சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசின் அடுத்த தலைமை செயலாளர் யார்?.. பரிசீலனையில் இந்த 5 பேர்.. ஆனால் வாய்ப்பு இவருக்குதான்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Girija Vaithiyanathan: அரசு ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் அதிரடி!- வீடியோ

    சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    தமிழக அரசின் 45-ஆவது தலைமை செயலாளராக இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன். இவர் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பொறுப்பேற்றார். இவர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றவர்களில் ஒருவராக இருந்தார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய முடிவுகளை எடுப்பதில் இவர் உறுதுணையாக இருந்தவர். இவரது உறவினர் எஸ்வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய போது கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாத்தவரே கிரிஜா வைத்தியநாதன்தான் என்ற சர்ச்சை எழுந்தது.

    கவலைக்கிடமான நிலையில் மேட்டூர், முல்லைப் பெரியாறு நீர்மட்டம்.. மழை வந்து காக்குமா? கவலைக்கிடமான நிலையில் மேட்டூர், முல்லைப் பெரியாறு நீர்மட்டம்.. மழை வந்து காக்குமா?

    இந்த மாதம் இறுதி

    இந்த மாதம் இறுதி

    பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அனைத்து திட்டங்களையும் எந்தவித சுணக்கமும் இல்லாமல் அவற்றை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு நல்கியவர். இந்த நிலையில் இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அதை அவர் ஏற்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடுத்த தமிழக தலைமை செயலாளரை நியமிப்பதில் தமிழக அரசு தீவிரமாகியுள்ளது.

    பெயர்கள்

    பெயர்கள்

    புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கான ரேசில் மொத்தம் 5 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ராஜீவ் ரஞ்சன், வணிகவரித் துறை செயலாளர் சோமநாதன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

    9 ஆண்டுகள் அனுபவம்

    9 ஆண்டுகள் அனுபவம்

    இந்த ஐவரில் அதிக அனுபவம் உள்ளவருக்கு புதிய தலைமை செயலாளர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் 9 ஆண்டுகளாக நிதித் துறை செயலாளராக உள்ள சண்முகத்துக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    English summary
    Who will be the Tamilnadu's next Chief Secretary? There are 5 in the race.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X