சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்?... பண்ருட்டி வேல்முருகன் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: எங்கள் உணர்வோடு விளையாடுவதை மத்திய மோடி அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தித் திணிப்பு!
தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு!
தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்?

who is Modi, to take away the rights of Tamils? Velmurugan question

எங்கள் உணர்வோடு விளையாடுவதை மத்திய மோடி அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும்!

மோசடித் தேர்தல் நடத்தி மீண்டும் பிரதமரான மோடியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடங்கிவிட்டது. கடும் எதிர்ப்புக்குள்ளானதால் கிடப்பில் போட்டிருந்த தனது மோசடிக் கல்விக் கொள்கையை இப்போது கொண்டு வருகிறார்.

சனாதன வர்ணாசிரம அடிப்படையிலான கல்விக் கொள்கை அது. மேல்சாதியினருக்கு மட்டுமே கல்வி என்ற மறைபொருளைக் கொண்ட கொள்கை. சூத்திரரையும் பஞ்சமரையும் கல்வியிலிருந்து தானாகவே வெளியேறவைக்கும் கொள்கை. இந்தியச் சமூகத்தின் ஒட்டுண்ணியாய் இருக்கும் ஒரு மைக்ரோ சிறுபான்மையருக்காகவே உருவாக்கப்பட்ட கொள்கைதான் அது. அந்த கல்விக் கொள்கையைத்தான், மோசடித் தேர்தலால் இடங்களைக் கூட்டிக்கொண்ட தைரியத்தில் கொண்டு வருகிறார் மோடி.

அந்த கல்விக் கொள்கையின் 484 பக்கங்களைக் கொண்ட புதிய வரைவை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு நேற்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் கையளித்தது. அந்த வரைவு, மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்கிறது. இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்த மாநிலத் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தோடு இந்தியையும் கற்பிக்கச் சொல்கிறது. இதை ஆறாம் வகுப்பிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறுகிறது.

இந்த கல்விக் கொள்கை வரைவு பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை, ஜூன் 30ந் தேதி வரை அதற்கான இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் பாஜக மோடி அரசு அறிவித்துள்ளது. மாநில உரிமையைப் பறிக்கும் இந்த அரதப் பழசான புராணகால புரட்டுக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் இது, மும்மொழித் திட்டம் என்ற பெயரில் அப்பட்டமான இந்தித் திணிப்பாகும்; தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைப்பதாகும்.

துப்பட்டா அணிந்தால் மட்டும்?.. அரசு ஊழியர்களுக்கு திடீர் ஆடைக் கட்டுப்பாடு.. வெடித்தது சர்ச்சை துப்பட்டா அணிந்தால் மட்டும்?.. அரசு ஊழியர்களுக்கு திடீர் ஆடைக் கட்டுப்பாடு.. வெடித்தது சர்ச்சை

அதேநேரம் தமிழர்களின் உரிமையைப் பறிக்க "மோடி யார்?" எனக் கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! எங்கள் உணர்வோடு விளையாடுவதை மத்திய மோடி அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Velmurugan question That who is Modi, to take away the rights of Tamils?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X