சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இருக்கிற ஒரு சீட் யாருக்குதான் போக போகுது?.. திரும்பவும் எடப்பாடிக்கு சிக்கல்!

அதிமுகவில் ராஜ்ய சபா சீட்டுக்காக பெரும் போட்டா போட்டி நடக்கிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு சீட்டுதான்.. யாருக்கென்று தருவது, எடப்பாடி தரப்பு மண்டையை பிய்த்து கொண்டுள்ளதாம்- வீடியோ

    சென்னை: இருக்கிறதே ஒரு சீட்டுதான்.. இதை யாருக்கென்று தருவது என்று எடப்பாடி தரப்பு மண்டையை பிய்த்து கொண்டுள்ளதாம்! தன் பதவியை பற்றி நினைப்பதா, ஆட்சியை பற்றி நினைப்பதா, கட்சியை பற்றி நினைப்பதா என்றுதான் குழப்பமே!

    2 வருட கால ஆட்சியை எந்த குறைவின்றி நகர்த்தும் நெருக்கடியில் எடப்பாடி உள்ளார். மற்றொருபுறம் 103 எம்எல்ஏக்களை வைத்து மிரட்டி வருகிறது திமுக தரப்பு.

    நாளைக்கு 37 எம்பிக்கள் திரண்டு டெல்லி சென்றால், அதிமுக மட்டுமில்லை, அது பாஜகவையே அங்கு அசைத்து பார்க்க கூடும். தமிழகத்துக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு யோசிச்சு யோசிச்சுதான் கொண்டு வரும். இதே நிலைமைதான் இங்கு சட்டமன்றத்திலேயும். எப்போ ஆட்சிக்கு என்ன ஆகுமோ என்ற பீதியில்தான் திமுக அதிமுகவை வைத்துள்ளது.

    'ஏழை பங்காளன்' 'ஒடிஷா; மோடியின் நிஜ முகம் இதுதானா... பகீர் தகவல்கள் 'ஏழை பங்காளன்' 'ஒடிஷா; மோடியின் நிஜ முகம் இதுதானா... பகீர் தகவல்கள்

    பாஜக

    பாஜக

    இப்போது ராஜ்ய சபா சீட்டுக்கு அதிமுகவில் பலத்த போட்டி எழுந்துள்ளது. கூட்டணி கட்சிகள் பாமகவும், பாஜகவும் ஆளுக்கு ஒன்றை கேட்க, இருக்கும் ஒன்றை யாருக்கு தருவது என்பதில்தான் பிரச்சனையே.

    முதல் சாய்ஸ்

    முதல் சாய்ஸ்

    ஒருபக்கம், ஓபிஎஸ்-ன் செல்வாக்கு டெல்லியில் கூடிவிட்டால், இருக்கும் மதிப்பையும் இழக்க நேரிடுமோ என்ற பயம் முதல்வர் தரப்பை சூழ்ந்துள்ளது. அதனால் முதல்வேலையாக, தன் தரப்பிலிருந்து நம்பிக்கையான ஒருவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பலாம் என யோசித்துள்ளாராம். அதன்படி முதல்வரின் முதல் சாய்ஸ் தம்பிதுரையாக உள்ளது.

    அன்வர் ராஜா

    அன்வர் ராஜா

    இன்னொரு பக்கம் மைத்ரேயன், கோகுல இந்திரா, அன்வர் ராஜா போன்றோரும் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். இதில் முதல்வர் இரண்டு பேரை பரிசீலிக்க நேரிடுகிறது. ஒன்று, தன் தரப்பை காப்பாற்றி கொள்ள, தனக்கு நம்பிக்கைக்குரியவராக இருக்கும்படியான ஒருவரை டெல்லிக்கு அனுப்புவது என்பது முக்கியமானதாகிறது.

    அதிருப்தி

    அதிருப்தி

    மற்றொன்று பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், எந்த இஸ்லாமிய பிரதிநிதிக்கும் சீட்தர முடியாமல் போய்விட்டது. (இதில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யத்தை பாராட்டியே ஆக வேண்டும்) அதனால் இஸ்லாமியர்களில் பெருமளவுக்கு அதிருப்தியில்தான் உள்ளனர்.

    மீண்டும் ஜெ.பாணி?

    மீண்டும் ஜெ.பாணி?

    இந்த முறை ராஜ்ய சபா சீட்டினை ஒரு இஸ்லாமிய பிரதிநிதிக்கு தந்தால், மக்களின் அதிருப்தியில் இருந்து ஓரளவு மீள முடியும். மேலும் ஜெயலலிதாவை வாக்கை மீறி பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் பலனையும் இப்போது பார்த்துவிட்டதால், மீண்டும் ஜெ. பாணியையே கையில் எடுக்க இஸ்லாமிய பிரநிதியை டெல்லிக்கு அனுப்புவது முக்கியமானதாகிறது. ஆக, மொத்தம் இப்போதைக்கு திரும்பவும் சிக்கல் வந்துள்ளது எடப்பாடிக்குதான்.

    English summary
    M Thambidurai and Anwar Raja are trying to get the Rajya sabha seat on behalf AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X