சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆண் யானைகளுடனும் சேர முடியாது.. பெண்ணுடனும் சேர முடியாமல்.. தனித்து விடப்படும் மக்னாவின் சோக கதை!

Google Oneindia Tamil News

சென்னை: யானைகளில் ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை கேள்விப்பட்டிருக்கும். அது என்ன மக்னா யானை? அந்த யானைகளுக்கு ஏன் அந்த பெயர் கிடைத்தது என்பதை பார்ப்போம்.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இந்த யானைகள் காணப்படும். மக்னா வகை யானைகளின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் மிக அதிகம்.

மக்னா யானை என்றால் மனிதர்களில் மூன்றாம் பாலித்தனவர் இருப்பது போல் யானைகளிலும் மக்னா மூன்றாம் பாலினம் என தவறான புரிதல் மக்கள் மனதில் உள்ளது. இதற்கு காரணம் காட்டு வாழ் மக்கள்தான்.

கூட்டத்தில்

கூட்டத்தில்

தந்தம் இல்லாத ஆண் யானையை மோல யானை அல்லது மோழ யானை என அழைப்பார்கள். மரமணு குறைப்பாட்டால் தந்தம் வளராமல் பிறக்கும் யானைகள், அதுவும் ஆசிய ஆண் யானைகள் மக்னா யானைகள் என அழைக்கப்படுகின்றன. பெண் யானைகள் பொதுவாக தந்தம் உள்ள ஆண் யானைகளையே விரும்பும். தந்தங்கள் இல்லாத யானை கூட்டத்தில் தாக்குப்பிடிக்காது.

வலிமை

வலிமை

தந்தம் என்பது வலிமையை குறிக்கிறது. கூட்டத்தில் சேர்ந்து வாழ முடியாததால் இந்த யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். மூர்க்கத்தனமாக மனிதர்களையும் விலங்குகளையும் தாக்கும் குணம் இந்த மக்னாக்களுக்கு உண்டு. தந்தங்கள் என்பது முன்வெட்டு பற்கள் என சொல்லப்பட்டாலும் இவைதான் எதிரிகளிடம் எதிர்த்து நிற்கும் தைரியத்தை யானைகளுக்கு கொடுக்கிறது.

பெண் யானைகள்

பெண் யானைகள்

மக்னா ஆண் யானைகளுக்கு தந்தம் இல்லாவிட்டாலும் அதை ஈடு செய்யக் கூடிய அளவிற்கு அதன் உடல் அமைப்பு வலிமையானதாக இருக்கும். பெண் யானைகளுடன் இனப்பெருக்கம் செய்ய ஆண் யானைகள் போட்டியிடும் போது மற்ற யானைகளுடன் சண்டையிட்டு தனது பலத்தை நிரூபிக்கும் யானைகளையே பெண் யானைகள் விரும்பும்.

மக்னாவுக்கு இல்லை

மக்னாவுக்கு இல்லை

இது போல் போட்டியில் வெற்றி பெற தந்தம் மிக முக்கியமானதாகும். அப்படி தந்தம் இல்லாத யானைகள் ஆண்மையற்றவை என கூறுவது முட்டாள்தனமாகும். தந்தமில்லாத ஒரு காரணத்தால் அவைகளை பெண் யானைகளுக்கு பிடிக்காது அவ்வளவுதான்!. இவை முகாம்களில் வைத்து வளர்த்தால் மனிதர்களுடன் இயல்பாக பழகும் என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

English summary
Who is Makna elephant? why it is not present in herd of elephants?. Female elephants dont like makna elephant as they are without horns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X