு சேவைகளை இந்த குடும்பம் செய்து வந்துள்ளது.. ஆனால், 2019-ல் நாகேஷ் அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆசிரமத்தில் இருந்து வெளியேறிவிட்டனராம்.. 2-வது மகள் மட்டும் ஆசிரமத்திலேயே தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி நாகேஷ் மட்டும் ஆசிரமம் சென்று மகளை பார்த்துவிட்டு வருவாராம்.. எனினும், இவரை கடந்த சில மாதங்களாகவே ஆசிரமத்துக்கு உள்ளே விடவில்லையாம்..

 வீடியோ கால்

வீடியோ கால்

மகளை பார்க்க வேண்டும் என்று சொன்னாலும் அனுமதிக்கவில்லையாம்.. வீடியோ காலில் மட்டுமே மகளை பார்த்துள்ளார்.. ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார். எனவே, பிடதி ஆசிரமத்தில் உள்ள மகளை மீட்டுத் தருமாறு கர்நாடக போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார். ஆனால் அதற்குள், நாகேஷின் மகளை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டதாக, நாகேஷுக்கு தகவல் கிடைத்துள்ளது.. அதனால், மறுபடியும் மகளை தேடி அலைந்துள்ளார்..

 நித்தி - நாகேஷ்

நித்தி - நாகேஷ்

அப்போதுதான், திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.. உடனே திருவண்ணாமலைக்கு சென்ற நாகேஷ், மகளை மீட்டுத்தருமாறு அங்குள்ள போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில், போலீசாரும், நாகேஷ், அவரது மனைவியை அழைத்து சென்று நேரில் சென்று சோதனை நடத்தினர். ஆனால், அங்கு அவரது மகள் இல்லை என்று தெரியவந்தது.. இப்போது அந்த மகள் எங்கே என்றும் தெரியவில்லை.. அதனால் மறுபடியும் தேட ஆரம்பித்துள்ளனர் அந்த பரிதாப பெற்றோர்..!

 திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆசிரமத்தை பொறுத்தவரை, பல நூறு ஏக்கர் பரப்பளவில் அந்த இடம் அமைந்திருக்கிறதாம்.. அந்த ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் மட்டுமே 20 அடி உயரமிருக்கும் என்கிறார்கள்.. நேற்றிரவு சோதனையின்போது, மீடியாவை உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.. திடீரென கண்ணீர் மல்க பெற்றோர் இரவு நேரத்தில் ஆசிரமத்திற்குள் நுழைந்த செய்தியால் அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.

 வலுக்கட்டாயம்

வலுக்கட்டாயம்

இதனிடையே இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. இவர்கள் குடும்பத்துடன், ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, ஆசிரம நடவடிக்கையில் அதிருப்தி அடைந்திருந்தார்களாம்.. அதனாலேயே இவர்கள் அங்கிருந்து வெளியேறி வந்திருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் கொரோனா பரவல் அதிகரித்துவிட்டதால், மகளை பார்க்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்கவில்லையாம்.. இதனால் 2 வருடங்களாகவே மகளை பார்க்காமல், குடும்பத்தினர் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதற்கு பிறகு மறுபடியும், ஆசிரமத்துக்கு சென்று மகளை சந்திக்க வேண்டும் என்றதற்கு, குடும்பத்தையே, வலுக்கட்டாயமாக ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினார்களாம் ஆசிரம நிர்வாகிகள்..

  இளம்பெண் கடத்தல் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமம்
  கைலாசா

  கைலாசா

  திருவண்ணாமலையில் தங்கள் மகள் இருப்பதாக அன்று சென்றபோதுகூட, ஆசிரம நிர்வாகிகள் இவர்களை முதலில் உள்ளே அனுமதிக்கவில்லையாம்.. அதற்கு பிறகுதான், போலீசுக்கு சென்று புகார் தந்து, போலீசார் உதவியுடன் ஆசிரமத்துக்குள் நுழைந்துள்ளனர் பெற்றோர்... கைலாச நாட்டிற்கு மகள் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது கடத்தப்பட்டு மறைத்து வைத்துள்ளார்களா? என்ற குழப்பத்தில் யாரிடமும் பேசாமல் ஸ்ரீ நாகேஷ் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மவுனமாக சென்றது கிரிவலம் பகுதியில் திரண்டிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

  English summary
  where is young daughter and father has complaint in thiruvannamalai police against nithyananda நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மகளை மீட்டு தர தந்தை புகார் தந்துள்ளார்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X