சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரிவர்ஸ் கியர்".. ஆட்டத்தை தொடங்கிய பாஜக.. ஆட்டம் காணும் எடப்பாடி.. பெரிய "தலைவர்" இங்கே வர போறாராமே

எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்து பேசியுள்ளார் நாஞ்சில் சம்பத்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள முக்கிய தலைவர் ஒருவர், ஓபிஎஸ் பக்கம் விரைவில் வரப்போகிறார், எடப்பாடியை காலம் கைவிட்டுவிடும் என்று மூத்த தலைவரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், அக்கட்சி மீதான அக்கறை பிற கட்சி தலைவர்களுக்கும் சூழ்ந்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்தினால் கட்சியை காணாமல் போக செய்து கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

அந்தவகையில், தமிழகத்தின் மிகசிறந்த பேச்சாளரும், மூத்த தலைவருமான நாஞ்சில் சம்பத் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

66 ப்ளஸ் 63.. துள்ளி குதிக்கும் எடப்பாடி.. டெல்லியிலிருந்து திரும்பியதும்.. இன்றே அடுத்த மெகா மூவ்! 66 ப்ளஸ் 63.. துள்ளி குதிக்கும் எடப்பாடி.. டெல்லியிலிருந்து திரும்பியதும்.. இன்றே அடுத்த மெகா மூவ்!

 10 மாவட்டம்

10 மாவட்டம்

எம்பி தேர்தலில் 25 தொகுதிகளில் வெல்வோம் என்கிறது தமிழக பாஜக.. எப்படி வெற்றி பெற முடியும்? உள்ளாட்சி மன்ற தேர்தலில் 10 மாவட்டங்களில் கணக்கை தொடங்க முடியாத இந்த கும்பல், 25 தொகுதிகளில் எப்படி ஜெயிப்பார்கள்? அந்த கட்சியின் தேசிய தலைவர், காரைக்குடிக்கு வந்தபோதே வெட்டவெளி பொட்டலில் நின்று எய்ம்ஸ் பற்றி பேசினாரே, அதுதான் இவர்களின் வளர்ச்சிக்கு அடையாளம். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததும் செய்தியாளர்களை சந்தித்தபோது, எடப்பாடி பழனிசாமி போட்டோவை பார்த்தேன்.. செத்தவன் கையில் வெத்தலை தந்த மாதிரி நிற்கிறார் எடப்பாடி.. பேயறைந்த மாதிரி நிற்கிறார் வேலுமணி.. இஞ்சி தின்ன குரங்கு மாதிரி நிற்கிறார் சிவி சண்முகம்..

 மாறும் கணக்கு

மாறும் கணக்கு

2024 வரை தேர்தல் வரை இப்படியே இவங்களை மாறி மாறி டெல்லிக்கு அழைத்துபேசி, அதிமுகவை சின்னாபின்னமாக்கி, அந்த கட்சியின் உயிரை எடுத்துட்டுதான் பாஜக விடும்.. இது இவங்களுக்கு இன்னும் தெரியல.. நெடுஞ்சாலை துறையில் 4600 கோடி கொள்ளை வழக்கு இருக்கு.. வருது பின்னாடியே.. ஆனால், அதைவிட முக்கியமாக, அதிமுக தொண்டர்கள் புனிதமான கோயில் போல கருதிய கொடநாட்டில், 5 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள.. சொத்துக்கள் கொள்ளை போயுள்ளன.. அப்போதைய முதல்வராக இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.. அப்படின்னா அந்த கொலைக்கு பின்னால், முதல்வர் என்ற அதிகாரத்தில் இவர் பங்கு உள்ளது.. இதை நாஞ்சில் சம்பத் சொல்லவில்லை.. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் இப்படி பேசினார்..

 உயிர்பிச்சை

உயிர்பிச்சை

ஸ்டாலின் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று ஹைகோர்ட்டில் தடை வாங்கி கொண்டார் எடப்பாடி பழனிசாமி.. இப்போது தடை வாங்க முடியல.. ஏன்னா, ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார்.. எடப்பாடி இனி தப்பவே முடியாது.. வழக்கும் முடிவுக்கு வந்துவிட்டது.. ஆர்எஸ் பாரதி அதை அப்பட்டமாகவே சொல்லிவிட்டார்.. அதனால், உயிர் பிச்சை தாருங்கள் என்று டெல்லிக்கு ஓடினார்கள்.. ஆனால், அவர்களோ, கட்சியின் உயிரை எடுப்பார்களே தவிர, உயிர் பிச்சை தர மாட்டார்கள்.. திமுக அரசு இவர்கள் எடப்பாடி தரப்பு மீது நடவடிக்கை நிச்சயம் எடுக்கும்.

 புலன் விசாரணை

புலன் விசாரணை

ஆனால், வெறும் ரெய்டு மட்டும் நடக்கிறதே, ஏன் நடவடிக்கையை ஒன்றரை வருட காலமாக திமுக அரசு எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்.. அன்றைய திமுக ஆட்சியில், ஜெயலலிதா மீது கேஸ் பதிவு செய்தபோதுகூட, உடனே நடவடிக்கை எடுக்கவில்லையே.. அதுபோலத்தான் எடப்பாடி தரப்பினர் மீதும் உடனடியாக திடுதிப்பென்று நடவடிக்கை எடுக்க முடியாது.. புலன்விசாரணை அதிகாரி கையில்தான் வழக்கின் விசாரணை போக்கு உள்ளது..

 அமானுஷ்யம்

அமானுஷ்யம்

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு எல்லா அமைச்சர்களும், நிர்வாகிகளும், ஜானகி பக்கம், ஆர்எம் வீரப்பன் பக்கம்தான் இருந்தார்கள்.. ஜெயலலிதாவின் பக்கம் யாரும் இல்லை.. ஆனால் ஜெயலலிதாவின் துணிவையும், பாப்புலாரிட்டியையும், அவரது அமானுஷ்யமான நம்பிக்கையையும் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.. அப்படி ஒரு திறன் எடப்பாடியிடம் இருக்கிறதா? பார்த்துக்கிட்டே இருங்க, கேபி முனுசாமி ஓபிஎஸ்கிட்ட வர போகிறாராம்.. எடப்பாடியை நம்பி ஒருவரும் பயணிக்க முடியாது..

 39 தொகுதிகள்

39 தொகுதிகள்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை இவர் கொண்டாடவில்லை.. 50வது அதிமுக விழாவையும் கொண்டாடவில்லை.. அதிமுக என்ற வலிமை வாய்ந்த கட்சி, இந்தியாவின் 3வது பெரிய கட்சி இன்று சோர்ந்து போய்விட்டதற்கு யார் காரணம்? அதிமுக 39 தொகுதிகளிலும் தோற்று போக யார் காரணம்? உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரே ஒரு நகராட்சி, கூட வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்?

 23 + 13 சக்சஸ்

23 + 13 சக்சஸ்

வழக்கமாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி தான் வெல்லும் என்பது நியதி.. ஆனால் அதை நிர்மூலமாக்கி அதிமுகவின் 23 இடங்களில், 13 இடங்களை தன்வசம் வைத்தது திமுக.. அதனால், அன்றைக்கே எடப்பாடி பழனிசாமி பதவி விலகியிருக்கணும்.. அதிமுகவை வழிநடத்த இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? மின்கட்டண உயர்வை பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.. உதய் திட்டத்துக்கு ஆதரவு தந்தபோதே முதல் குற்றவாளி எடப்பாடிதான் என்றாகிவிட்டது..

பண்ருட்டி

பண்ருட்டி

"தலைமை தாங்குகிறவர்களுக்கு தாய்மை பண்பு இருக்க வேண்டும்" என்று பண்ருட்டி ராமச்சந்திரனே சொல்லிட்டார்.. பண்ருட்டி சாதாரண நபர் கிடையாது.. அரசியல் சாணக்கியன்.. அண்ணா பேசிய பேச்சை தமிழில் வெளியிட்டவர்.. எல்லாவற்றையும் அறிந்த ஒரு சித்தனாக காட்சி தருகிறார் பண்ருட்டி.. அவரை ஒரு கிளைக்கழக செயலாளராக சுருக்கி பார்ப்பது எடப்பாடி பழனிசாமி பழனிசாமியின் அறியாமையில் உளறல்.. அதிமுகவுக்கு சசிகலா தலைமை தாங்கினால் மட்டுமே அந்த கட்சி உயிர் பிழைக்கும்.. மற்றபடி, எடப்பாடி பழனிசாமியை காலம் சும்மா விடாது.. நிச்சயம் காலமே அவரை கைவிட்டுவிடும்.. பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

English summary
who is that AIADMK Senior leader and what did Nanjil Sampath say about Edapadi palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X