சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கிங் மேக்கர்".. இந்த பெல்ட்டில்தான் மழை பெய்யும்.. புயல் உருவாகிறது? தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

யானை வரும் பின்னே .. மணியோசை மாறும் முன்னே என்பார்கள். அப்படித்தான் நாளை மறுநாள் உருவாக்கி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு முன்பாக தமிழ்நாட்டில் தற்போது கிழக்கு திசை காற்றின் காரணமாக கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. டிசம்பர் 5-ம் தேதி ஒரு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

ரெடியா இருங்க.. அடுத்த வாரம் சென்னையை புரட்டிப் போடப் போகும் கனமழை? வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்ரெடியா இருங்க.. அடுத்த வாரம் சென்னையை புரட்டிப் போடப் போகும் கனமழை? வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்

வானிலை

வானிலை

முன்னதாக இந்த தாழ்வு பகுதி அந்தமான் நோக்கி வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இந்த தாழ்வு பகுதி சீன கடல் பகுதியிலேயே முழுமையாக உருவாகும் முன் அழிந்து போய்விடும் வாய்ப்புகளும் இருந்தன. இந்த நிலையில்தான் 5ம் தேதி உறுதியாக இந்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. நாளை இந்த தாழ்வு பகுதி அந்தமான் கடல் பகுதிக்கு வந்துசேரும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும்.

தாழ்வு பகுதி

தாழ்வு பகுதி

மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து இது தாழ்வு மண்டலமாக நகரும். இதனால் தமிழ்நாட்டிற்கு கண்டிப்பாக கனமழை பெய்யும். டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை பகுதிகளில் கனமழை பெய்யும். அதேபோல் வடக்கு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள கணிப்பு பின்வருமாறு. சக்கரத்தை பற்றிய சிறிய வானிலை குறிப்பு. Madden-Julian Oscillation காரணமாகவே தமிழ்நாட்டில் மழை பெய்யும். இதுதான் கிங் மேக்கராக இருக்க போகிறது.

சக்கரம்

சக்கரம்

அதாவது சக்கரத்திற்கு (காற்றழுத்த தாழ்வு மண்டலம்) உறுதுணையாக இருக்க போகிறது. டிசம்பர் 8-10 தேதிகளில் இந்த மாற்றம் நடக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும். ஆனால் பெரும்பாலும் கடல் பகுதியில் இது புயலாக இருக்கும். ஆனால் இந்த புயல் நிலப்பகுதியை நெருங்க நெருங்க அதன் மையத்தை நோக்கி வறண்ட காற்று செல்லும். டெல்டா தொடங்கி நெல்லூர் வரை உள்ள பெல்ட் முழுக்க மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக இருக்க போகிறது. ஆனால் நவம்பர் 20 - 25ல் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் போல இது மழையை கொடுக்காமல் போகாது. ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் முதல்கட்ட டிரெண்ட்தான். இறுதி முடிவு டிசம்பர் 6ம் தேதிதான் தெரியும்.

சுவாரசியம்

சுவாரசியம்

முக்கியமாக சக்கரம் உருவாவது நாளுக்கு நாள் சுவாரசியம் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஒரு விஷயம் உறுதி.. இந்த சக்கரம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த சிஸ்டம் மேற்கு - வட மேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் கடல் பகுதியை நெருங்க வாய்ப்பு உள்ளது. இதன் அர்த்தம் கடலூர் / நாகை பெல்ட் - சென்னை நெல்லூர் பெல்ட் மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக இருக்கும். தென் சென்னை பெரிய அளவிலான மழையை மிஸ் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. சக்கரம் பற்றி அப்டேட் கொடுக்க இன்னும் நேரம் இருக்கிறது. டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மழை ஆக்டிவாக இருக்க போகிறது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

English summary
Which parts of the state will get rain? What is the possibility of a storm? Tamil Nadu Weatherman warning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X