சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரசிகர்களை தூண்டியது மாஜி மன்றத்தினரா?.. அப்போ மாஜிக்களை தூண்டிவிட்டு நெருக்கடி கொடுப்பது யார்?

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தினரை ஏற்கெனவே நீக்கப்பட்ட நிர்வாகிகள் தூண்டிவிட்டுள்ளார்கள் என்றால், அந்த மாஜிக்களை தூண்டிவிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவேன் என 2017-இல் அறிவித்தவுடன் சொன்ன முதல் எச்சரிக்கை இதுதான்- என்னுடன் இணைந்து சம்பாதிக்கணும்னு எண்ணம் இருக்கிறத யாரா இருந்தாலும் இப்போவே ஓடி போய்டுங்க...னு சொன்னார்.

அதாவது மற்ற அரசியல்வாதிகளை விட சுற்றி இருப்பவர்கள்தான் ஊழல் பெரிசாளிகளாக இருப்பர். அது போல் ஒருவர் நம்முடன் இருக்கக் கூடாது என்பதில் ரஜினி தெளிவாகவே இருக்கிறார்.

பெயர்

பெயர்

இது போல் தனது பெயரை சொல்லி காசு சம்பாதித்த சிலரை மக்கள் மன்றத்திலிருந்து களை பறித்தார் ரஜினி. தொடர்ந்து தன் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றக் கூடாது என வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் ரஜினி உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வர போவதில்லை என தெளிவாக கூறிவிட்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

எனினும் போயஸ் தோட்ட இல்லம் அருகே ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து யாரும் போராட்டக் கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் அறிக்கை வெளியானது. ஆனால் அதையும் மீறி ரஜினி மக்கள் மன்றத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

5000 பேர் வரை

5000 பேர் வரை

5000 பேர் முதல் 10 ஆயிரம் பேர் வரை இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என கூறப்படுகிறது. இந்த போராட்டத்தால் ரஜினி தனது மறுபரிசீலனை செய்வார் என கருதிய ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்தது ஒரு அறிக்கை. அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மன்ற நிர்வாகி பொறுப்பிலிருந்து தூண்டப்பட்ட சிலரால் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என ரஜினி தெரிவித்துள்ளார்.

ரஜினி பெயர்

ரஜினி பெயர்

ரசிகர்கள் மாஜி நிர்வாகிகள் தூண்டிவிட்டனர் என்றால் இந்த மாஜிக்களை தூண்டிவிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்கள் உயிரோடு இருந்தால் மட்டும் போதும் தலைவா என பல ரசிகர்கள் அனைத்தையும் கடந்து போய்விட்டனர். ஆனால் இந்த மாஜிக்கள் ரஜினி பெயரை கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதால்தான் நீக்கப்பட்டனர்.

நிபுணர்கள் கருத்து

நிபுணர்கள் கருத்து

அப்படியென்றால் ரஜினி ரசிகர்களை போராட தூண்டிவிட்டது யார் என தெரியவில்லை. நிச்சயம் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவரால் ஆதாயம் கிடைக்கும் என கணக்கு போட்டு திடீரென ரஜினியின் அரசியலுக்கு நோ என்ற அறிக்கையால் இடிந்து போனவர்களே இந்த வேலையை செய்திருப்பார்கள் என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாகும்.

English summary
Who has provoked Ex RMM activist to do protest which leads Rajini to reconsider his Decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X