• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ரிசல்ட்".. கியரை மாற்ற தயாராகிறதா அதிமுக.. இருவரில் "அவர்" யார்.. வட்டமடிக்கும் எதிர்பார்ப்புகள்!

|

சென்னை: இன்னும் ரிசல்ட் வரவே இல்லை.. அதற்குள் மே-2 பிறகு நடக்க போகும் நிகழ்வுகள் குறித்த எண்ண ஓட்டங்களும், சந்தேகங்களும், மனக்கணக்குகளும் தமிழக அரசியலில் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.. அப்படித்தான் ஒரு விஷயம் கிளம்பி உள்ளது.

திமுகவே அடுத்து ஆட்சி அமைக்கும் என்ற வலுவான கணிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.. இதையொட்டி அதிகாரிகள், அமைச்சர்கள் லிஸ்ட் ரெடியாகி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம் அதிமுக தலைமை தன்னுடைய நம்பிக்கையை இழக்காமல் உள்ளது.. எப்படியும் 130 இடங்களை பிடித்தே தீருவோம் என்றும், அடுத்து ஹாட்ரிக் ஆட்சிதான் என்றும் மனக்கணக்கு போட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.

சென்னையில் கொட்டித்தீர்க்கும் கோடை மழை இன்னும் 3 மணி நேரத்துக்கு என்ஜாய் பண்ணப்போறீங்களாம் சென்னையில் கொட்டித்தீர்க்கும் கோடை மழை இன்னும் 3 மணி நேரத்துக்கு என்ஜாய் பண்ணப்போறீங்களாம்

 நம்பிக்கை

நம்பிக்கை

ஆனால், பல அமைச்சர்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களாம்.. அதாவது முதல்வரிடம் இருக்கும் நம்பிக்கைகூட, மற்றவர்களுக்கு இல்லை என்பதே தற்போதைய எண்ண ஓட்டமாக இருக்கிறது. இந்நிலையில், இன்னொரு கணக்கு ஆரம்பமாகி உள்ளது.. அதாவது, திமுக ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில், யார் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார்கள்? அதிமுகவா?

 இரட்டை தலைமை

இரட்டை தலைமை

அப்படியென்றால் அதிமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர்கள்? ஏற்கனவே இரட்டை தலைமை விவகாரம் ஓடிக் கொண்டிருக்கும் நிலைமையில், எதிர்க்கட்சி தலைவராக இருக்க போவது யார்? அச்சமயம் கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கும் என்பது போன்ற சந்தேகங்களையும் அதுகுறித்து அனுமானங்களையும் கிளப்ப தொடங்கிவிட்டனர். இதுகுறித்து நாம் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் நமக்கு யூகத்தின் அடிப்படையில் சொன்னதாவது:

 எடப்பாடியார்

எடப்பாடியார்

"வழக்கமாக 40 முதல் 60 சீட் வரை ஜெயித்து விட்டாலே, யாராக இருந்தாலும் அவர்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுவிடுவார்கள்.. அந்த வகையில் எப்படியும் அதிமுகவின் கையே ஓங்கி இருக்கும்.. எனினும், ஓபிஎஸ் - இபிஎஸ் என்ற அடிப்படையில் பார்த்தால், தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி ஆஹா ஓஹோன்னு இல்லை என்கிறார்கள்.. ஓபிஎஸ் வெற்றி வாய்ப்பை இழந்தால், எடப்பாடியாரே எதிர்க்கட்சி தலைவராவார்..

 வேட்பாளர்

வேட்பாளர்

இப்போது அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதால், இதுவே பிரதானமாக நடக்க வாய்ப்பு. ஒருவேளை ஓபிஎஸ் வெற்றி பெற்றுவிட்டால், இந்த நிலைமை மாறலாம்.. இதே விவகாரத்தை இன்னொரு மாதிரியாகவும் பார்க்கலாம்.. யாருடைய ஆதரவாளர்கள் நிறைய வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கே அந்த பொறுப்பு வந்து சேரலாம்.. அதாவது, தென்மண்டலங்களைவிட, கொங்கு மண்டலத்தில் எடப்பாடியார் ஆதரவாளர்களுக்கு நிறைய வெற்றி கிடைத்துவிட்டால், எடப்பாடியாரே எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடும்.

தென்மண்டலம்

தென்மண்டலம்

ஆனால் இதிலும் ஓபிஎஸ், ஏதேனும் விவகாரத்தை கிளப்பலாம்.. தென்மண்டலங்களில் இந்த முறை நிறைய அதிருப்திகள் உள்ளது.. அதற்கு காரணம், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, சசிகலாவை ஒதுக்கி வைத்தல், அமமுகவுடன் கூட்டணி வைக்காதது போன்ற காரணங்களினால் அதிருப்திகள் பெருகி உள்ளது.. இதற்கெல்லாம் காரணம் எடப்பாடியார் என்றும், தன்னை கேட்காமலேயே அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாகவே அவர் எடுத்துவிட்டதால் ஓபிஎஸ் ஏற்கனவே அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது..

 பொறுப்பு

பொறுப்பு

எனவே, இந்த முறை தென்மண்டலங்களில் அதிமுக தன்னுடைய செல்வாக்கை இழந்தால், அதற்கு ஓபிஎஸ் முற்றிலும் பொறுப்பேற்க முடியாது.. எனவே, எப்படியும் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தையும் விட்டுத்தர மாட்டார். இப்போதே சமீபத்திய பல பேட்டிகளில் ஓபிஎஸ் சொல்லும்போது, கட்சி தன்னுடைய தலைமையின்கீழ்தான் இயங்குவதாகவே சொல்லி வருகிறார்.. எனவே ஆட்சி தற்போது முடிய உள்ள நிலையில், கட்சி தன்னுடையது என்றே அவர் சொல்ல முனையலாம்..

ஒரு யூகத்தில்தான் சொல்ல முடியுமே தவிர, முடியும்.. மற்றபடி இதெல்லாம் உட்கட்சி விவகாரம்.. ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம்".. என்று முடித்து கொண்டனர்.

English summary
Who is the next Leader of the Opposition in TN Assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X