• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"இனிதான் சிக்கலே".. அதிமுகவுக்கு நெருக்கடி.. ஒரு மண்டல வாக்குகள் அப்படியே.. திமுகவுக்கு போக போகுது!

|

சென்னை: அதிமுகவுக்கு இனிதான் சிக்கல் என்று சொல்வதா? அல்லது எடப்பாடியாருக்கு ரூட் கிளியர் என்று சொல்வதா தெரியவில்லை.. ஒருவித குழப்ப மனநிலைமையையே சசிகலாவின் விலகல் முடிவு ஏற்படுத்தி வருகிறது.

தமிழக முதல்வர் டெல்லி சென்றபோதும் சரி, சென்னையில் அமித்ஷா, மோடியை 2 முறை சந்தித்து பேசியபோதும் சரி, கறார் முடிவிலேயே இருந்திருக்கிறார்.. சசிகலா வருகை கட்சி ரீதியாக பாதிப்பை தரும் என்பதிலும், தனிப்பட்ட முறையில் அந்த வருகை தன்னை பாதிக்கும் என்பதிலும் கலக்கத்தில் இருந்துள்ளார்.

பிரச்சாரங்கள் முழுக்க சசிகலாவுக்கு இடமில்லை என்பதை ஓங்கி ஒலிக்க சொல்லி கொண்டே இருந்தார்.. வெளிப்படையாக சசிகலா பெயரை ஒருஇடத்திலும் எடப்பாடியார் பயன்படுத்தவில்லை என்றாலும், தினகரனை பகிரங்கமாக விமர்சித்தாலே அது சசிகலாவையும் டேமேஜ் செய்துவிடும் என்பதே கணக்காக இருந்தது.

இதுதாங்க நடக்குது.. முணுமுணுக்கும் தலைகள்.. "அதை" நம்பி தேவையில்லாத ரிஸ்க் எடுக்கும் திமுக.. பின்னணி

தென்மாவட்டம்

தென்மாவட்டம்

பாஜகவை பொறுத்தவரை, சசிகலா மீது எந்தவித சாப்ட் கார்னரும் இல்லை என்றாலும், திமுகவை வீழ்த்தவும், தென்மாவட்டங்களில் வாக்குகளை அள்ளவும்தான் அவரை பகடைகாயாக பயன்படுத்த நினைத்தது.. தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளுடன், சசிகலாவின் முக்குலத்தோர் சமூக வாக்குகளையும் சேர்த்து பெற்றால், திமுக தானாகவே மெஜாரிட்டியை இழக்கும் என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணமாக இருந்தது. எவ்வளவோ அழுத்தம் தந்தும் எடப்பாடி அசரவே இல்லை..

எடப்பாடியார்

எடப்பாடியார்

இப்போது சசிகலாவுக்கும் வேறு வழி இல்லை.. பொறுத்து பொறுத்து பார்த்தார்.. ஒருசில நபர்களை தூது அனுப்பினார்.. தன் சார்பாக அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. ஆனால், எடப்பாடியார் தன்னுடைய நிர்வாகிகளை கெட்டியாக கைப்பிடிக்குள் வைத்திருப்பது கண்டு அதிர்ந்தே விட்டார்.. தேர்தல் தேதிக்கு பிறகு எப்படியும் அதிருப்தியாளர்கள் வந்துவிடுவார்கள் என்று பார்த்தால், அதிலும் சசிகலாவுக்கு தோல்விதான்.. அப்படியானால், எடப்பாடியார் மீது உண்மையிலேயே அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம்பிக்கை இருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இது அதிமுகவுக்கு மேலும் பலம்தான்.

சசிகலா

சசிகலா

மற்றொருபக்கம் , தென்மாவட்டங்களில் சசிகலா இல்லாமல் வாக்குகளை எப்படி பெறுவீர்கள் என்ற பாஜகவின் கேள்விக்கும் எடப்பாடி தரப்பு பக்காவான ஸ்கெட்சை போட்டு வருகிறது.. தென்மண்டல அமைச்சர்கள்தான் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.. வைத்திலிங்கம், ஓபிஎஸ், ஆர்பி உதயகுமார், போன்றோர் தனித்தனி களரிப்போர்ட்களை தயார் செய்து, அதன்படி வியூகம் அமைத்தாலே, அமமுகவின் வாக்குகளை சிதறடிக்கலாம் என்பதே எடப்பாடியாரின் இன்னொரு திட்டமாக இருக்கிறது.

 திமுக

திமுக

ஆனால், இது அவ்வளவு எளிதான காரியமா என்று தெரியவில்லை.. அமமுக போட்டியிட்டாலேஅதிமுக வாக்குகள் சிதறும்.. இது தானாகவே திமுகவுக்கு பலத்தை சேர்க்கும்.. என்னதான் கொங்குமண்டலம், வடமாவட்டங்களில் ஓட்டு வங்கியை பெருக்க பிளான் செய்தாலும், தென்மண்டலத்தில் திமுகவின் கையே ஓங்கி இருக்கும் என்று இப்போதே அரசியல் நோக்கர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்... பார்ப்போம்..!

 
 
 
English summary
Who is going to benefit from Sasikala’s political decision
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X