சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவின் முழுவெற்றிக்கு தடையாக இருந்தது யார்...? அறிவாலயத்தில் குவியும் புகார் கடிதங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    உள்ளாட்சி தேர்தல் விவகாரம் : அறிவாலயத்தில் புகார் கடிதங்கள்

    சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், முக்கியமான சில இடங்களில் தோல்வியை தழுவிய விவகாரம் மு.க.ஸ்டாலினை கொதிப்படையச் செய்துள்ளது.

    அரியலூர், கரூர், உள்ளிட்ட சில மாவட்டங்களில் மொத்தமாக அதிமுக வாரி சுருட்டிக்கொண்டதால் அந்த மாவட்ட திமுக செயலாளர்கள் மீது தலைமை கடுமையான அதிருப்தியில் உள்ளது.

    நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூரில் அதிமுகவை வெற்றி பெற வைத்து திமுகவை மக்கள் எப்படி தோற்கடித்தார்கள் என இன்னும் விவாதம் சென்றுகொண்டிருக்கிறதாம்.

     நடப்பது நல்லதாக தெரியவில்லை... பார்த்துகங்க... காங்.தலைவர்களிடம் கொந்தளித்த திமுக நடப்பது நல்லதாக தெரியவில்லை... பார்த்துகங்க... காங்.தலைவர்களிடம் கொந்தளித்த திமுக

    வாக்கு சதவீதம்

    வாக்கு சதவீதம்

    ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், அதிமுகவுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவீதத்தில் பெரியளவு மாற்றமில்லை. சில ஆயிரங்கள் வித்தியாசங்கள் தான் இருக்கின்றன. இது திமுக முகாமை புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

    திமுக அதிர்ச்சி

    திமுக அதிர்ச்சி

    கரூர், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக அடைந்த பின்னடைவுக்கு காரணம் சில அதிகாரிகள் தான் என அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். அதிமுகவுக்கு ஆதரவாக வேலை செய்த அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகள் தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

    பதில்

    பதில்

    மேலும், திமுக பின்னடைவை சந்தித்த மாவட்டச் செயலாளர்களிடம் வாக்கு எண்ணிக்கையின் போது செயல்பட்ட விதம் போதாது என கடுகடுத்துள்ளார் ஸ்டாலின். செந்தில்பாலாஜி , சிவசங்கர், போன்றோர் ஸ்டாலினின் குட்புக்கில் இருந்த நிலையில் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு அவர்கள் மீது தலைமையை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

    விளக்கம் அறிக்கை

    விளக்கம் அறிக்கை

    இதனிடையே திமுக பின்னடைவை சந்தித்த மாவட்டங்களில் இருந்து அண்ணா அறிவாலயத்துக்கு புகார் கடிதங்கள் குவிந்துள்ளன. அதனை படித்து குறிப்பெடுக்கும் பொறுப்பை வழக்கறிஞர் அணிக்கு கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

    English summary
    Who was the impediment to the full victory of dmk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X