சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை பிடிக்க டாஸ்மாக் அருகே போலீஸார் நவீன யுக்தி.. குடிமகன்கள் ஷாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

    சென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களை பிடிக்கவும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களையும் பிடிக்கவும் டாஸ்மாக் அமைந்துள்ள சாலைப்பகுதிகளில் போலீசாரின் வித்தியாசமான முயற்சிகளால் வாகன ஓட்டிகள் கையும் களவுமாக சிக்கி வருகிறார்கள்.

    போக்குவரத்து வாகன திருத்த மசோதா வெற்றிகரமாக லோக்சபாவை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் நிறைவேறிவிட்டது. எனவே இனி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதங்கள் கடுமையாக வசூலிக்கப்பட உள்ளது.

    who going drunken drive, catched by police by new way in south district

    இந்நிலையில் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்ட தலைநகரில் ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைந்துள்ளது அந்த பகுதியைச் சுற்றி மதுக்கடைகள் ஏராளமாக செயல்படுகின்றன. அந்த கடைகளில் மது அருந்துவிட்டு வரும் நபர்கள் பலர் அந்த நகரின் உள்பகுதிக்கு வர முக்கிய சாலை சந்திப்பைத்தான் பயன்படுத்துவார்கள்.

    அங்கு ஒரு அபாயகரமான வளைவு இருக்கும் . அந்த வளைவில் இருந்து சிறிது தூரம் தள்ளித்தான் வேக்கத்தடை அமைக்கப்பட்டு இருக்கும். வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும் போது போலீசாரை பார்த்த உடன் தப்பி ஓடிவிடுவார்கள்.

    இதனால் ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று யோசித்த போலீசார் வளைவில் மறுவேடத்தில் ஒரு போலீஸை மறைவில் நிறுத்தினார்கள். இதனால் போலீஸ் சோதனை செய்கிறார்கள் என்பதை பார்த்த உடன் வாகனத்தை திருப்பி ஓடுவதை ரகசியமாக கண்காணித்து கையும் களவுமாக பிடிப்பார். இதனால் டாஸ்மாக்குகளில் குடித்துவிட்டு அனைவரும் அங்கு கொத்து கொத்தாக மாட்டுகிறார்கள்.

    போலீசாரின் இந்த நவீன யுக்தியால் அந்த நகரில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அதேநேரம் போலீசாரின் இந்த நடவடிக்கையால் மது அருந்த செல்வது குறைந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் போலீஸை பாராட்டுகிறார்கள்.

    English summary
    who going drunken drive near tasmac, catched by traffic police by new way in south district, drinkers shocked
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X