சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்கள் ஆதரவு ஓபிஎஸ்க்கா - இபிஎஸ்க்கா? வந்து விழுந்த கேள்வி..ஒரு நொடி யோசித்து ஜிகே வாசன் சொன்ன பதில்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவை எதிர்த்து வாக்கு செலுத்த மக்கள் தயராக இருக்கிறார்கள். அதற்கு காரணம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் அரசாக இந்த அரசு உள்ளது என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறினார். அப்போது அதிமுகவில் உங்கள் ஆதரவு யாருக்கு எனவும் அவர் பதிலளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்தது.

இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பச்சைக்கொடி காட்டியது. அதிமுகவின் இரு அணிகளும் இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் தெரிவித்து வருகிறது. ஓ பன்னீர் செல்வமும் ஜிகேவாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

 எடையை குறைக்க கஷ்டபடுறீங்களா.. இதை செஞ்சா நிச்சயம் எடை குறையும்.. அடித்து சொல்லும் ஆய்வாளர்கள் எடையை குறைக்க கஷ்டபடுறீங்களா.. இதை செஞ்சா நிச்சயம் எடை குறையும்.. அடித்து சொல்லும் ஆய்வாளர்கள்

ஜிகே வாசன் பேட்டி

ஜிகே வாசன் பேட்டி

இருந்தாலும் ஜிகே வாசனை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜிகே வாசனிடம் இது தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜிகே வாசன் தனது பேட்டியில் கூறியதாவது:-தமிழக மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காத அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

மக்கள் நினைக்கும் மாற்றம் வரும்

மக்கள் நினைக்கும் மாற்றம் வரும்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு இந்த அரசு. வாக்காளர்கள் ஏமாந்த நிலையில் இருக்கின்றனர். இந்த இடைத்தெர்தலில் திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால் எதிரணியில் இருப்பவர்கள் எல்லாம் ஓரணியாக பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து திமுகவிற்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அத்தகைய நிலை ஏற்பட வேண்டும் என்றால் மக்கள் நினைக்கும் மாற்றம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தேர்தலிலும் உறுதியாக வரும். பொதுவாகவே தமிழ்நாட்டு அரசியல் 50 வருடமாக கூட்டணியில் தான் சுழன்று கொண்டு இருக்கிறது என்பதுதான் தமிழ அரசியலின் வரலாறாக உள்ளது.

போதுமான நேரம் உள்ளது

போதுமான நேரம் உள்ளது

தேர்தல் ஆணையம் எல்லா தேர்தலுக்கும் ஒரு கோட்பாடு கொடுத்துள்ளது. காலக்கெடு கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முறையாக தேர்தலை தொடங்கி மக்களுடைய எண்ணங்களை பிரதிபலித்து எதிர்மறை வாக்குகளை முழுமையாக பெற்று பிரகாசமான நிலையில் நிச்சயமாக அதிமுக வேட்பாளர் போட்டியிடுவார். எல்லா கட்சிகளுக்குக்கும் போதுமான நேரம் உள்ளது. மனு தாக்கலே இன்னும் தொடங்கவில்லை.

ஆதரவு ஓபிஎஸ்க்கா இபிஎஸ்க்கா

ஆதரவு ஓபிஎஸ்க்கா இபிஎஸ்க்கா

தமிழகத்தில் மணிக்கு மணி நாளுக்கு நாள் திமுகவை எதிர்த்து வாக்கு செலுத்த மக்கள் தயராக இருக்கிறார்கள். அதற்கு காரணம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் அரசாக இந்த அரசு உள்ளது. மக்கள் அரசின் மீது கடுமையான கோபத்தில் இருப்பார்கள். அதனை உறுதியாக தேர்தலில் பிரதிபலிப்பார்கள்" என்றார். அப்போது ஜிகே வாசனிடம் அதிமுக தரப்பில் ஓ பன்னீர் செல்வமும் உங்களை சந்தித்து பேசினார். உங்கள் ஆதரவு ஓபிஎஸ்க்கா இபிஎஸ்க்கா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜிகே வாசன், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் 2019 ஆம் ஆண்டில் இருந்து அனைத்து தேர்தல்களிலும் கூட்டணியில் இருக்கிறது. அது தொடர்கிறது" என்றார்.

அதிக சுமைகளை ஏற்றியுள்ளது

அதிக சுமைகளை ஏற்றியுள்ளது

தொடர்ந்து பேசிய ஜிகே வாசன் கூறியதாவது:- இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவெற்றவில்லை. அதையும் தாண்டி மக்கள் மீது குறைந்த மாதங்களில் அதிக சுமைகளை ஏற்றிய அரசு திமுக அரசுதான். அதற்காக மக்கள் இந்த அரசு மீது பாடம் புகட்ட தயராக இருக்கிறார்கள். மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு களத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் குறையவில்லை. இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இதை சரிவர செய்வதாக தெரியவில்லை. மக்கள் மிகுந்த வருத்தத்துடன் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
People are ready to vote against DMK. Tamil State Congress president GK Vasan said in an interview to reporters that this government is a government that deceives the people by not fulfilling the promises made. Then he replied who do you support in AIADMK?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X