சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடியில் உதயசூரியன் உதிக்க.. டஃப் வேட்பாளரை சல்லடை போட்டு தேடும் திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற அங்கு எந்த வேட்பாளரை நிறுத்துவது என்ற யோசனையில் திமுக தீவிரமாக உள்ளது. எடப்பாடி தொகுதியில் வென்றே ஆக வேண்டும் என்ற துடிப்பிலும் இருக்கிறது.

எடப்பாடி சட்டசபை தொகுதியானது சேலம் மாவட்டத்தை சேர்ந்ததாகும். இங்கு 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு திமுக இரு முறை மட்டுமே வென்றது. அது போல் பாமக 3 முறையும் காங்கிரஸ் இரு முறையும் வென்றுள்ளது.

அதிமுகதான் இந்த தொகுதியில் 6 முறை வென்றுள்ளது. இதனால் இந்த தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டையாக சிறந்து விளங்குகிறது.

எம்ஜிஆர் மறைவு

எம்ஜிஆர் மறைவு

1977 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த கணேசன் வென்றார். இதையடுத்து மேலும் 1989 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்து ஜெ அணி ஜா அணி என பிரிந்தது. அப்போது இந்தத் தொகுதியில் ஜெ அணி சார்பில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி வென்றார். பின்னர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமியே வென்றார்.

அதிமுகவில் இருந்து விலகிய நபர்

அதிமுகவில் இருந்து விலகிய நபர்

அடுத்தது 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவிலிருந்து விலகிய கணேசன் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு இரு முறை வென்றார். பின்னர் 2006இலும் பாமக சார்பில் பெண் வேட்பாளர் காவேரி வெற்றி பெற்றார். இதையடுத்து 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் எடப்பாடி பழனிச்சாமியே வென்றார்.

பாமக

பாமக

இந்த நிலையில் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த முறை நடந்த தேர்தலில் அதிமுகவின் பழனிச்சாமி 98,703 வாக்குகளையும் பாமகவின் அண்ணாதுரை 56,681 வாக்குகளையும் திமுக சார்பில் முருகேசன் 55,149 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பிரகாசமான வெற்றி

பிரகாசமான வெற்றி

எடப்பாடி பழனிச்சாமியும் தனது தொகுதி மக்களுக்கு நிறைய செய்துள்ளார். இதனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 3 முறை வென்ற பாமக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட பழனிச்சாமி விருப்ப மனு கொடுத்துள்ளதால் இந்த தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாமல் அதிமுகவே போட்டியிடும் என்றே தெரிகிறது.

திமுக

திமுக

அவ்வாறிருக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை தோற்கடிக்க திமுக ஆயத்தமாகி வருகிறது. இங்கு யாரை நிறுத்தினால் எடப்பாடியை தோற்கடிக்க முடியும் என்ற ஆலோசனையில் உள்ளது. எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதை திமுக கவுரவப் பிரச்சினையாகவே பார்க்கிறது. இந்த முறை திமுக சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்கலாமா என்ற ஆலோசனையில் திமுக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக

திமுக

அவ்வாறிருக்கையில் எடப்பாடியில் வெற்றி பெற திமுக ஆயத்தமாகி வருகிறது. இங்கு யாரை நிறுத்தினால் வெல்ல முடியும் என்ற ஆலோசனையில் உள்ளது. எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதை திமுக கவுரவப் பிரச்சினையாகவே பார்க்கிறது. இந்த முறை திமுக சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்கலாமா என்ற ஆலோசனையில் திமுக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Who is going to contest against Edappadi Palanisamy in his own constituency Edappadi, DMK is thinking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X