• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1,2,3 கேம் ஸ்டார்ட்.. மூர்த்தியை விடுங்க.. யார் அந்த அதலை செந்தில்.. மதுரை திமுகவில் ரேஸ்: ஸ்பெஷல்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கான போட்டிகள் ஆரம்பமாகி உள்ளதால், மதுரை மாவட்டத்திலும் வாய்ப்பு கேட்டு சீனியர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
திமுகவில் அமைப்பு ரீதியான 15-வது பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கிளைக் கழகங்கள், தொடர்ந்து பேரூர், நகரம், பகுதி, மாநகர நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் நடந்தன.

மாவட்டச் செயலாளர்கள், அவைத்தலைவர், துணை செயலாளர்கள்,பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மனுதாக்கல் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

பட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்புபட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்பு

 போஸ்டிங்

போஸ்டிங்

அந்தவகையில் ஏராளமானோர் மாவட்ட செயலாளர் போஸ்டிங் கேட்டு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.. ஏற்கனவே உள்கட்சி பிரச்சனையில் சிக்கிவரும் மதுரை மாவட்டத்தில், இப்போது இது தொடர்பான போட்டிகளும் வெடித்து கிளம்பி விட்டன.. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் என்னதான் நடக்கிறது? களத்தில் உள்ளவர்கள் யார்? யாருக்கு மாவட்ட செயலாளர் பதவிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறித்தெல்லாம் நாம் நேரடியாக இறங்கி விசாரித்தோம்.. அந்தவகையில் நமக்கு கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்தான் இவை:

 சபாஷ் + மூர்த்தி

சபாஷ் + மூர்த்தி

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை, கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு என 4 பகுதிகளாக உள்ளன.. இதில் கிழக்கும் மேற்கும் புறநகர் பகுதிகளாக உள்ளன.. வடக்கு தெற்கு இரண்டையும் நகர்ப்பகுதிகள் ஒன்றாக கொண்டு வரப்பட்டுவிட்டது.. இந்த பகுதிகளுக்குமே பொறுப்பாளர்கள் உள்ளனர்.. எனினும், மாவட்ட செயலாளர் பதவியை கேட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் அழுத்தம் தர துவங்கி உள்ளனராம்.. கிழக்கு பகுதிக்கு அமைச்சர் மூர்த்தி, மேற்கு பகுதிக்கு மணிமாறன், மதுரை வடக்கு பகுதிக்கு பொன்முத்துராமலிங்கம், மதுரை தெற்கு பகுதிக்கு வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ தளபதி போன்றோர் பொறுப்பில் உள்ளனர்.

மாங்காய்கள்

மாங்காய்கள்

இதில், அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை, மிகக்குறுகிய காலத்திலேயே, கட்சி மேலிடத்தால் ஈர்க்கப்பட்டுவிட்டார்.. அத்துடன் முதல்வர் ஸ்டாலினின் நேரடியான ஆதரவையும் மூர்த்தி வாங்கிவிட்டார்.. மகன் திருமணத்தில் ஸ்டாலின் பேசியபோது, "மூர்த்தி ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடிப்பார்.. மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர முடிவானபோது, கோபக்காரராச்சே' என்று பயந்தேன். ஆனால், கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும்.. பொறுப்பேற்ற பின்பு பொறுமையின் சிகரமாகிவிட்டார்.. நான் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்" என்று கூறியதே அதற்கு சாட்சியாக விளங்கிவிட்டது.

 3 புள்ளிகள்

3 புள்ளிகள்

அதேபோல, மணிமாறனுக்கு தெற்கு பகுதியின் மா.செ. பதவி கிடைக்கலாம் என்கிறார்கள்.. முதலில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்ததாம்.. ஆனால், சமீபத்தில் இவரது அப்பா சேடப்பட்டி முத்தையா இறந்துவிட்டதால், மணிமாறனுக்கு மா.செ. பதவி வழங்க மேலிடம் நினைக்கிறதாம்.. அந்தவகையில் மதுரை நகர்ப்புற தொகுதிக்குதான், கடும் போட்டி 3 பேரிடம் எழுந்துள்ளது.. பொன்முத்துராமலிங்கம், தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு ஆகியோர் வாய்ப்பு கேட்டு வருகிறார்களாம்.. இவர்கள் 3 பேருமே கட்சியில் சீனியர்கள் என்றாலும், மதுரை திமுகவுக்காக உழைத்தவர்கள் என்றாலும், புது நபர் ஒருவருக்கு இந்த வாய்பை ஒதுக்கலாமா என்று மேலிடம் யோசித்து வருகிறதாம்.

 யாரது அதலை செந்தில்

யாரது அதலை செந்தில்

அந்தவகையில், அதலை செந்தில் என்பவர் பெயர் அடிபடுகிறது.. சீனியரான பொன்முத்துராமலிங்கத்தினால் திமுகவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் அதலை செந்தில்.. முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தர்.. திமுகவில், மாநில இளைஞர் அணியில் மாநில பொறுப்பில் இருக்கிறவர்.. எனவே, உதயநிதிக்கு நெருக்கமானவர்.. மற்றொருபக்கம், தொழில்முறை ரீதியாக, ஸ்டாலின் குடும்பத்துக்கும் அறிமுகமானவர்.. தேர்தலில் இறங்கி செலவு செய்யக்கூடிய அளவுக்கு பசையுள்ள நபர்.. அந்தவகையில் இவருக்கு போஸ்டிங் தரவே நிறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

 டிக் அடிக்கும் ஸ்டாலின்

டிக் அடிக்கும் ஸ்டாலின்

பொதுவாக, மதுரையை பொறுத்தவரை, நிதியமைச்சர் பிடிஆர் யாரை சொல்கிறாரோ, அவருக்குதான் நகர்ப்புறத்துக்கான போஸ்ட்டிங் ஒதுக்கப்படும்.. அதலை செந்திலை பொறுத்தவரை, பிடிஆரிடமும் ஆதரவை பெற்றவராம்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, சீனியர்கள் நிறைய பேர் மதுரையில் இருந்தாலும், இளைஞருக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதாலேயே இப்படி ஒரு யோசனை ஓடிக் கொண்டிருக்கிறதாம்.. ஒரு இளைஞரிடம் பொறுப்பை தருவதால், புதுரத்தம் பாய்வது போல மதுரை திமுகவுக்கு ஒரு பூஸ்ட் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறதாம். ஒருவேளை, இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அதை மற்ற சீனியர்கள் ஏற்று கொள்வார்களா? அதிருப்தி அடைவார்களா? அல்லது ஆதரவு தருவார்களா? என்று தெரியவில்லை.

 Dr சரவணன்

Dr சரவணன்

ஏற்கனவே, டாக்டர் சரவணனும் தனக்கு வடக்கு மா.செ. பதவி வேண்டும் என்றுதான் பிடிவாதமாக கேட்டுக் கொண்டிருந்தார்.. சரவணனுக்கு அந்த போஸ்டிங் தரக்கூடாது என்று மதுரை திமுகவின் சீனியர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.. அறிவாலயத்துக்கும் இது தொடர்பாக ஏகப்பட்ட அதிருப்தி லெட்டர்கள் பறந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.. இப்போது மா.செ. பதவிக்கான ரேஸ்கள் ஆரம்பமாகி உள்ளதால், இந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருமாறி உள்ளது.. எனினும், முதல்வர் ஸ்டாலின் யார் பெயரை டிக் செய்கிறோரோ, அவருக்குதான் பதவி போய் சேரும் என்பதே இறுதியான முடிவாக இருக்கும்.. அவர் யாரென்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

English summary
Who is this Adhalai Senthil and heavy Competition for Madurai DMK district secretary post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X