சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல்... அதிமுகவில் இருந்து ஒருத்தர்தானா?.. இல்லை 3 பேருமா!

அதிமுக சார்பாக ராஜ்ய சபாவுக்கு செல்ல போவது யார் என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தம்பிதுரை தயவை நாடும் எடப்பாடியார்.. ராஜ்யசபா சீட் ரெடி!- வீடியோ

    சென்னை: தோத்து போய்ட்டாலும், அதிமுக ஆட்சி ஒன்னும் கவிழவில்லையே... ஜஸ்ட் பாஸ் ஆகி ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது என்றாலும், ராஜ்யசபாவுக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஆரம்பமாகி உள்ளது.

    ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால், 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுகவுக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. (இது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களையும் சேர்த்துதான்) அதனால் அதிமுகவினால் 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

    பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போதே 7+1 என்று சொல்லப்பட்டது. இந்த +1 அன்புமணி ராமதாஸ் என்றும் அன்றே யூகிக்கப்பட்டது. அன்புமணி இல்லாவிட்டால், சவுமியா அன்புமணியை ராஜ்யசபாவுக்கு அனுப்பக்கூடும் என்றும் பேசப்பட்டது.

    நீங்க நிரூப்பிக்கணும்.. இதை பண்ணுங்க ராகுல் காந்தி.. ரஜினிகாந்த் சொல்லும் அதிரடி அட்வைஸ்! நீங்க நிரூப்பிக்கணும்.. இதை பண்ணுங்க ராகுல் காந்தி.. ரஜினிகாந்த் சொல்லும் அதிரடி அட்வைஸ்!

    அன்புமணி

    அன்புமணி

    அதன்படி, ஒரு தொகுதியிலும் ஜெயிக்கவில்லை என்றாலும், பாமகவின் வாக்கு வங்கி கூடி உள்ளது கூட்டணி தலைமைக்கு ஆறுதலை தந்துள்ளது. அதனால் பேசினபடி, ஒப்பந்தப்படி அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தரப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

    நெருக்கடி

    நெருக்கடி

    மீதம் இருப்பது 2 இடங்கள்தான். இதில் தேனி ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை தந்தால், தனக்கு ஒரு ராஜ்ய சபா வாய்ப்பை தர வேண்டும் என்று பாஜக நெருக்கடி தரும் என்கிறார்கள். ஏனென்றால், தமிழகம் சார்பாக யாராவது ஒரு ராஜ்யசபா எம்பியாவது இருக்க வேண்டும் என்று பாஜக தலைமை நினைக்கிறதாம்.

    எச்.ராஜா

    எச்.ராஜா

    பாஜகவின் மண் என சொல்லப்பட்ட கன்னியாகுமரியில் குப்புற விழுந்த பொன்ராதாகிருஷ்ணன் அல்லது சிதம்பரம் தொகுதிதான் வேண்டும் என்று அடம்பிடித்து போட்டியிட்டு தோற்ற, எச்.ராஜா இவர்களில் யாருக்காவது அந்த சான்ஸை பாஜக கேட்டு வாங்கவே செய்யும்.

    போட்டா போட்டி

    போட்டா போட்டி

    ஆக, கூட்டணிக்கே இரண்டு சீட் போய்விட்ட நிலையில், மீதம் இருப்பது ஒரே ஒரு நபர்தான். அந்த ஒரு நபர் அதிமுகவை சேர்ந்தவராக இருப்பார். ஆனால் யார் அவர் என்பதில்தான் போட்டா போட்டி, ரேஸ், என ஆரம்பமாகி உள்ளது.

    தம்பிதுரை

    தம்பிதுரை

    இதில் முதல்ஆளாக பிடிவாதம் பிடித்து வருபவர் கோகுல இந்திராதான். ஏற்கனவே எம்பி தேர்தலுக்கு சீட் கேட்டும் தரவில்லை என்பதால், இந்த சீட்டையாவது தனக்க தர வேண்டும் என்கிறார். அடுத்த நபர் தம்பிதுரை! இவர் எடப்பாடிக்கு நெருக்கமானவர். அனுபவஸ்தர். டெல்லி வட்டாரத்துடன் நீண்ட காலம் செல்வாக்கில் இருப்பவர். அதனால் தம்பிதுரையை டெல்லிக்கு அனுப்பலாம் என்கிறது ஒரு தரப்பு.

    வைகை செல்வன்

    வைகை செல்வன்

    லிஸ்ட்டில் உள்ள அடுத்த நபர் வைகை செல்வன். ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை நல்ல மதிப்பை பெற்று வருபவர். அவரது பேச்சு, எழுத்துக்கு ஒரு வாசகர் கூட்டமே உள்ளது. அதனால் அதிமுகவில் பலம் பொருந்திய நபராக உருவெடுத்து வரும் வைகைசெல்வனுக்கும் வாய்ப்பு வரும் போல உள்ளது. ஆக மொத்தம், அதிமுக சார்பில் டெல்லி போகும் அந்த ஒருத்தர் யார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்!

    English summary
    There is a problem in who is going to be a member of the Rajya Sabha on behalf of AIADMK. Gokula Indira, Thambidurai and Vaigai Chelvan are among the strongest rivals
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X