சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்றிரவு கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் மின்சாரம் நிறுத்தப்படும்? ராஜேஷ் லக்கானி தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: மாண்டஸ் புயல் சில மணி நேரத்தில் கரையைக் கடக்க உள்ள நிலையில், எங்கெல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த முக்கிய தகவல்களைத் தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பகிர்ந்து கொண்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஏற்கனவே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இந்தப் புயல் இப்போது சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கிமீ தூரத்தில் உள்ளது.

மாமல்லபுரத்தில் இருந்து 135 கிமீ தூரத்தில் இந்தப் புயல் இப்போது நிலை கொண்டுள்ளது. வங்கக் கடலில் உள்ள இந்தப் புயல் சுமார் 10 முதல் 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரம், இப்போ எங்கே இருக்குன்னு தெரிஞ்சிக்கனுமா.. இதோ சூப்பர் வசதி!மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரம், இப்போ எங்கே இருக்குன்னு தெரிஞ்சிக்கனுமா.. இதோ சூப்பர் வசதி!

 வானிலை மையம்

வானிலை மையம்

இந்த மாண்டஸ் புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு சுமார் அதிகபட்சமாக 75-85 கிமீ வரை காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 எப்போது கரையைக் கடக்கும்

எப்போது கரையைக் கடக்கும்

இன்று இரவு 10 மணிக்கு மேல் இந்தப் புயல் கரையை கடக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் நெருங்கும் நிலையில், கரையை ஒட்டியுள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.v

 கிழக்கு கடற்கரைச் சாலை

கிழக்கு கடற்கரைச் சாலை

மேலும், கனமழை காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் எந்தவொரு வாகனங்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு வாகனமாகச் சோதனை செய்யும் போலீசார், அப்பகுதியில் வீடுகள் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். புதுவையில் இருந்து சென்னை வரும் வாகனங்களை அனுமதிக்கவில்லை. அதேபோல ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போலச் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை‌சாலை வழியாகப் புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

 ராஜேஷ் லக்கானி

ராஜேஷ் லக்கானி

இதற்கிடையே புயல் கரையைக் கடக்கும் போது எங்கெல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த முக்கிய தகவல்களைத் தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த மாண்டஸ் புயல் இன்றிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று ராஜேஷ் லக்கானி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அனைத்து இடங்களிலும் மின்தடை இருக்காது என்று தெரிவித்த அவர், தேவையான பகுதிகளில் மட்டும் மின்தடை இருக்கும் என்றும் அறிவுறுத்தினார்.

 மின் தடை

மின் தடை

மேலும், புயல் காரணமாக எதாவது பகுதிகளில் மரம் விழுந்து மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டால், அதைச் சரி செய்ய மின் கம்பங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் தேவைக்கு ஏற்ப தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். மாண்டஸ் புயல் காரணமாக மின் இணைப்பில் பாதிப்பு எதாவது ஏற்பட்டால் அதைச் சரி செய்யச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் துறை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

 முதல் புயல்

முதல் புயல்

வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் ஆகும் நிலையில், இதுவரை புயல் எதுவும் உருவாகாமலேயே இருந்தது. இதனால் பல இடங்களில் மழை வழக்கத்தைவிடச் சற்று குறைவாகவே இருந்தது. இந்தச் சூழலில் தான் முதல்முறையாக இப்போது வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் காரணமாக வடதமிழக மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
TNEB Chairman Rajesh Lakhani about power cut due to mandous cyclone: TNEB Chairman Rajesh Lakhani latest press meet amid mandous cyclone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X