சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அனந்தநாயகி" வெளியே ஓடினாங்களே.. காமராஜர் முகமே மாறிடுச்சே.. ஞாபகம் இருக்கா.. அட திருச்சி வேலுசாமி

திருச்சி சூர்யா விவகாரம் குறித்து திருச்சி வேலுசாமி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: கட்சிகளுக்குள் சலசலப்பும், சர்ச்சைகளும் நிலவினால், அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதை கண்டிக்க வேண்டும்.. தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்று சீனியர் தலைவர் திருச்சி வேலுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் வெளியான நிலையில், மிகுந்த பரபரப்பை அரசியல் களத்தில் அது உண்டுபண்ணியிருந்தது.

இதையடுத்து, திருச்சி சூர்யா எனக்கு தம்பி போன்றவர் என்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரண் செய்தியாளர்கள் முன்னிலையில் கூறி அதற்கு மேல் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

கணபதி ஐயர் “பேக்கரி”.. சூர்யா சிவா - டெய்சி அக்கா தம்பி “டீலிங்”.. வடிவேலு காமெடியை இழுத்த கஸ்தூரி கணபதி ஐயர் “பேக்கரி”.. சூர்யா சிவா - டெய்சி அக்கா தம்பி “டீலிங்”.. வடிவேலு காமெடியை இழுத்த கஸ்தூரி

 சூடு பறந்தது

சூடு பறந்தது

இவரை ஆபாசமாக பேசியதற்குதான், திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் வலியுறுத்தினார்... ஆனால் அவரையே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துவிட்ட நிலையில், கடைசியில் சண்டை போட்டுக் கொண்டவர்களே ராசியாகிவிட்டார்கள்... இதுகுறித்த விமர்சனங்களும், விவாதங்களும் சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. டிவி விவாதங்களிலும் இந்த டாப்பிக்தான் பிரதான இடத்தை பிடித்து வருகிறது..

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம்

நேற்றுகூட ஒரு பிரபல சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி இதை பற்றி கூறியிருந்தார். அப்போது, கடந்த கால தமிழக அரசியல் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டதுடன், அந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகளிடமும் காட்டமாக கண்டித்தார்.. அதன் சுருக்கம்தான் இது: "ஏங்க, உலகத்துல ஒரு அக்காவும் தம்பியும் இப்படிதான் போனில் பேசிக்குவாங்களா? இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு... எங்கள் கட்சியில் உள்ள எம்பி ஜோதிமணியை, ஒரு விவாத மேடையில் பாஜக மாநில துணை தலைவர் அன்று எப்படி பேசினார்கள் என்பதை எல்லாருமே பார்த்தாங்க..

ஈவிகேஎஸ்

ஈவிகேஎஸ்

காங்கிரஸ் கட்சியில், திருச்சி சூர்யா விவகாரம் போல் நடந்திருந்தால், இப்படி நாங்கள் வேடிக்கை பார்த்திருக்க மாட்டோம்.. தவறு என்றே அதை சொல்வோம்.. கண்டிப்போம்.. ஈவிகேஎஸ் அன்று பேசியதைகூட நாங்கள் தவறு என்றுதானே சொன்னோம்? ஆனால், உங்களை மாதிரி அக்கா - தம்பி பேசறாங்க என்று சொல்லி கேவலப்படுத்தவில்லை.. உங்கள் வீட்டில் அக்காவும் தம்பியும் இப்படித்தான் பேசுவாங்களா? எங்க வீட்டில் அப்படி பேசினால் வெட்டி பலி போட்டுடுவாங்க.. இப்படி அக்கா - தம்பி பேசுவது என்பது தமிழகத்துக்கு அவமானமில்லையா? பேசியதை ஏன் நியாயப்படுத்தறீங்க? ஏன் பொதுமைப்படுத்தி பார்க்க நினைக்கிறீங்க?

 பக்கத்து வீட்டு பையன்

பக்கத்து வீட்டு பையன்

எல்லா கட்சிகளிலும் இப்படி நடக்கத்தான் செய்யும்.. பூசல்கள் வரும்.. அப்போதெல்லாம் அந்த கட்சியில் உள்ள தலைவர்கள், உடனே அதில் தலையிட்டு இப்படி பேசக்கூடாது என்று கண்டிப்பார்கள்.. ஆனால், இங்கே அப்படி ஒருத்தரும் சூர்யாவை கண்டிக்கலையே? அதே கட்சியில் உள்ள காயத்ரியை மட்டும் ஏன் விசாரிக்காமல் சஸ்பெண்ட் செய்தார்கள்? திருச்சி சூர்யா, எங்க வீட்டுக்கு பக்கத்தில்தான் குடியிருந்தாங்க.. என் வீடும் அவங்க வீடும் பக்கத்து பக்கத்து வீடு.. இவர் பிறக்கிறபோதே எனக்கு தெரியும்..

 அனந்த நாயகி

அனந்த நாயகி

அதைப்போலவே, காயத்ரியின் ரகுராம் மாஸ்டரும் எனக்கு நெருங்கிய நண்பர்தான்.. எனக்கு வேண்டியவர்களின் 2 பிள்ளைங்களும் இதுல மாட்டிக்கிட்டு இருக்காங்க.. வேண்டாத கட்சியில் இருந்தாலும், இந்த பிள்ளைங்க ஜாக்கரதையா இருக்கணும்.. ஒருமுறை திமுக வெறும் 15 எம்எல்ஏக்களுடன் இருந்தபோது, அனந்தநாயகி என்பவர் மிகப்பெரிய தலைவராக இருந்தார்.. அவர் ஒரு பேச்சாளர், சட்டமன்ற உறுப்பினரும்கூட.. அவரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியை பற்றி ஒரு வார்த்தை சொல்லி விட்டார்..

 அனந்தநாயகி

அனந்தநாயகி

ஆபாசமாக எதுவும் சொல்லவில்லை.. எதிர்க்கட்சியில் இருந்த அண்ணாவின் மனைவியை பற்றி, சாதாரணமாக சொல்லிவிட்டார். அதுவரை சிரித்தபடி, அனந்தநாயகி பேச்சை கேட்டுக் கொண்டிருந்த முதல்வர் காமராஜர், அனந்தநாயகி அந்த வார்த்தையை சொன்னதும், உடனே கோபத்துடன் அனந்தநாயகியை வெளியே வரச்சொன்னார்.. அனந்தநாயகியும் வெளியே வந்தார்.

 காமராஜர்

காமராஜர்

"நீ இப்படி பேசலாமலா? உள்ளே வந்து அவரிடம் மன்னிப்பு கேள்" என்றார். அனந்தநாயகியும் அதன்படியே உள்ளே வந்து, அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டார். காங்கிரஸ் கட்சியில் இப்படி நடந்ததை தமிழகமே பார்த்தது.. இதை போல எல்லா கட்சிகளும் செய்ய வேண்டும்.. தவறு என்று தெரிந்தால், கண்டிக்க கூடிய இயல்பு, அந்தந்த கட்சி தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, அக்கா - தம்பி பேசிக் கொண்டார்கள் என்று மழுப்பலாக பேசினால், அது தவறை ஊக்கப்படுத்துவதாகிவிடும்" என்றார்.

English summary
Who was Anandanayaki and What was CM Kamaraj's advice, says Sr Leader Trichy Velusamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X