சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரியணையில் யார் ஏற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரு பெரும் ஜாம்பவான்களான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் சட்டசபை தேர்தலை தமிழகம் சந்திக்க போகிறது. இதனால் மக்களிடம் யாருக்கு செல்வாக்கு என்பதை அறிய இந்த தேர்தல் உதவும் என்பதால் இது மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

எங்க முதல்வர் இவங்கதான்.. மக்கள் மனதில் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன்... ஏபிபி கருத்துக்கணிப்பு எங்க முதல்வர் இவங்கதான்.. மக்கள் மனதில் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன்... ஏபிபி கருத்துக்கணிப்பு

அதிமுக

அதிமுக

தமிழகத்தை அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்துவரும் நிலையில் திராவிட கட்சிகள் இல்லாமல் வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் அளவிற்கு மாற்றம் வர வேண்டும் என அனைத்து கட்சியினரும் முன்வைத்து வருகிறார்கள். மாற்றம் வேண்டும் என கமல்ஹாசன், சரத்குமார், சீமான், சகாயம் உள்ளிட்டோர் முதல்வர் நாற்காலியை நோக்கி பயணம் செய்கிறார்கள்.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

அப்படி பார்க்கும் போது தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு முதல்வர் வேட்பாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி, திமுக கூட்டணியில் ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் வேட்பாளராக களம் இறங்குகிறார்கள்.

வேட்பாளர்

வேட்பாளர்

இவர்கள் இருவரும் ஊழலாட்சியை செய்தார்கள் என கூறி நல்லவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என தன்னை முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அது போல் லஞ்ச லாவண்யமற்ற அரசு அமைய வேண்டும் என கூறி ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் முதல்வராக வேண்டும் என இளைஞர்கள் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

சசிகலா

சசிகலா

அது போல் டிடிவி தினகரனும் அதிமுக ஆட்சி அமைய காரணமாக இருந்த சசிகலாவுக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்ற கருத்தை முன்வைத்து முதல்வர் வேட்பாளர் நாற்காலியை பிடிக்க ஆயத்தமாகி வருகிறார். அது போல் தேமுதிகவோ மதில் மேல் உள்ள பூனை போல் அதிமுக கூட்டணிக்கு போகலாமா இல்லை தனித்து போட்டியிடலாமா என்ற யோசனையில் உள்ளது.

நாற்காலி

நாற்காலி

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான், சகாயம், டிடிவி தினகரன், விஜயகாந்த் என முதல்வர் வேட்பாளர்கள் உள்ளனர். இது போதாகுறைக்கு நேற்று கட்சியை தொடங்கிய அர்ஜுனமூர்த்தி தான் ஆட்சிக்கு வந்தால் 4 துணை முதல்வர்களை நியமிப்பார் என தெரிவிக்கிறார். இப்படி ஆளாளுக்கு முதல்வன் படத்திற்கு கிளம்புவது போல் முதல்வர் நாற்காலியை நோக்கி கிளம்பினால் கடைசியில் யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
So many CM candidates are posing in Tamilnadu assembly election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X