India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடுகடுத்த ஸ்டாலின்.. "அடிமைகள்" + டி.ஆர் பாலுவை கேளுங்க.. சிக்கலில் 2 புள்ளிகள்?.. தடதடக்கும் கோட்டை

Google Oneindia Tamil News

சென்னை: நாலாபக்கமும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கல்கள் கூடி வரும் நிலையில், திமுகவுக்கு உள்ளிருந்தே சில சீனியர்களால் தர்மசங்கடங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது..!

திமுக என்ன செய்தாலும் அதை விமர்சிக்க அதிமுக காத்திருக்கிறதோ இல்லையோ, பாஜக எந்நேரமும் ரெடியாகவே உள்ளது.

கண்டனம், விமர்சனங்கள் மட்டுமல்லாமல், போராட்டம், முற்றுகை என அடுத்த லெவலுக்கும் தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறது தமிழக பாஜக.

"டி.ஆர். பாலுதான் மெயின்".. போட்டு கொடுத்த ஆர்.எஸ். பாரதி.. அதிர்ந்து போன அறிவாலயம்.. என்னாச்சு!

 திணறல் திமுக

திணறல் திமுக

இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது, மற்றும் சென்னையில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலைகள் இரண்டுமே திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டன.. எடப்பாடி பழனிசாமி ஒருநாளைக்கு ஒரு அறிக்கையாவது விடுத்து, திமுகவை திணறடித்து வருகிறார்.. திமுகவை டேமேஜ் செய்வதையே முக்கிய குறிக்கோளாக பாஜகவும் களமிறங்கி உள்ளது.

 சீனியர்கள்

சீனியர்கள்

இப்படிப்பட்ட சூழலில்தான் திமுகவுக்குள்ளேயே சர்ச்சைகள் கிளம்பயபடியே உள்ளன.. கவுன்சிலர்களால் சர்ச்சை, மா.செ.க்களால் சர்ச்சை என ஆரம்பித்து திமுக சீனியர்களாலேயே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழல் வந்துள்ளது.. திமுக ஆட்சி ஆரம்பித்த சில மாதங்களில், இப்படித்தான் சீனியர் அமைச்சர்கள் மீது புகார்கள் வந்தன.. குறிப்பாக வடமாவட்ட அமைச்சர்கள் மீது அறிவாலயம் வரை புகார்கள் குவிந்துவிட்டன.. இவர்களின் துறைகளை மாற்றக்கோரியும் வேண்டுகோள்கள் பறந்தன.. எனினும், முதல்வர் ஸ்டாலின் பொறுமையை கடைப்பிடித்தார். இப்போது மீண்டும் சர்ச்சைகள் வேறு தலைவர்கள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 பொன்முடி சமாதானம்

பொன்முடி சமாதானம்

2 நாளைக்கு முன்பு, அமைச்சர் கேஎன் நேரு பேசியது கோட்டை வரை பறந்ததாக செய்திகள் பரபரத்தன.. அதாவது, திருச்சி திமுக ஓராண்டு சாதனை கூட்டத்தில் நேரு பேசியபோது, ''நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்பவும் நல்லவர்கள்.. இனி பொன்முடியின் அடிமை புகழேந்தி எம்எல்ஏ பேசுவார் என்றார்.. தங்களை அமைச்சர் நேரு, "அடிமைகள்" என்று பொதுமேடையில் சொன்னதை கேட்டு, திமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர்... திமுக மாவட்ட நிர்வாகிகளும் நேருவின் பேச்சை கேட்டு ஷாக் ஆகினர்.

 சமாளித்த பொன்முடி

சமாளித்த பொன்முடி

இதனை உணர்ந்த அமைச்சர் பொன்முடி, "நேரு எப்போதும் இப்படி தான்.. ஆனால் என்னை பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை என்று கூறிய பொன்முடி, 'அன்புக்கு நான் அடிமை...' என்ற எம்ஜிஆர் பாடலை பாடி அசத்தியதுடன், அந்த நிலைமையை சமாளித்தார்.. பொன்முடியின் இந்த சாமர்த்திய பேச்சுக்கு, எம்எல்ஏக்கள் பாராட்டு தெரிவித்தனர்.. அதேசமயம் நேரு மீதான தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

 எஜமான புத்தி

எஜமான புத்தி

"நேருவுக்கு இன்னும் எஜமான புத்தி மாறவில்லை. 10, 15 வருடங்களுக்கு முன்பு இப்படி பேசுவது அவரது இயல்பாக இருக்கலாம். அப்படியே இப்பவும் இருப்பது சரி கிடையாது.. இதே இயல்பு தொடர்ந்தால் எம்எல்ஏக்கள் கோபப்பட்டுவிட்டால் விஷயம் வேறு மாதிரி போய்விடும்... இதை எப்படியாவது தலைவர் காதுக்கு இதை நீங்கள் தான் கொண்டு போகனும்" என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பொன்முடியும் இது குறித்து ஸ்டாலினை தொடர்புகொண்டு எம்எல்ஏக்களின் கோபத்தை சொல்லி உள்ளார். ஆனாலும், காமெடி என்ற பெயரில் சொந்த கட்சிக்காரர்களே அதிருப்தி அடையும்படியா பேசுவது? கேஎன் நேரு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

 கோட்டை வரை புகார்

கோட்டை வரை புகார்

அதுபோல, ஒரு சீனியர் என்பதையும் மறந்து, டிஆர்பாலுவை ஆர்எஸ் பாரதி சீண்டிவிட்டது அவரது ஆதரவாளர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளதாம்.. ஏற்கனவே அமைச்சரவை மாற்றம், இலாகா மாற்றம் என்ற செய்திகள் சமீபகாலமாக உறுதிபட வந்து கொண்டிருக்கும் நிலையில், கேஎன் நேரு, ஆர்எஸ் பாரதி போன்ற சீனியர்கள் இப்படி வாயை கொடுத்து சிக்கி கொண்டுள்ளது பரபரப்பை கூட்டி உள்ளது.. அத்துடன் முதல்வர் ஸ்டாலின் இந்த புகார்கள், சர்ச்சைகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.. பார்ப்போம்..!

English summary
Who is that two DMK senior leaders and will mk Stalin take action against them ஆர்எஸ் பாரதி, கேஎன் நேரு இருவரும் மீண்டும் சர்ச்சையாக பேசி வம்பில் சிக்கி கொண்டுள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X