சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யார் இந்த கோமளவல்லி?... கூகுளில் வலைவீசி தேடிய நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சர்கார் சர்ச்சைக்கு பின்பு கோமளவள்ளி யார் என்பது குறித்து நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படம் கதை திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பிறகு தீபாவளிக்கு வெற்றிகரமாக ரிலீஸாகியது.

Who is Komalavalli? Netisans search in Google

இந்த படத்தில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கிய இலவசங்களை விமர்சிப்பதாகவும் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளியை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டியிருப்பதாகவும் ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சர்கார் படம் வெளியான அத்தனை திரையரங்குகள் முன்பும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பிறகு கோமளவள்ளி யார் என்ற தேடல் கூகுளை ஆக்கிரமித்துள்ளன.

கண் சிவக்கும் விஜய்.. ஹார்லிக்ஸ் பாட்டில் ரஜினிகாந்த்.. 'நமது அம்மா' நாளிதழ் கடும் விமர்சனம்கண் சிவக்கும் விஜய்.. ஹார்லிக்ஸ் பாட்டில் ரஜினிகாந்த்.. 'நமது அம்மா' நாளிதழ் கடும் விமர்சனம்

அதேபோல் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ன?, கோமளவள்ளியின் அர்த்தம் என்ன, உள்ளிட்ட பல கேள்விகளை கூகுள் தேடுதல் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இது தவிர சசிகலா, அதிமுக, வரலட்சுமி, 49P உள்ளிட்டவற்றை சர்கார் ரிலீசுக்கு பின்னர் பெரும்பாலானோர் தேடியுள்ளனர்.

தற்போது ஆளும் கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்த காட்சிகள் சர்கார் திரைப்படத்தில் நீக்கப்பட்டு விட்டன. இதையடுத்தும் நெட்டிசன்களின் தேடல் நின்றுவிடவில்லை.

English summary
After Sarkar release, Netisans searches Komalavalli in Google.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X