• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இவரைவிட பெஸ்ட் யாருமில்லை.. தமிழகத்தின் புது நிதியமைச்சர் பிடிஆர்.. மலைக்க வைத்த பின்னணி.. யார் இவர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் பழனிவேல் தியாகராஜன் நீண்ட அரசியல் பாரம்பரியமும், கல்வி அறிவும் கொண்ட அரசியல் தலைவர் ஆவார்!

  கடனில் தவிக்கும் தமிழகம்.. Stalin கொண்டுவந்த நிதியமைச்சர்.. யார் இந்த பிடிஆர் ?

  இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து.. என்ற திருக்குறளுக்கு ஏற்றபடி தமிழக முதல்வர் ஸ்டாலின் மிக முக்கியமான, துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். தமிழகத்தின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கும் நிலையில், கொரோனா கழுத்தை நெறிக்கும் இக்கட்டான சூழ்நிலையில்.. தமிழகத்தின் நிதித்துறையை கவனிக்க மாஸ்டர்மைண்ட் ஒருவரை களமிறக்கி உள்ளார் மு. க ஸ்டாலின்!

  மனைவி கையால் தாலி.. மாற்றி யோசித்த ஷர்துல்.. மோசமாக டிரோல் செய்யும் நெட்டிசன்கள்!மனைவி கையால் தாலி.. மாற்றி யோசித்த ஷர்துல்.. மோசமாக டிரோல் செய்யும் நெட்டிசன்கள்!

  நிதித்துறை என்ற முக்கியமான டாஸ்க்கை ஸ்டாலின் நம்பி கொடுத்திருக்கும் அந்த நபர் திமுக எம்எல்ஏ பிடிஆர் என்று அழைக்கப்படும் பழனிவேல் தியாகராஜன்!

  ஏன் முக்கியம்

  ஏன் முக்கியம்

  பிடிஆரை தமிழக நிதி அமைச்சராக அறிவித்தது பல விஷயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. பிடிஆருக்கு நிதித்துறையிலும், நிர்வாகத்திலும் இருக்கும் அனுபவமே இவர் கவனிக்கப்பட முக்கிய காரணம். அதிகம் படித்த மேதை + அரசியல் நுணுக்கம் தெரிந்த சிறந்த அரசியல்வாதி என்ற கலவைதான் பிடிஆர். முதலில் இவரின் அரசியல் பின்புலம் குறித்து பார்ப்போம்.

  அரசியல்

  அரசியல்

  இவரின் குடும்பமே அரசியல் ரீதியான மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட குடும்பம். இவரின் தாத்தா பி.டி ராஜன்தான் தமிழகத்தின் முதல்வராக நீதிக்கட்சி சார்பாக இருந்தார். இவரின் அப்பா பழனிவேல் ராஜன் தமிழக சட்டசபையையில் அமைச்சராக இருந்துள்ளார். நீதிக்கட்சி என்ற ஆழமரத்தின் விழுதில் இருந்து முளைத்து விருட்சம்தான் இந்த பிடிஆர்.

  திராவிட கொள்கை

  திராவிட கொள்கை

  திராவிட கொள்கையில் பிடித்தம் கொண்ட இவர் திமுகவில் மிக முக்கியமான தலைவராக தற்போது உருவெடுத்து இருக்கிறார். முக்கியமாக இவரின் ஆங்கில புலமை தேசிய அளவில் திமுகவிற்கு முக்கியமான பலமாக மாறியுள்ளது. அதோடு தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை மற்றும் மதுரைக்கு கீழே தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றிக்கு பிடிஆர் முக்கிய பங்கு வகித்தார்.

  பிடிஆர்

  பிடிஆர்

  திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரான பிடிஆர்தான் கடந்த லோக்சபா தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் திமுகவிற்காக சமூக வலைத்தளங்களில் தீவிர பிரச்சார திட்டங்களை வகுத்த தலைவர்களில் ஒருவர். திமுக டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த 3 வருடங்களில் மாபெரும் வளர்ச்சி அடைய பிடிஆரின் செயல் திட்டமும் காரணமாக இருந்தது.

  செயல்திட்டம்

  செயல்திட்டம்

  கோ பேக் மோடி தொடங்கி ஒன்றிணைவோம் வா என்று இணையத்தில் ஹிட் அடித்த எல்லா டிரெண்ட்கள், பிரச்சாரங்களுக்கும் பிடிஆர் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்தார். அரசியல் தாண்டி நிர்வாக ரீதியாகவும் பிடிஆர் அனுபவம் மிக்க நபர் ஆவார். கல்வி ரீதியாக இவர் கெமிக்கல் எஞ்சினியரிங், ஆபரேஷன் ரிசர்ச்சில் முதுகலை படிப்பு, Human Factors Engineering / Engineering Psychology துறையில் முனைவர் பட்டம், பின்னர் எம்பிஏ என்று இவர் அதிகம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  படிப்பு

  படிப்பு

  அதுவும் இவர் இந்த பட்டங்களை பெற்ற கல்வி நிறுவனங்களை பார்த்தால் கொஞ்சம் தலையே சுற்றிவிடும்,

  பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் - திருச்சி என்ஐடி

  பிஎச்டி, எம்எஸ் - அமெரிக்காவின் Buffalo பல்கலைக்கழகம். இங்கு அவ்வளவு எளிதாக இடம் கிடைக்காது.

  எம்பிஏ பட்டம் - அமெரிக்காவில் உள்ள MIT Sloan School of Management பல்கலைக்கழகம். இங்கு இடம் கிடைப்பது கடினம்.

  சிறப்பு

  சிறப்பு

  இதோடு 1990 களில் லேமன் பிரதர்ஸ் நிறுவனம், ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ், சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி போன்ற வங்கி, பொருளாதாரம் உள்ளிட்ட நிதி தொடர்பான துறைகளிலும் வேலைகளை பார்த்து இருக்கிறார். 2016ல் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்ற இவர், மீண்டும் 2021ல் அதே தொகுதியில் வென்று தற்போது தமிழக சட்டசபையில் நிதி அமைச்சராகி உள்ளார்.

  நிதித்துறை

  நிதித்துறை

  பிடிஆர் மீது நம்பிக்கை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் இந்த மிகப்பெரிய துறையை அவரிடம் கொடுத்துள்ளார். நிதித்துறையை, இவ்வளவு இக்கட்டான சூழலில் கவனிக்கும் திறன் படைத்த ஒரு சில தலைவர்களில் பிடிஆர் முக்கியமானவர்... இவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிடிஆரின் முதல் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  English summary
  Who is PTR? The DMK mastermind with the best track record is the new Tamilnadu Finance Minister.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X