சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் சரி.. ரஜினிக்கு யாரெல்லாம் ஆதரவா இருப்பாங்க.. ஒரு லிஸ்ட் போட்டு பார்க்கலாமா ?!

ரஜினிக்கு இந்துக்களின் ஆதரவு பெருவாரியாக கிடைக்கும் என தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்து.. ரஜினிகாந்த் பரபர பேட்டி - வீடியோ

    சென்னை: ரஜினிதான் இப்போது "டாக் ஆப் தி ஸ்டேட்" ஆக மாறி விட்டார். பிடித்தவர், பிடிக்காதவர் என அணி பிரிந்து அலசி ஆராய்ந்து கொண்டுள்ளனர்.

    சரி.. ரஜினிக்கு யாரெல்லாம் உண்மையான ஆதரவாக இருப்பார்கள் என்று பார்த்தால் நிறைய பேரை யோசிக்க வேண்டி வருகிறது. ஆனால் தேர்தல் வந்து ரிசல்ட் தெரியும்போதுதான் உண்மையிலேயே அவருக்கு யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்கள் என்பதை உறுதியாக அறிய முடியும்.

    இருப்பினும் இப்போது அவர் போகும் பாதையை வைத்துக் கணிக்கும்போது சில விஷயங்களை நாம் கூட்டிக் கழித்துப் பார்க்க முடியும். அப்படி ஒரு அலசல்தான் இது!!

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    முதலில் ரசிகர்கள்... இவர்கள்தான் ரொம்ப காலமாக 'வாங்க வாங்க' என்று வம்படியாக ரஜினியை அரசியலுக்கு இழுத்துக் கொண்டிருப்பவர்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இழுத்து இழுத்து சோர்ந்து போனாலும் கூட தளராமல் உள்ளனர். இவர்கள்தான் உண்மையில் ரஜினியின் பெரிய பலமே. வேறு நடிகராக இருந்தால் அட போங்கப்பா என்று வேறு வேலையைப் பார்க்கப் போயிருப்பார்கள். ஆனால் இவர்கள் ரஜினியை விட்டுப் போகாமல் கூடவே இருக்கின்றனர்.

    இந்துத்துவா

    இந்துத்துவா

    அடுத்து யார் ஆதரவாக இருப்பார்கள் என்று பார்த்தால் இந்துத்துவாவை கையில் பிடித்துள்ள கட்சிகள், அமைப்புகளை வரிசைப்படுத்தலாம். இவர்கள் நிச்சயம் ரஜினிக்கு ஆதரவாக இருப்பார்கள். காரணம், பெரியாருக்கு எதிரான நிலைப்பாட்டை நேற்று ரஜினி கையில் எடுத்து விட்டார் என்பதால் இவர்களுக்குமே கூட இப்போது ரஜினி குறித்த தெளிவு வந்து விட்டது. "ஓகே இவர் நம்ம ஆள்தான்" என்ற நிம்மதியை அவர்கள் நேற்று பெற்று விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

    கடவுள் நம்பிக்கையாளர்கள்

    கடவுள் நம்பிக்கையாளர்கள்

    அடுத்து கடவுள் நம்பிக்கையாளர்கள். இவர்கள் கட்சி சார்பற்றவர்கள். அதேசமயம், தீவிர மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, சென்டிமென்ட் என்று உள்ளவர்கள். இவர்களில் கணிசமானவர்கள் ரஜினி பக்கம் சாய வாய்ப்புண்டு. காரணம், இவர்களுக்கு அடிப்படையிலேயே திக பிடிக்காது என்பதால். எனவே இவர்களின் ஆதரவும் ஓரளவுக்கு ரஜினிக்கு கிடைக்கலாம்.

    கடவுள் பக்தர்கள்

    கடவுள் பக்தர்கள்

    அதேசமயம், கடவுள் நம்பிக்கை வைத்துள்ள அனைவருமே ரஜினிக்கு ஆதரவாக வருவார்கள் என்று சொல்லி விட முடியாது. காரணம், திமுகவிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் நிறைய உள்ளனர். கருணாநிதி குடும்பத்திலேயே கடவுள் நம்பிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், ஸ்டாலின் மனைவி துர்கா உட்பட தீவிர கடவுள் பக்தர்கள்.. துர்கா ஜோசியத்தை நம்பக் கூடியவரும் கூட. எனவே இப்படி கட்சிகளில் தீவிரமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையாளர்கள் கட்சி மாறி ரஜினியிடம் போவார்களா என்று தெரியவில்லை. ஆனால் வாய்ப்புகள் குறைவுதான்.

    நடுத்தர மக்கள்

    நடுத்தர மக்கள்

    அடுத்ததாக நடுத்தர மக்கள்.. இவர்களின் வாக்குகள் முக்கியமானது. இதை எப்படி ரஜினி கவரப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இவர்கள் நிறைய இடங்களில் பிரிந்து கிடக்கின்றனர். ஒரு குரூப் கமல் பக்கம் உள்ளது. எனவே இந்த வாக்குகளில் யாரெல்லாம் ரஜினிக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்பது ரஜினியின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த நடுத்தர வர்க்கத்தினரில் நாத்திகர்களும், பகுத்தறிந்து செயல்படுவர்களும் கணிசமாக உள்ளனர். இவர்களை ரஜினி ஈர்க்க முடியுமா என்று தெரியவில்லை.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    இளைஞர்களின் வாக்குகள் மிக முக்கியமானது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் விஜய் ரசிகர்களாக உள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவர்களில் எத்தனை பேர் ரஜினி பக்கம் போவார்கள் என்பது தெரியவில்லை. மேலும் கட்சிகளும் கூட கணிசமான இளைஞர்களின் வாக்குகளை வளைத்து வைத்துள்ளன. அதிலும் கூட ஜாதி ரீதியாக பிரிந்து கிடக்கும் இளைஞர்களும் உள்ளனர். இவர்களை உடைப்பதில் ரஜினி சற்று சிரமப்படக் கூடும் என்று சொல்லலாம்.

    பெண்கள்

    பெண்கள்

    பெண்களின் வாக்குகள் அடுத்து முக்கியமானது. பெண்களைப் பொறுத்தவரை பெருமளவில் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று ஒரு கருத்து உண்டு. அது ஜெயலலிதாவோடு போய் விட்டதாகவே சொல்ல வேண்டும். டாஸ்மாக்கால் அவதிப்பட்ட அத்தனை பெண்களும் தற்போது அதிமுகவுக்கு எதிராகத்தான் இருப்பர்கள். அவர்களில் எத்தனை பேர் திசை திரும்புவார்கள் என்று தெரியவில்லை. காரணம், அவர்களில் பெரும்பாலானவர்களை திமுக ஏற்கனவே வசீகரித்து விட்டது. கடவுள் நம்பிக்கை கொண்ட பெண்கள்தான் அதிகம். எனவே அவர்களின் வாக்குகளைக் கவர ரஜினி தரப்பு முயற்சிக்கலாம். ஆனால் முழுமையாக கிடைக்குமா என்பது தெரியவில்லை.

    அரசு ஊழியர்கள்

    அரசு ஊழியர்கள்

    அரசு ஊழியர்கள்... இவர்களின் வாக்குகள் ரஜினிக்கு பெரிய அளவில் கிடைக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் காலம் காலமாக அரசு ஊழியர்களின் பெரும்பாலான வாக்குகள் திமுகவுக்கே போய்க் கொண்டுள்ளது. அதை எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கூட உடைக்க முடியவில்லை. காரணம், அரசு ஊழியர்களுக்கும், திமுகவுக்கும் இடையிலான பந்தம் அந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளது.

    ரஜினியின் கருத்துக்கள்

    ரஜினியின் கருத்துக்கள்

    கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்போதைக்கு, அவரது ரசிகர்களைத் தாண்டி இந்து மத அபிமானிகளின் வாக்குகள் கணிசமான அளவுக்கு ரஜினிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த அவரது செயல்பாடுகள்தான் ரஜினியை தலைவர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்துமா என்பதை முடிவு செய்யும்.. அதுவரை திமுக தலைவர் முக ஸ்டாலின் சொன்னது போல நடிகர் ரஜினியின் கருத்துக்களாகவே எல்லாமும் மக்களால் பார்க்கப்படும்!!

    English summary
    actor rajnikanths controversy speech: who and all will support rajinikanth at this juncture
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X