சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மச்சக்கார" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்!

கருத்து கணிப்பில் ரஜினிகாந்தை முந்திவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: "தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார்னு நீங்க ஊகிக்கிறீங்க?"-ன்னு ஒத்த கேள்வியை நம்ம வாசகர்களிடம் கேட்டோம்.. என்ன ஆச்சரியம்.. தினுசு தினுசான வாக்கு சதவீதங்கள் கட்சி தலைவர்களுக்கு விழுந்துள்ளது.. அதில் ஹைலைட்டே ரஜினியை எடப்பாடியார் மிஞ்சியதுதான்!

கொரோனா ஒருபக்கம் கிடந்தாலும் சட்டசபை தேர்தலுக்கான மும்முரங்களில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கிவிட்டன.. கூட்டணிக்கான மறைமுக வேலைகளையும் கையில் எடுத்து வருகின்றன.

ஒவ்வொரு கட்சிக்குள்ளும் வியூகங்கள் பட்டையை கிளப்பி கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. மேலும் விபி.துரைசாமி போன்றோர் வெளிப்படையாகவே தங்கள் கூட்டணி விருப்பத்தையும் தெரியப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக முதல்வர் குறித்து அதிமுகவுக்குள்ளேயே அமைச்சர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

சாக்லெட் பாய் Vs பிளேபாய்.. அவர் எதார்த்தமாக சொல்ல.. இவரும் பதார்த்தமாக பதில் தர.. தேவையா தலைவர்களேசாக்லெட் பாய் Vs பிளேபாய்.. அவர் எதார்த்தமாக சொல்ல.. இவரும் பதார்த்தமாக பதில் தர.. தேவையா தலைவர்களே

 அறிகுறிகள்

அறிகுறிகள்

ஆக மொத்தம் தேர்தலுக்கான அறிகுறிகள் ஓபனாகவே தென்பட ஆரம்பித்துவிட்டன.. இதை வைத்து நம் வாசர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம்.. "தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார்னு நீங்க ஊகிக்கிறீங்க?"என்று ஒரு கேள்வியை கேட்டோம்.. அதற்கு "எடப்பாடி பழனிசாமி" 16.27 சதவீத ஓட்டுக்களும், "முக ஸ்டாலினுக்கு" 39.67 சதவீத ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.

 ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அதேபோல "கமல்ஹாசன்" என்ற ஆப்ஷனுக்கு 5.08 சதவீதமும், "ரஜினிகாந்த்"-க்கு 8.08 சதவீதமும் வாக்குகள் கிடைத்திருக்கிறது. "சீமானுக்கு" 8.28 சதவீதமும், "எச்.ராஜா"வுக்கு 1.71 சதவீதமும் ஓட்டுக்கள் வந்துள்ளன. "வேற யாராச்சும்" என்ற அப்ஷனுக்கு 4.84 சதவீதம், "முதல்ல தேர்தல் நடக்கட்டும்" என்பதற்கு 16.08 சதவீத ஓட்டுக்களை வாசகர்கள் பதிவிட்டுள்ளனர்.

 கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

இந்த கருத்து கணிப்பு பொறுத்தவரை, ஸ்டாலினின் வாக்கு சதவீதம் என்பது, எதிர்பார்த்த ஒன்றுதான்.. அதனால் அதை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை.. ஆனால், 2 விஷயங்கள் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது.. ஒன்று, கொரோனா செயல்பாடுகளால் அதிமுக பலவீனமடைந்துவிட்டதாகவும், சரியாக கையாளவில்லை என்றும் திமுக தரப்பே சொல்லி வருகிறது.. ஆனால் அதிமுக 16.27 சதவீத ஓட்டுக்களை பெற்று மக்கள் மனசில் நின்றுள்ளது.

 திமுக - அதிமுக

திமுக - அதிமுக

இந்த 3 மாசமாகவே திமுக அதிமுகவை திணறடித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறது.. ஆனாலும் எடப்பாடியார் எதற்குமே அசரவில்லை.. திமுக எந்த பந்து போட்டாலும் அதை திருப்பி வாங்கி போட்டு வருகிறார்.. இந்த கொரோனாவை சமாளித்துவிட்டால், அதிமுகவின் ஓட்டுக்கள் இன்னும் ஏறுமுகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 தேசிய கட்சி

தேசிய கட்சி

மற்றொரு விஷயம், ரஜினிகாந்த்தை முந்திவிட்டார் எடப்பாடியார்.. ரஜினியின் புயலை கிளப்பிய சமீபத்திய பேட்டியில் அவர் குறி வைத்து பேசியது திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளைதான்.. அதுமட்டுமல்ல, மா.செ.க்களுடன் ரஜினி நடத்திய ஆலோசனையில் "எப்படி இரு தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லையோ, அதுபோலவே திமுக, அதிமுகவுடனும் கூட்டணி இல்லை.. இந்த 4 கட்சியுடன் கண்டிப்பா கூட்டணி இருக்காது. அதே நேரத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம்" என்று ரஜினி பேசியதாக தகவல்களும் வந்தன.

பரபரப்பு

பரபரப்பு

ஒருவேளை, 2 திராவிட கட்சிகளிடம் ரஜினிக்கு அதிருப்தியே இருந்தாலும், அவரது ஓட்டு சதவீதம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.. என்னதான் பரபரப்பை கிளப்பினாலும், சர்ச்சையை கிளப்பி பேட்டி தந்தாலும், புரட்சியை கண்ணில் பார்ப்பேன் என்று பிடிவாதம் பிடித்தாலும், நம்ம எடப்பாடியார் ரஜினியை அசால்ட்டாக முந்தி கொண்டு போய்விட்டார் என்பது ஆச்சரியம்.. அதிமுகவுக்கு இது ஹேப்பி நியூஸ்தான்.

சீமான்

சீமான்

இதில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து, சீமான் 3-வது வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது உண்மையிலேயே கவனிக்கத்தக்கது. இது அத்தனையும் சீமான் தம்பிகளின் உழைப்புக்கும், களப்பணிகளுக்கும்தான் போய் சேர வேண்டும்.. மக்களிடம் நெருங்கியே உள்ளதுதான் சீமானை மேலே கொண்டு வந்து கொண்டிருக்கிறது.. இதைதவிர பிற கட்சிகள் களப்பணியில் தீவிரமாக வேண்டும் என்பதையும் நம் வாசகர் கணிப்பு உணர்த்துகிறது. பார்க்கலாம் நாள் நெருங்க நெருங்க டிரண்ட் மாறுதா இல்லை.. இப்படியே தொடருதா என்று.

English summary
who is the next cm: edapadi palanisamy overtook Rajini in the polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X