சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதெல்லாத்துக்கும் காரணம் அந்த லெட்டர்தான்.. "லீக்" செய்தது யார்.. அதை யாருமே சொல்லலையே!

போலி கடிதத்தை வெளியிட்டது யார் என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: யார் அந்த லெட்டரை சோஷியல் மீடியாவில் வெளியிட்டது என்று தெரியவில்லை.. ஆனால், ரஜினி விளக்கம் தந்த பிறகும் அந்த விவகாரம் தினம் தினம் குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்டுத்தியவாறே உள்ளது.

தன் பெயரில் வெளியான கடிதம் போலியானது என்று ரஜினி சொல்லிவிட்டார்.. ஆனால் உடல்நிலை பிரச்சனையை ஒப்புக் கொண்டார், அதேசமயம் கட்சி ஆரம்பிப்பது பற்றின சஸ்பென்ஸை இன்னமும் வைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த கடிதத்தின் பின்னணி என்ன, கடிதத்தை அனுப்பியது யார், அதன் தாக்கம் என்ன, என்பது குறித்து சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம். அவர்கள் சொன்னதன் சாராம்சம் இதுதான்:

ரஜினி

ரஜினி

"இந்த லெட்டர் பற்றி 2 விதமாக பேசப்படுகிறது.. ரஜினி தரப்பே இதை வெளியிடுவிட்டு பிறகு, அவரே வந்து விளக்கம் தந்திருக்கலாம்.. அல்லது எதிர்தரப்பில் யாராவது இந்த வேலையை அவருக்கு எதிராக பார்த்திருக்கலாம்.. ஆனால், ரஜினி என்ன சொல்லி இருக்க வேண்டுமென்றால், கட்சி ஆரம்பிப்பது கொரோனா முடிந்து அறிவிக்கப்படும் என்று மட்டும் சொல்லி இருக்கலாம்.. அதைவிட்டுட்டு லெட்டரில் உள்ள ஹெல்த் சமாச்சாரம் எல்லாமே உண்மைதான் என்று சொல்லி இருக்க கூடாது.

உடல்நிலை

உடல்நிலை

ரொம்ப நாளாகவே பாஜக ரஜினியை கட்சிக்கு வரும்படி அழைத்து கொண்டிருக்கவும்,தன் உடல்நிலையை சாக்காக வைத்து இப்படி ஒரு முடிவை சொல்லி உள்ளதார்.. அதுவும் இல்லாமல் அமமுகவின் வெற்றிவேல், எஸ்பிபி இறந்ததில் இருந்தே ரஜினி சற்று கலக்கத்துடனேயே இருக்கிறார்... அந்த அப்செட் அவருக்கு இன்னமும் இருக்கிறது.

தடுப்பூசி

தடுப்பூசி

எப்படியாவது நவம்பரில் கட்சியை ஆரம்பித்துவிட வேண்டும் என்றுதான் அவருக்கும் எண்ணம் இருந்திருக்கிறது.. அதற்காகத்தான், கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துவிடுமா என்றுகூட கேட்டிருக்கிறார். அப்படி மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தால், தைரியமாக சென்று அவர்களை சந்திக்கலாம் என்பதுதான் பிளான்.. ஆனால், உறுதியான நம்பிக்கையான தகவல் அது குறித்து அவருக்கு கிடைக்கவில்லை.

கசிய விட்டது யார்?

கசிய விட்டது யார்?

இன்னொன்று, இந்த லெட்டர் பெங்களூரில் இருந்து கசிய விட்டுள்ளதுபோல தெரிகிறது.. ஒரு அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்களில் இருந்துதான் அனுப்பப்பட்டுள்ளது. அது யார் என்பது தெரியவில்லை.. ஒருவேளை ரஜினி தரப்பே செய்திருக்கலாம், காரணம், மக்களின் பல்ஸ் என்ன, நிலவரம் என்ன? என்ன அரசியல் கட்சிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இப்படி ஒரு ஐடியா செய்திருக்கலாம்.. ஆனால் ரசிகர்களை தவிர்த்து யாருமே இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று தெரிந்ததும், ரஜினியே விளக்கம் தரும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

கூட்டம்

கூட்டம்

அதேசமயம் ரஜினியை இன்னும் நம்பும் கூட்டம் இருக்கிறது.. அவ்வளவு ஏன், ரஜினி எல்லாம் யாருக்கும் பயப்பட கூடியவர் இல்லை என்று ராஜேந்திர பாலாஜி இன்னமும் சொல்கிறார்.. பிப்ரவரியில் திடீரென வந்து கட்சியை ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் சொல்கிறார்கள்.. உண்மையிலேயே ரஜினி அறிவிப்பால் அதிகம் அப்செட் ஆகியுள்ளது பாஜகவும், கமலும்தான்.

அப்செட்

அப்செட்

ரஜினிகாக அப்பவே தூண்டில் போட்டு வைத்தவர் கமல்தான்.. யாருடனும் கூட்டணி வைக்க பிரியப்படாத கமல், ரஜினி வந்தால் அவருடன் சேரலாம் என்றிருந்தார்.. அதுவும் இல்லை என்றானதும் அப்செட் ஆகியிருக்கிறார் போல தெரிகிறது.. ஒருவேளை ரஜினியை வாய்ஸ் தர சொல்லி, அதன்மூலம் வேண்டுமானால் கமலுக்கு சில வாக்கு சதவீதம் கூடலாம்!" என்றனர்.

English summary
Fake Letter and Rajinikanths Political entry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X