தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகும் ஸ்டாலின்.. குவியும் ஆதரவு.. இந்தியா டுடே பரபர சர்வே!
தமிழகத்தில் அடுத்த முதல்வராக ஸ்டாலினுக்கே அதிக மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அடுத்த முதல்வராக ஸ்டாலினுக்கே அதிக மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி ஸ்டாலின் தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக மாறியுள்ளதாக தெரிகிறது.
இந்தியா டுடே தொலைக்காட்சியின், ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பும் மற்றும் பிரபல கருத்து கணிப்பு அமைப்பான பிஎஸ்இ சேர்ந்த கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது. மிகவும் துல்லியமாக இருக்கும் இந்த கணிப்பு தற்போது தமிழக தலைவர்கள் குறித்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார், தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் முதல்வர் யார் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முதல்வர்
தமிழகத்தில் அடுத்த முதல்வராக ஸ்டாலினுக்கே அதிக பேர் ஆதரவு அளித்துள்ளதாக இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஸ்டாலின் முதல்வராக மொத்தம் 43% பேர் ஆதரவு அளித்துள்ளனர். 2018 அக்டோபரில் 41% ஆதரவு அளித்து இருந்தனர். தற்போது அவருக்கான ஆதரவு அதிகம் ஆகியுள்ளது.
இரண்டாம் இடம் யாருக்கு
இரண்டாம் இடத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 10% ஆதரவு பெற்றுள்ளார். 2018 அக்டோபரில் 8% ஆதரவு பெற்று இருந்தார். இவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விட அதிக ஆதரவு பெற்றுள்ளார்.
மூன்று
மூன்றாம் இடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிடித்துள்ளார். ஆனால் இவர் 8% சதவிகித ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். சென்ற 2018 அக்டோபரில் இவருக்கு 10% ஆதரவு இருந்தது. தற்போது அது குறைந்து உள்ளது.
மற்றவர்களுக்கு எப்படி
அன்புமணி ராமதாஸ் 9% ஆதரவு பெற்றுள்ளார். 2018 அக்டோபரில் 7% ஆதரவு பெற்று இருந்தார். ஆனால் டிடிவி தினகரன் இதில் மிகவும் பின்தங்கியுள்ளார். இவர் முதல்வராக 8% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். 2018 அக்டோபரில் 6% ஆதரவு பெற்று இருந்தார்.
ரஜினி மற்றவர்கள்
மாறாக நடிகர் ராஜினிகாந்த் பெற்று வந்த ஆதரவு குறைந்துள்ளது. ரஜினி 5% ஆதரவு பெற்றுள்ளார். 2018 அக்டோபரில் 6% ஆதரவு பெற்று இருந்தார். ரஜினியை விட கமலுக்கு அதிக ஆதரவு உள்ளது. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5% ஆதரவு பெற்றுள்ளார். 2018 அக்டோபரில் 6% ஆதரவு பெற்று இருந்தார்.
ஸ்டாலின் விஸ்வரூபம்
இந்த சர்வே மூலம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கான ஆதரவு அதிகரித்து வருவது தெளிவாகி உள்ளது. ஆச்சர்யமாக கமல்ஹாசன் இரண்டாம் இடத்தை பிடித்ததோடு தொடர்ந்து மக்கள் ஆதரவோடு முன்னேறி வருகிறார். இதனால் ஸ்டாலின் தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக மாறியுள்ளதாக தெரிகிறது. இந்த சர்வே 2019 லோக் சபா தேர்தலிலும் நடக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.