சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 தமிழர்களின் விடுதலைக்கு தடையாக இருப்பது யார்… வைகோ கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார் என்று ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேரை விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்ததால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் ஆளுநர் எல்லை மீறி செயல்பட்டு இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

Who is the obstacle to the release of 7 Tamilans?: Vaiko question

இதற்கிடையே, 7 பேர் விடுதலை குறித்த கோரிக்கையை 6 மாதமாக கிடப்பில் போட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், ஆளுநர் விரைவில் கையெழுத்திட வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரி மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 7 பேர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.

Who is the obstacle to the release of 7 Tamilans?: Vaiko question

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், கி.வீரமணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

English summary
Vaiko question: Who is the obstacle to the release of 7 Tamilans?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X