சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது? கணக்கு காட்டாத மத்திய அரசு?

Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாடுகள் இந்தியாவிற்கு அனுப்பிய கொரோனா உபகாரணங்கள் பல எங்கே சென்றது? எப்படி மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது? என்பது தெரியாததால் பெரிய சர்ச்சையும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகள் பல இந்தியாவிற்கு கொரோனா மருத்துவ உபகரணங்களை அளித்து வருகின்றன. மாஸ்க் தொடங்கி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரை இந்தியாவிற்கு மருந்து உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

உலகின் மருத்துவமனை என்று மார் தட்டிக்கொண்ட இந்தியாவிற்கு சின்ன சின்ன நாடுகள் கூட தற்போது உதவி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே? பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி!வெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே? பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி!

எத்தனை

எத்தனை

இந்தியாவிற்கு, இதுவரை வெளியான கணக்கின்படி மொத்தம் 3000 டன் வெளிநாட்டு உபகரணங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. 24 விதமான வேறுவேறு உபகரணங்கள் வந்துள்ளன. 1656 ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள், 20 பெரிய சைஸ் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள், , 965 வென்டிலேட்டர்கள், 350 பெரிய சைஸ் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெமிடிசுவர் மருந்து, பிபிஇ கிட் உட்பட பல மருந்து உபகாரணங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன.

உபகரணங்கள்

உபகரணங்கள்

இதில் 24 வகையான உபகாரணங்களும் பிரிக்கப்பட்டு மாநிலங்ககுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. 31 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசத்தங்களுக்கும் இதை அனுப்பி உள்ளோம். 86 மருத்துவ நிறுவனங்களுக்கும் அனுப்பி உள்ளோம், இதில் 38 மருத்துவ நிறுவனங்களுக்கு ஏற்கனவே இந்த மருந்துகள் சென்றுவிட்டன என்று மத்திய அரசு கூறியுள்ளது.

செல்லவில்லை

செல்லவில்லை

ஆனால் மத்திய அரசு இதற்கான முழு லிஸ்டை வெளியிடவில்லை. அதாவது எவ்வளவு பொருட்கள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எவ்வளவு பொருட்கள் எந்த மாநிலத்திற்கு சென்றுள்ளது. அது எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்றுள்ளது

சென்றுள்ளது

ஏனென்றால் உத்தர பிரதேசம் குஜராத், பீகார், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கு உதவி பொருட்கள் வந்ததாக கூறியுள்ளன. டெல்லியில் இருந்து தங்களுக்கு ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வந்ததாக கூறியுள்ளன. இந்த மாநிலங்கள் எல்லாம் தங்களுக்கு உதவிகள் வந்ததை உறுதி செய்துள்ளன.

புகார்

புகார்

ஆனால் ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் தங்களுக்கு எந்த உதவியும் இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளன. மத்திய அரசு எங்களுக்கு உதவி பொருட்களை அனுப்பியதாக கூறுகிறது. ஆனால் எங்களுக்கு அப்படி எந்த உதவியும் வரவில்லை. மத்திய அரசு உதவி என்று எதை கூறுகிறது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளன.

குழப்பம்

குழப்பம்

இன்னொரு பக்கம் மகாராஷ்டிரா அரசு, தங்களுக்கு எந்த உதவியும் வந்தது சேரவில்லை, ஆனால் சுங்கத்துறையிடம் சில பொருட்கள் வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன, என்று கூறியுள்ளது. அதேபோல் கேரளா மாநில மத்திய அரசிடம் உதவி பெற்றதாக மத்திய அரசின் லிஸ்டில் உள்ளது. ஆனால் கேரளா நாங்கள் உதவி எதுவும் கேட்கவில்லை, எங்களுக்கு பொருட்களை அனுப்புவதாக மத்திய அரசு எதுவும் கூறவில்லை என்று கேரளா அரசு கூறியுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

மொத்தத்தில் இந்த 3000 டன் மருத்துவ உபகரணங்களில் பல எங்கே சென்றது, என்ன ஆனது, எப்படி பிரிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. சில மாநிலங்கள் தங்களுக்கு இந்த பொருட்கள் வந்ததாக கூறுகிறது. சில மாநிலங்கள் இன்னும் வரவில்லை என்று கூறுகிறது. இதனால் 3000 டன் மருத்துவ உபகரணங்கள் குறித்த தெளிவான விவரங்கள் தெரியவில்லை.

ராகுல் காந்தி கேள்வி

ராகுல் காந்தி கேள்வி

இது குறித்து கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,

இந்தியாவிற்கு வெளிநாடு அனுப்பி உள்ள உபகரணங்கள் குறித்து சில கேள்வி,

- இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட உபகரணங்கள் என்ன?
- அவை எல்லாம் எங்கே?
- அது யாருக்கு எல்லாம் கொடுக்கப்பட்டது?
- எப்படி மாநிலங்களுக்கு பிரித்து தரப்பட்டது?
- இதில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை?

மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும், என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்

English summary
Who Benefitted? How it distributed? Huge Confusion over 3000 Ton Foreign Aid to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X