சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் காரை மறித்தாரா தனியரசு.. ஒரே நேரத்தில் 3 "துண்டு"?.. கொங்குமண்டலம் திமுகவுக்கு கிடைச்சிருமோ

இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைப்பாரா கொங்கு தனியரசு

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலின் காரை வழிமறித்து, அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தாராம் தனியரசு.. இதையடுத்து இந்த முறை அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு பலமாக ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் தீவிர எதிர்ப்பாளர் தனியரசு.. மிக மிக தீவிரமான சசிகலாவின் விசுவாசி.. ஆரம்பத்தில் ஜெ.மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர், அவரது மறைவுக்கு பின் சசிகலாவிடம் ஐக்கியமானார்.

2011 சட்டமன்ற தேர்தலில் தனியரசுவின் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அதிமுகவுடன் இணைந்தது.. இதையடுத்து, பரமத்திவேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, தனியரசு எம்எல்ஏவானார்.

காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் வேண்டும்... விலையேற்றத்தை தடுக்க இது தான் வழி -ஸ்டாலின் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் வேண்டும்... விலையேற்றத்தை தடுக்க இது தான் வழி -ஸ்டாலின்

 இரட்டை இலை

இரட்டை இலை

பிறகு 2016-ல் மறுபடியும் அதிமுக கூட்டணியிலேயே இணைந்து காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.. இந்த முறை அதிமுகவிலேயே இருப்பதா? அல்லது வேறு கட்சிக்கு போவதா? என்ற குழப்பத்தில் உள்ளாராம்.

 தனியரசு

தனியரசு

இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகிறது.. ஒன்று அதிமுக கூட்டணியில் தனியரசுவை இந்த முறை ஏற்பார்களா என்பது சந்தேகம்.. காரணம், முதல்வர் உட்பட சீனியர் அமைச்சர்கள் பலரும் கொங்கு மண்டலத்தில் ஸ்ட்ராங் ஆகிவிட்டனர்.. திமுகவை மறுபடியும் தோற்கடிக்கும் அளவுக்கு பலம் பொருந்தி கொங்குவை தங்கள் கையில் வைத்துள்ளனர்.

 பாஜக

பாஜக

அப்படி இருக்கும்போது, இந்த முறை தனியரசு எதற்கு என்று அதிமுகவில் யோசிக்கிறார்களாம்.. இது உண்மையா என்று தெரியாவிட்டாலும், வேறு எங்காவது கூட்டணிக்கு அழைப்பு வந்தால், அதிமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியுடன் கூட்டணி வைக்கவும் தயாராக இருக்கிறாராம். அதிமுக, தொடர்ந்து பாஜகவுடன் இணக்கமாக அதிமுக கூட்டணியிலேயே உள்ளதை தனியரசு ரசித்து வரவில்லை.. அதனாலேயே அதிமுக இல்லாமல் வேறு மாற்று என்ன என்று யோசனையில் இருக்கிறார்.

அமமுக

அமமுக

அந்த வகையில், அமமுக பெயரும் அடிபடுகிறது.. சசிகலாவின் விடுதலையும் விரைவில் நடப்பதால், தினகரன் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறலாம் என்றும் சொல்கிறார்கள்.. இப்படி அதிமுக, அமமுக என்ற ரீதியில் யூகங்கள் நடந்து வரும்போது, இதில் சம்பந்தமே இல்லாமல் திமுக என்ட்டர் ஆகிறது.

 திமுக

திமுக

சென்ற முறை திமுக தோற்க காரணமே கொங்கு மண்டல வாக்குகள் அக்கட்சிக்கு விழாததுதான்.. அந்த வகையில் இந்த முறை கொங்குவை வளைக்க படாத பட்டு வரும் நிலையில், பல்வேறு அதிரடிகளையும் கையில் எடுத்து வருகிறது.. அந்த வகையில், இதே பாஜக-அதிமுக கூட்டணியை காரணம் காட்டி, திமுக கூட்டணியில் இணையலாமா? உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொன்னாலும் போட்டியிடலாமே என்ற யோசனையிலும் தனியரசு இறங்கி வருகிறாராம்.

 யோசனை

யோசனை

ஆனால், இதெல்லாம் வெறும் யோசனையோடு மட்டும் நிற்கவில்லை போலும்.. தேவர் குருபூஜைக்கு வந்தபோது, முதல்வருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்... பசும்பொன்னில் டிடிவி தினகரன் வந்தபோது, அவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். தேவர் குருபூஜைக்கு ஸ்டாலின் காரில் வந்து கொண்டிருந்தபோதே, அவரை வழியில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்துள்ளார்.. ஆக, 3 பக்கமும் மரியாதை செய்து வைத்துள்ள நிலையில், அதிமுகவா? அமமுகவா? திமுகவா? எந்த பக்கம் தனியரசு என்பது இன்னும் கொஞ்சம் நாளில் தெரிந்து விடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

English summary
Who is Kongu Thaniyarasu going to ally with this time
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X