சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது லிஸ்ட்லயே இல்லையே.. "இவருக்கு" இவ்ளோ கிராக்கி இருக்கா.. ஆனா எடப்பாடியார்தான் பர்ஸ்ட்.. செம சர்வே

யார் முதல்வர் வேட்பாளர் என்று ஒரு சுவாரஸ்ய சர்வே நாம் வாசகர்களிடம் நடத்தினோம்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் வேட்பாளருக்கு "எடப்பாடியார்தான் கரெக்ட்" என்று நம் வாசகர்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர்.. அதேபோல, "செல்லூர் ராஜு பெஸ்ட்" என்று ஓபிஎஸ்ஸைவிட அதிக வாக்குகளை செலுத்தி, நம்மை அதிர்ச்சியில் திக்குமுக்காடவும் வைத்துள்ளனர். நாம் நடத்திய சுவாரஸ்ய சர்வேயில்தான் இந்த கணிப்பு வெளிப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஒரு பக்கமும், எடப்பாடியார் மறுபக்கமும் அதிகார சண்டை பகிரங்கமாகவே நடந்து வருகிறது.. யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் இருவருக்குள்ளும் மோதல் வெடித்துள்ளது.

முதல்வர் வேட்பாளர் யார் என்பது ஆலோசனையில் முடிவு எட்டப்படாததால் அதிமுக நிர்வாகிகள் முதல்வர் , துணை முதல்வர் என மாறி மாறி சந்தித்து வருகிறார்கள். ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களை சமாதானம் செய்வதற்கு மூத்த அமைச்சர்கள் மாறி மாறி இரண்டு வீட்டுக்கும் அலைந்து வருகின்றனர்.

அந்த நாள் ஞாபகம்... ஓபிஎஸ் நள்ளிரவில் ஜெ. சமாதியில் நடத்தி தோற்றுப்போன தர்மயுத்தம் 1.0- ப்ளாஷ்பேக் அந்த நாள் ஞாபகம்... ஓபிஎஸ் நள்ளிரவில் ஜெ. சமாதியில் நடத்தி தோற்றுப்போன தர்மயுத்தம் 1.0- ப்ளாஷ்பேக்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

நேற்று, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்திய அமைச்சர் உதயகுமார், அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், நேற்று நடந்த 2 அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ் இன்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அதிமுக

அதிமுக

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கவுள்ள செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்க நிகழ்ச்சி அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை... இதனால் பெரும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குழப்பம்

குழப்பம்

இருந்தாலும் திரும்பவும் ஓபிஎஸ் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதால் அவரது அரசியல் நகர்வு என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி போயுள்ளனர்.. மேலும், நாளை செய்தியாளர்களை சந்திக்க போவதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது... அதனால் அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் கழிந்து வருகிறது.

சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

இப்படிப்பட்ட சூழலில், நாம் நம் வாசகர்களிடம் ஒரு சுவாரஸ்யமான சர்வே ஒன்றினை எடுத்தோம்.. அதில், "அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தினால் சரியாக இருக்கும்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "முதல்வர் எடப்பாடியார்தான் கரெக்ட்" என்ற ஆப்ஷனுக்கு 23.23 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். "இல்லை, ஓபிஎஸ்தான் சரி" என்ற ஆப்ஷனுக்கு 13.13 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

சசிகலா

சசிகலா

அதேபோல, "செல்லூர் ராஜு பெஸ்ட்" என்பதற்கு 15.15 சதவீதம் பேரும், "அதிமுக, அமமுக இணைந்தால் சசிகலா" என்ற ஆப்ஷனுக்கு 10.1. சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "வேறு யாராவது நிறுத்தலாமே" என்ற ஆப்ஷனுக்கு 4.04 சதவீதத்தினரும், "யாரை நிறுத்தினாலும் வெல்லணுமே" என்ற ஆப்ஷனுக்கு 34.34 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

சர்வே

சர்வே

இந்த சர்வேயில் மிகப்பெரிய ஆச்சரியம், ஓபிஎஸ்-ஐ செல்லூர் ராஜு முந்தியதுதான்.. எதனால் என்று தெரியவில்லை... இதுவரை எல்லா பேச்சுகளிலுமே உளறியும், சர்ச்சைகளிலும் சிக்கி வந்த செல்லூர் ராஜுவுக்கு விஞ்ஞானி அமைச்சர் என்றே ஒரு பெயரையும் நெட்டிசன்கள் வைத்துள்ளனர்.. இன்னும் பல சிறப்பு பெயர்கள் உள்ள ஒரே அமைச்சர் செல்லூர் ராஜுதான். அதற்காகவே இவருக்கு இத்தனை பேர் வாக்களித்துள்ளனரா என்று வியப்பாக உள்ளது.

செல்வாக்கு

செல்வாக்கு

அதேபோல, எடப்பாடியாருக்குதான் ஆதரவு என்ற கருத்து பரவலாக எழுந்து வரும் நிலையில், யாரை நிறுத்தினாலும் வெல்லணுமே என்ற ஆப்ஷனுக்கு 34.34 சதவீதம் பேர் வாக்களித்துள்ளது அடுத்த ஷாக்தான்.. காரணம், எடப்பாடியார் செல்வாக்கு அதிகம் என்று தொண்டர்கள் தரப்பு சொல்கிறது.. ஓபிஎஸ் தரப்புதான் வலுவானது என்று அதிமுகவின் மூத்த, முக்கிய நிர்வாகிகள் சொல்லி வரும் நிலையில், "யாரை நிறுத்தினாலும் வெல்லணுமே" என்று மக்கள் மெஜாரிட்டியாக வாக்களித்துள்ளனர். எனினும், ஓபிஎஸ்-ஐ விட எடப்பாடியார் கை ஓங்கி இருப்பதை இந்த கணிப்பு ஓரளவு தெரியப்படுத்துகிறது.

English summary
Who is best CM candidate for AIADMk, an opinion from the readers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X