• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

யார் அந்த 3 பேர்.. திமுகவுக்கு செக் வைக்க "சீனியருக்கு" மெகா பதவி.. எடப்பாடி பழனிசாமியின் நச் பிளான்

Google Oneindia Tamil News

சென்னை: அவைத்தலைவர் பதவிக்கு 3 பேரை பரிசீலித்து வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. அந்த 3 பேர் யார் என்பது குறித்துதான் அதிமுகவில் விவாதங்களும் சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.

டெல்லிக்கு சென்றுள்ள எடப்பாடியும் பன்னீரும் சென்னை திரும்பியதும் அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான முக்கிய முடிவுகளை எடுக்கவிருக்கிறார்கள்.

வெறும் 3 மாதம்..! தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடிவெறும் 3 மாதம்..! தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி

சசிகலாவை இணைத்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறார்களா? அல்லது சசிகலாவை இணைக்காமல் இரட்டை தலைமையிலேயே அதிமுகவை நகர்த்திச் செல்ல தீர்மானிக்கிறார்களா? என்பது சென்னை திரும்பியதும் அடுத்தடுத்த நாட்களில் இந்த புதிர்களுக்கான விடை தெரிந்து விடும்.

மதுசூதனன்

மதுசூதனன்

இது ஒரு புறமிருக்க, அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் மிகவும் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அட்மிட்டாகியிருக்கிறார். முன்பு போல கட்சியின் தினசரி நடவடிக்கைகளை அவரால் கவனிக்க முடியாது என்பது எடப்பாடியின் தீர்க்கமான முடிவு... காரணம், அவைத்தலைவர் என்பது கட்சியின் ஆணிவேர் போன்ற பதவி. அதனால் அந்த பதவியில் ஆக்டிவ்வாக இருக்கும் ஒருவரை நியமிக்க முடிவு செய்கிறார்.

 சசிகலா அரசியல்

சசிகலா அரசியல்

அந்த வகையில், தனக்கு எதிராக மல்லுக்கட்டும் ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டு வர திட்டமிடுவதை ஜீரணிக்க முடியாத எடப்பாடி, சசிகலா-ஓபிஎஸ் இருவரையும் தனக்கு சாதகமாக எதிர்க்க வைக்க வேண்டுமெனில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை அவை தலைவர் பதவிக்கு கொண்டு வர வேண்டுமென திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில், எடப்பாடியின் மனசாட்சியாக இருந்து அவருக்கு ஆதரவான குரல் கொடுப்பவர்களாக கே.பி.முனுசாமி, கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம் ஆகிய மூன்று வன்னியர் தலைவர்களைத்தான் எடப்பாடி முக்கியமானவர்களாக கருதுகிறார்.

 செல்வாக்கு

செல்வாக்கு

கே.பி.முனுசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவைத்தலைவர் பதவிக்கு சண்முகம் அல்லது கே.பி.அன்பழகன் இருவரில் ஒருவரை கொண்டு வர திட்டமிட்டுள்ளார் எடப்பாடி. இதில் அன்பழகனுக்கு அதிக வாய்ப்பு என்கிறது அதிமுக தலைமைக்கழக வட்டாரம். காரணம், தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவில் செல்வாக்காகவும் அ.ம.மு.க.வின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனை , சமீபத்தில் திமுக கொத்திக்கொண்டு போய்விட்டது.

 பழனியப்பன்

பழனியப்பன்

அவருக்கு வெயிட்டான சில அசைண்மெண்டுகளையும் கொடுத்துள்ளது திமுக தலைமை. இந்த நிலையில், பழனியப்பனின் அரசியலை சமாளிக்க கே.பி.அன்பழகனை உயர்த்திப் பிடிப்பதுதான் சரியாக இருக்கும் என்று எடப்பாடி கூட்டிக்கழித்து கணக்குப் போடுவதுதான் காரணம் என்கிறார்கள். இதனையறிந்துள்ள ஓபிஎஸ் தரப்பு, வன்னியர் சமூகத்துக்கே முக்கிய பதவிகளைக் கொடுப்பதா ? என்று ஓபிஎஸ்சை இப்போதே உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Who is the next ADMK Presidium Chairman and whats OPS plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X