சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டான்லி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையை கொண்டு வந்தவர் ராமசாமி

Google Oneindia Tamil News

சென்னை: பத்ம விருதுகளுக்கு தேர்வான ராமசாமி வெங்கடசாமியின் சேவைகள் என்ன? யார் இந்த ராமசாமி?

குடியரசு தினவிழாவையொட்டி நேற்றைய தினம் பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவர்களுள் மருத்துவரும் பேராசிரியருமான ராமசாமி வெங்கடசாமியும் ஒருவர். யார் இவர் என்பதை பார்ப்போம்.

Who is Dr Ramasami Venkataswami?

பேராசிரியர் ராமசாமி வெங்கடசாமி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்பவர் ஆவார். இவர் 1951-ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு சேர்ந்தார். பின்னர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை படிப்புக்காக நாக்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தொடங்கினார். இவர் மருத்துவ அறிவியலின் தேசிய அகாதெமியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இவர் அப்பல்லோ பர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் மருத்துவம் செய்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டுக்கான சிறந்த பிளாஸ்டிக் சர்ஜியன் விருதை அப்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியிடம் பெற்றார்.

இவரது சேவையை பாராட்டி இவர் பத்மவிருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

English summary
Dr. Ramasami Venkataswami is a plastic surgeon who starts Department of Plastic surgery in Stanley hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X