சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம்.. ஸ்டாலின் என டைம்ஸ் நவ் சர்வேயில் மக்கள் பளீச்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வரும் தேர்தலில் முதல்வராக யார் பதவியேற்க விருப்பம் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் என 38.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே மீண்டும் முதல்வராக வேண்டும் என 31 சதவீதம் பேர் மட்டுமே விரும்புவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா இல்லை திமுக கூட்டணி 10 ஆண்டுகளுக்கு கழித்து ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து டைம்ஸ் நவ் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டு கழித்து.. 2021 தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!10 ஆண்டு கழித்து.. 2021 தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!

அடுத்த முதல்வர்

அடுத்த முதல்வர்

அது போல் வரும் தேர்தலில் தமிழக முதல்வராக யார் வர விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 38.4 சதவீதம் பேர் ஸ்டாலினையே தேர்வு செய்துள்ளனர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 31 சதவீதம் பேரே வாக்களித்துள்ளனர். வி கே சசிகலாவுக்கு 3.9 சதவீதம் பேரும், கமல்ஹாசனுக்கு 7.4 சதவீதம் பேரும் ரஜினிகாந்திற்கு 4.3 சதவீதம் பேரும் முதல்வராக வர கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

கே எஸ் அழகிரிக்கு 1.7 சதவீதம்

கே எஸ் அழகிரிக்கு 1.7 சதவீதம்

அது போல் டாக்டர் ராமதாஸுக்கு 2.5 சதவீதம் பேரும், கே எஸ் அழகிரி 1.7 சதவீதம் பேரும், ஒபிஎஸ்ஸுக்கு 2.6 சதவீதம் பேரும் கருத்துக் கணிப்பில் வாக்களித்துள்ளனர். திமுக கூட்டணிக்கு 43.2 சதவீதம் வாக்கு சதவீதம் இருக்கும். இது கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் 3.8 சதவீதம் அதிகமாகும்.

அதிமுக கூட்டணிக்கு எத்தனை வாக்குகள்

அதிமுக கூட்டணிக்கு எத்தனை வாக்குகள்

அது போல் அதிமுக கூட்டணிக்கு 32.1 சதவீதம் வாக்குகளே கிடைக்கும். இது கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை காட்டிலும் 11.6 சதவீதம் குறைவாகும். தமிழக முதல்வரின் செயல்பாடுகளில் எத்தனை பேருக்கு திருப்தி இருந்தது என்பது குறித்து கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டுள்ளது.

திருப்தியா? இல்லையா?

திருப்தியா? இல்லையா?

அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டில் மிகவும் திருப்தி அடைவதாக 21.04 சதவீதம் பேரும் சில விஷயங்களில் திருப்தி அடைவதாக 33.38 சதவீதம் பேரும், முதல்வரின் செயல்பாட்டில் திருப்தியே இல்லை என 39.79 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளார்கள்.

English summary
Who is the most favoured CM of Tamilnadu? Survey says MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X