• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

யார் இந்த பீலா ராஜேஷ்? குடும்ப பின்னணி என்ன?

|

சென்னை: இன்று ஊரெங்கும் ஒரே ஹாட்டாபிக் என்றால் அது கொரோனாதான். ஆனால் அதை விட தமிழகத்தில் ஹாட் டாப்பிக்காக இருப்பவர் ஒருவர் உள்ளார். அவர் யார் தெரியுமா? அவர்தான் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

தமிழகத்தில் கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்பு, மரணம் உள்ளிட்ட தகவல்களை நாள்தோறும் தெரிவித்து வருகிறார் நமது சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

இவர் மாலை நேரங்களில் நேரலையில் வந்தாலே இன்று எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்போ, நம்ம ஏரியாவில் யாருக்கேனும் வந்திருக்குமோ என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் ஏற்படுகிறது. இன்றைய கொரோனா பாசிட்டிவ் நம்பர்களையும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, சேம்பிள்ஸ் எடுக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆகியவற்றை எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி சொல்லிவிட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இன்முகத்துடன் பொறுமையாக பதிலளிப்பார். அது மட்டுமல்லாமல் கொரோனா குறித்து ட்விட்டரில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிப்பார். வேண்டிய உதவிகளையும் செய்வார்.

சாத்தான்குளம் தொகுதி

சாத்தான்குளம் தொகுதி

இவர் யார், இவரது குடும்ப பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம். இவரது குடும்பம் அரசியல் குடும்பம் ஆகும். இவரது தாய் ராணி. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ராணியின் சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும்.

வாழையடி

வாழையடி

தாய் அரசியல் பின்புலத்துடன் இருப்பவர் என்றால் பீலாவின் தந்தையோ காவல்துறை அதிகாரியாக இருந்தவர். தமிழக காவல் துறை ஏடிஜிபியாக இருந்து பின்னர் டிஜிபியாக பதவி பெற்று ஓய்வு பெற்ற எல் என் வெங்கடேசன் ஆவார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் வாழையடி பகுதியாகும். இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவர்களில் பீனாவும் கார்த்திக்கும் சிங்கப்பூரில் உள்ளனர்.

திருமணம்

திருமணம்

பீலா ராஜேஷ் மட்டும் சென்னையில் உள்ளார். இவர் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்தது படித்தது வளர்ந்ததெல்லாம் கொட்டிவாக்கத்தில்தான். இவர் மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பின்னர் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ் என்பவரை காதலித்து 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மாநிலங்கள்

மாநிலங்கள்

இவர்களுக்கு பிங்கி மற்றும் ப்ரீத்தி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் ராஜேஷ் தமிழகத்திற்கு பணிஇடமாற்றம் செய்து கொண்டு வந்தார். இவரை போல் தானும் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என பீலா முடிவு செய்து உத்வேகத்துடன் படித்தார். 1997-ஆம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம்

ஜார்க்கண்ட் மாநிலம்

2003-ம் ஆண்டு பீகார் மாநிலத்திலிருந்து புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பீலா மாற்றப்பட்டார். பின்னர் மத்திய அரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளில் பணியாற்றினார். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழ்நாடு கேடர் பீலா ராஜேஷுக்குக் கிடைத்தது.

பொன் ராதாகிருஷ்ணனின் உறவினர்

பொன் ராதாகிருஷ்ணனின் உறவினர்

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். நீண்ட காலம் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, பிப்ரவரி 2019-ல் அப்பொறுப்பு பீலா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் தனக்கு கொடுத்த பணிகளை செவ்வனே செய்து வருகிறார். இவர் மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் உறவினர் ஆவார்.

முதல்வர்

முதல்வர்

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும்நிலையில், பீலா ராஜேஷுக்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது. தினமும் காலை 8 மணிக்கெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் சண்முகம் இருவரிடத்திலும் கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட்டுகளை பகிர்ந்து கொள்கிறார். தமிழகம் முழுவதும் எடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சை, புதிய நோயாளிகளின் பட்டியல் என்று ஒருநாளைக்கு 18 மணிநேரம் பம்பரமாக உழைக்கிறார்.

துணை ஆட்சியர்

துணை ஆட்சியர்

இரவு 12 மணி வரையில் கொரோனா நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றால், அதிகாலையே எழுந்துவிடுகிறாராம். தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷிடமிருந்துதான் தினமும் ரிப்போர்ட்டுகளை மத்திய அரசும் பெறுவதாக கூறப்படுகிறது. இவருக்கு கொட்டிவாக்கத்தில் வீடு உள்ளது. இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளார். இவருக்கு மறக்க முடியாத பணி என்றால் அது செங்கல்பட்டு துணை ஆட்சியர் பணிதான்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Who is Beela Rajesh? Get to Know about Beela Rajesh IAS family background details including parents name, husband name, childrens and much more.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X