சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹை-பை தர கூட ஆள் இல்லை! அவமானங்களுக்கு பேட்டால் பதிலடி தந்த ராஜத் படிதார்! யார் இந்த ஆர்சிபி புயல்?

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று பெங்களூர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ராஜத் படிதார் பல கஷ்டங்களை, ஏமாற்றங்களை கடந்து வந்து இருக்கிறார். சொந்த அணியாலேயே புறக்கணிக்கப்பட்ட இவர்.. பெங்களூர் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.

Recommended Video

    IPL 2022 Royal Challengers Bangalore மிரட்டல் ஆட்டம்! ஆடிப்போன LSG | #Cricket

    லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் அணி அதிரடியான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக வென்றது. லக்னோ அணியை வீழ்த்தியதன் மூலம் குவாலிபயர் 2வது போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூர் எதிர்கொள்ள இருக்கிறது.

    நேற்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 207/4 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய லக்னோ அணி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடியும் கூட, கடைசியில் செய்த சொதப்பல்களால் 20 ஓவரில் 193/6 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    பெட்ரோல் விலை உயர்ந்தது.. உபி தேர்தலின்போது நின்றது! மீண்டும் உயருது; ரிப்பீட்டு -ராஜஸ்தான் முதல்வர் பெட்ரோல் விலை உயர்ந்தது.. உபி தேர்தலின்போது நின்றது! மீண்டும் உயருது; ரிப்பீட்டு -ராஜஸ்தான் முதல்வர்

    பெங்களூர் வெற்றி

    பெங்களூர் வெற்றி

    நேற்று பெங்களூர் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ராஜத் படிதார். ராஜத் படிதார் நேற்று ஆடிய ஆட்டம்தான் பெங்களூர் அணியை வெற்றிபெற வைத்தது. லக்னோ அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இருந்த அந்த ஒற்றை புள்ளி ராஜத் படிதார்தான். நேற்று 54 பந்துகளில் இவர் 112 ரன்கள் எடுத்தார். நாட் அவுட் பேட்ஸ்மேனான இவர் 7 சிக்ஸ், 12 பவுண்டரி அடுத்து லக்னோ பவுலர்களை துவம்சம் செய்தார்.

    ராஜத் படிதார்

    ராஜத் படிதார்

    இவரின் ஐபிஎல் பயணமே மிகவும் உருக்கமானது ஆகும். ஆம் கடைசி கட்டத்தில் அணியில் எடுக்கப்பட்டு, இப்போது அணியை வெற்றிபெறவும் வைத்து இருக்கிறார். இந்திய அணியில் இதுவரை இடம்பெறாத ஒருவர் ஐபிஎல் ப்ளே ஆப் ஆட்டத்தில் சதம் அடிப்பது இதுவே முதல்முறை ஆகும். கடந்த சீசனில் இவர் பெங்களூர் அணிக்காக இவர் 4 போட்டிகளில் ஆடி 71 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு போட்டியில் மட்டுமே 31 ரன்கள் அதிகபட்சம் எடுத்தார்.

    ஐபிஎல் பயணம்

    ஐபிஎல் பயணம்

    அதன்பின் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதையடுத்து 2022 ஏலத்தில் பெங்களூர் அணி இவரையே எடுக்கவில்லை. அந்த தொடரில் இவரை யாரும் எடுக்காமல் அன் சோல்ட் ஆனார். இதனால் வீட்டில் முடங்கிய ராஜத் படிதார் தனது வாய்ப்பிற்காக காத்து இருந்தார். அவருக்கான வாய்ப்பு மீண்டும் பெங்களூர் அணியில் இருந்து வந்தது. பெங்களூர் அணியின் கர்நாடக வீரர் லுவனித் சிசோடியா காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.

     மாற்று வீரர்

    மாற்று வீரர்

    இதனால் அவருக்கு மாற்று வீரராக ராஜத் படிதார் களமிறக்கப்பட்டார். ஆனாலும் இவர் மீது பெங்களூர் அணி பெரிதாக நம்பிக்கை வைக்கவில்லை. லீக் ஆட்டத்தில் 14 போட்டிகளில் 6 போட்டியில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நேற்று அதிசயமாக வாய்ப்பு வழங்கப்பட்டதோடு அவர் ஒன் டவுன் களமிறக்கப்பட்டார். விளைவு அணிக்காக செஞ்சுரி அடித்து, அணியை பைனலுக்கு மிக அருகில் கொண்டு சென்றுள்ளார்.

    ராஜத் படிதார் பின்னணி

    ராஜத் படிதார் பின்னணி

    இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் மத்திய பிரதேச அணிக்காக பல உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். மாநில அணியில் இவரை ஹனுமான் என்றுதான் அழைக்கிறார்கள். ஆம் அந்த அளவிற்கு அணியை இவர் பல இருக்கிறார். 2015ல் இருந்து மத்திய பிரதேச அணிக்கு பல வெற்றிகரமான இன்னிங்ஸ் ஆடி உள்ளார். 28 வயதாகும் இவர் பிஸ்னஸ் மேன் குடும்பத்தை சேர்ந்தவர்.

    குடும்ப பிஸ்னஸ்

    குடும்ப பிஸ்னஸ்

    இவரின் குடும்பம் இவரை குடும்ப பிஸ்னஸ் பார்க்க கட்டாயப்படுத்திய நிலையில் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இவர் தொடர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி ஆடி வந்துள்ளார். குடும்ப எதிர்ப்பை மீறி கிரிக்கெட்டை காதலித்தவர் தற்போது தேசிய அளவில் வைரலாகி உள்ளார். கடந்த 4 வருடங்களில் ஏற்கனவே இவருக்கு காலில் காயம் ஏற்பட்டு, ஆபரேஷன் எல்லாம் செய்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் இவர் ஷமியை எதிர்கொண்ட விதம், தமிழ்நாட்டிற்கு எதிராக ராஞ்சி கோப்பை போட்டியில் 196 ரன்கள் எடுத்தது என்று பல கவனிக்கதக்க ஆட்டங்களை ஆடி உள்ளார்.

    லீக் ஆட்டம்

    லீக் ஆட்டம்

    முன்னதாக லீக் ஆட்டங்களில் குஜராத்தை பெங்களூர் வீழ்த்திய போது ராஜத் படிதார் பெவிலியனில் இருந்தார். பெங்களூர் வென்றதும் பலரும் மாறி மாறி ஹை பை கொடுத்தனர். ஆனால் ராஜத் படிதார் கையை தூக்கிக்கொண்டு நின்ற போதும் அவருக்கு ஹை பை கொடுக்க ஆள் இல்லை. அவரை பெங்களூர் அணியில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடைசியில் சோகமாக அவர் முகத்தை வைத்துக்கொண்டு சென்ற வீடியோ வைரல் ஆனது. இப்போது அதே ராஜத் படிதாருக்காக மொத்த பெங்களூர் அணியும் கை தட்டி சல்யூட் அடித்து உள்ளது... வெல்டன் ராஜத் படிதார்!

    English summary
    Who is Rajat Patidar? The man who made RCB win against Lucknow நேற்று பெங்களூர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ராஜத் படிதார் பல கஷ்டங்களை, ஏமாற்றங்களை கடந்து வந்து இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X